Smt.Vidya Jayaraman
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் மூலம் வெளிவந்து கொண்டிருந்த “ஆர்யதர்மம்” பத்திரிகையின் புத்தகம் 7 ஸஞ்சிகை 25 – ஆங்கிரஸ வருட, ஆடி மாதம் 6-ஆம் தேதி / 1932-வருடம் ஜூலை மாதம் 21-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட இதழில், “ப்ராசீனாசார்ய ஸம்பாவனா லேகமாலை” என்ற தலைப்பில் ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது. விவாஹம் முதலிய சுபகாரிய தருணங்களில் ஶ்ரீமடத்திற்கு பல இடங்களில் வசித்து வந்த க்ருஹஸ்தர்கள் வித்வான்கள் தொன்றுதொட்டு ஆசார்ய ஸ்வாமிகளுக்குச் செய்து வந்த மரியாதையைக் குறிப்பிடுகிறது.
இதில் காமகோடி பீடத்தின் 61-ஆவது பீடாதிபதிகளான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி (5) அவர்களின் மீது இயற்றப்பட்ட சில பத்யங்களும் அன்றைய வித்வான்கள் ப்ரமுகர்கள் பலர் பெயர்களும் காணப்பெறுகிறது. இந்த ஆவணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சரித்திர ரீதியாக மிகவும் முக்யமானது. இவருக்கு அடுத்த ஆசார்யரான ஶிவாஷ்டபதி எழுதிய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி (4) ஸ்வாமிகள் காலத்தில் தான் குதிரைக்காரர்கள் கலவரத்தால் கும்பகோணத்திற்கு இடம் பெயர்க்கப்பட்டது.
இந்த ஆவணத்தின் தேதியையும், அதில் சொல்லப்பட்ட ஆ்சார்யாள் யார் என்று அனுமானிக்க உதவும் விஷயங்கள் :
ஸம்வத்ஸர நாமா, மாதம், தேதி முதலியவை:
இங்கே விகாரி சைத்ர ஶுத்த தசமி என்று கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்கண்டவற்றுள் நமக்கு கிடைக்கும் தேதி 1719-1720 CE.
1659-1660 CE | 1719-1720 CE | 1779-1780 CE | 1839-1840 CE |
---|
ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் (5)
ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் என்ற பெயர் இந்த லேகமாலையில் காணப்படுகின்றது.
காமகோடி பீடத்தின் ஆசார்யர்களும் அவர்கள் ஸித்தி அடைந்த வருடத்தையும் கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம். இதிலிருந்து இவ்விவரம் 61-ஆவது பெரியவர்களான ஸ்ரீ ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (5) அவர்களைக் குறித்தது என்று அறியலாம். அவரைப் பற்றிய விவரம் புண்யஶ்லோகமஞ்ஜரியிலிருந்து.
अद्वैतात्मप्रकाशेन्द्राद् बाल्य आश्रितसंयमः ।
नारायण आदिपुरे लिल्येऽनशनतत्परः ।।६।।
महादेवेन्द्राख्यो गुरुवर इहाचार्यपदवीं समाश्चत्वारिंशद द्विशरदधिका बिभ्रद अतुलाम् ।
महायोगी साक्षात्कृतपरमहाः क्रोधनसमे तथा ज्येष्ठे शुक्ले नवमसुतिथौ सिद्धिम् अभजत् ।।७ ॥
-पुण्यश्लोकमञ्जरी
இவர் பூர்வாஶ்ரமப்பெயர் நாராயணன். மஹாயோகியான இவர் இளமையிலேயே ஸ்ரீ அத்வைதாத்ம ப்ரகாஶேந்த்ர குருவிடமிருந்து ஸந்யாஸம் பூண்டு, இலைகளை மட்டும் உண்ணும் தவவாழ்வை மேற்கொண்டு பெரும் யோகியாக வாழ்ந்தார். 4846 க்ரோதன வர்ஷம் ஜ்யேஷ்ட ஶுக்ல நவமி அன்று ஸித்தி அடைந்தார்.(CE 1745-Jun-08)
க்ரமம் | பெயர் | ஸித்தி |
---|---|---|
57 | ஸ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் | 1585 CE |
58 | ஸ்ரீ ஆத்மபோதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் | 1637 CE |
59 | ஸ்ரீ பகவந்நாம போதேந்த்ராள் | 1691 CE |
60 | ஸ்ரீ அத்வைதாத்ம ப்ரகாஶேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் | 1637 CE |
61 | ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (5) | 1745 CE |
62 | ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி (4) | 1783 CE |
ஆஶீர்வாத ஶதகத்தின் முன்னுரை செய்திகளுடன் ஒப்பு நோக்கு: #
காமகோடி கோஶஸ்தானத்தின் வெளியீடுகளில் ஒன்று ஆஶீர்வாத ஶதகம். இது கோவிந்த தீக்ஷிதரின் தௌ³ஹித்ரியின் (மகளின் மகள் ) மகனான வாஞ்சநாத மஹாகவி எழுதியது. இதன் முன்னுரையில் உள்ள செய்திகளை மேற்கண்ட ஸம்பாவனா லேகமாலை விஷயத்தில் ஒப்பு நோக்கலாம். வாஞ்சநாத மஹாகவி, மஹிஷஶதகம் இயற்றிய குட்டி கவி என்பவரின் வம்ஶஜர். (வாஞ்ச்யேஶ்வர கவி என்ற பெயர் கொண்ட குட்டிக்கவி பற்றி தெய்வத்தின் குரலின் நான்காம் பாகத்தில் “இரண்டு குட்டிகள்” என்று தொடங்கும் பகுதியில் காணலாம்.)
ஆஶீர்வாத சதகத்தின் ஸம்ஸ்க்ருத பூமிகையில் கிட்டத்தட்ட இதற்கு பூர்வகாலகட்டத்தில் இயற்றப்பட்ட வேறு சில லேகமாலைகள் பற்றி ஸ்ரீ குப்பா ஆஞ்சநேய ஶாஸ்த்ரிகள் கொடுக்கிறார். அவற்றின் மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
“காமகோடி மடத்தின் நூலகத்தில் கிடைத்த ஆவணங்களின்படி ஶாலிவாகன சகாப்தம் 1642 (1720 CE) விகாரி வருடம், காஞ்சி மடம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்வதற்கு முன்னர், காஞ்சிபுரத்தில் இருந்த ஆசார்யாள், அஹோபலர் என்ற பெயர் கொண்ட ஒரு யாஜ்ஞிகரை ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வரருக்கு செய்யப்படும் அக்ரஸம்பாவனையை ஸங்க்ரஹிப்பதற்கும் வழிவழியாக அது தொடர்வதற்கு அந்தந்த அக்ராஹாரங்களில் உள்ள ப்ரமுகர்களின் ஸம்மதி பத்திரிகையை பெறுவதற்குமாக சோழ தேசத்தில் உள்ள க்ராமங்களிற்கு அனுப்பினார். அந்த யாஜ்ஞிகரால் ஒவ்வொரு க்ராமத்திலும் பெறப்பட்ட ஸம்மதி பத்ரங்கள் அந்த ஓலையில் இருந்தன. அப்போது திருவிசைநல்லூர் அக்ரஹாரத்தில் வாழ்ந்தோர் பலர் பத்யங்களையும் இயற்றினர். அவர்களுள் முக்யமானவர்கள்:
- பல க்ரந்தங்களைச் செய்த ஸ்ரீதர வெங்கடேஶ்வரர் (இவர் தான் இங்கே ஸ்ரீயா வெங்கடேஶர் என்று குறிக்கப்படுகிறார்).
- ப்ரபல பண்டிதரான ராமசந்த்ர ஶாஸ்த்ரியின் மற்றும் காசியில் உள்ள லக்ஷ்மண ஶாஸ்த்ரி த்ரவிட் இவர்களின் பூர்வ புருஷரான வீரராகவ தீக்ஷிதர்.
- ஆசீர்வாத சதக க்ரந்தகர்த்தாவின் ப்ரபிதாமஹரான குட்டி கவி என்ற பெயர் கொண்ட வாஞ்சேஶ்வரர்
- கோவிந்ததீக்ஷிதரின் தௌ³ஹித்ரரான திருமலமகீ
- இந்த திருமலமகீ யுடைய மூத்த ஸஹோதரரான அய்யாவாரு மகீ மற்றும் அவருடைய புதல்வன் லக்ஷ்மீபதி. இதில் குட்டி கவி, திருமலமகீ, மற்றும் அவர் புதல்வரான லக்ஷ்மீபதி மூவரும் சேர்ந்து சில பத்யங்களை எழுதியுள்ளனர். அவற்றில் உள்ள ஶ்லோகங்கள் वृत्तिं शाश्वतिकीमशेषविदुषां पञ्चाग्रहारात्मना यश्चक्रेऽनुकवेरकन्यमयजद्यो द्वादशाहादिभिः |
पुत्रस्तस्य किलाय्यवारुमखिनो लक्ष्मीपतिः श्रीमहादेवेन्द्रस्य जगद्गुरोः प्रथमतः संमन्यते शासनम् ||
तिरुमलमखी तस्य भ्राताय्यवारुमखीशितुर्दुहितृतनयस्य श्रीगोविन्ददीक्षित मन्त्रिणाम् |
अपि च भगिनीपुत्रो वाञ्चेश्वरोऽपि तदाज्ञया सविनयमिमामग्रे स्वयं बहुमन्यते ||
இதன் மூலம் குட்டிகவி , திருமலமகீ, மற்றும் லக்ஷ்மீபதி இவர்கள் கோவிந்த தீக்ஷித மந்த்ரியின் தௌ³ஹித்ரர்கள் என்று அறிகிறோம்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் – இந்த பத்ரங்களில் உள்ள பத்யங்கள் ஆர்ய தர்மத்தில் கொடுக்கப்படவில்லை. ஆனால் அங்கே அவ்விதழின் ஆசிரியர் இது போன்ற எட்டு ப்ரதிகள் கிடைத்திருக்கின்றன என்கிறார்.
ஆர்யதர்மத்தில் கையெழுத்து இட்டோர் பெயர்கள் / மற்றும் விவரங்கள்:
1.ஸ்ரீமதப்பய்யதீக்ஷிதரின் “நப்தா” (பேரன்) மார்க்கஸஹாய தீக்ஷிதர் மற்றும் அவர் புத்ரரான ஹரிசங்கரர். இவர்கள் மஹாராஜபுர அக்ரஹார வாசிகள் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
ஸ்ரீமதப்பய்ய தீக்ஷிதரின் வம்சாவளியைப் பார்த்தால் மன்னார்குடி பெரியவாளின் ப்ரபிதாமஹரான ஒரு மார்க்கஸஹாயரை காண்கிறோம். அவருக்கு த்யாகராஜன் என்ற புதல்வரும் இருந்திருக்கார். (இவர் ஹரிசங்கரர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்). இவர் அப்பய்ய தீக்ஷிதரின் ப்ரணப்தா.
2.வேத கவி
இப்பெயர் க்ராந்தாக்ஷரத்தில் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். இவர் பதஞ்சலி சரிதம் எழுதிய ராமபத்ர தீக்ஷிதரின் மாணவர். இவர் தன் போஷகரான ஆனந்தராய மகியின் பெயரில் வித்யா பரிணயம் என்ற நாடகத்தை எழுதி இருக்கிறார். இந்நாடகம் முதலாம் ஶரபோஜியின் காலத்தில் எழுதப்பட்டுள்ளது (1711-1729). அந்நாடகம் தஞ்சை ஆனந்தவல்லி ஆலய விழாவில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இவர் மஹாராஜபுரம் என்ற அக்ரஹாரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
3.ஸ்ரீயாவெங்கடேஶ்வரர் – (ஸ்ரீ தர அய்யாவாள் – விளக்கம் மேலே. )
4.வேனுகொ³ண்ட³ நரஹரிஸோமயாஜி
ஶ்ஹஜி மன்னரின் காலத்தில் திருவிசைநல்லூரில் ஒரு அக்ரஹாரம் அமைத்து, அங்குள்ள ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர், ஸ்ரீதர அய்யாவாள் முதலிய ஏழு பண்டிதர்களை அழைத்து ஆஸ்திக தர்ஶன ஶாஸ்த்ரங்களைத் எளிய நடையில் தொகுத்து எழுதுமாறு பணித்தார். அவற்றுள் நரஹரி அத்வரி / ஸோமயாஜி என்ற பெயரும் காணப்படுகிறது.
5.கண்ட³ரமாணிக்யம்ʼ வைத்³யநாத²ர்
இப்பெயரில் வைத்யநாத தீக்ஷிதரின் சந்ததியினர் மற்றும் ராமபத்ர தீக்ஷிதர் வம்சத்தில் சிலர் இருந்துள்ளனர்.
கண்டரமாணிக்கம்:
இக்கிராமம் காமகோடி பீடத்தின் மீது பெருமதிப்பு கொண்ட பல வித்வான்களை அளித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக – பதஞ்சலி சரிதம், ராமகர்ண ரஸாயனம் ஆகியவற்றை எழுதிய ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர். இவரது பதஞ்சலிவிஜயத்தில் உள்ள ஶங்கரசரிதத்தில் காஞ்சிபுரத்தில் பகவத்பாதர்களின் ஸர்வஜ்ஞபீடாரோஹணம் இவ்வாறு குறிக்கப்படுகிறது.
गोविन्ददेशिकमुपास्य चिराय भक्त्या
तस्मिन्स्थिते निजमहिम्नि विदेहमुक्त्या
अद्वैतभाष्यमुप्कल्प्य दिशो विजित्य
काञ्चीपुरे स्थितिमवाप स शङ्करार्यः ||
அதே போல ஸ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதி சுவாமிகளிடம் கற்ற நல்லா தீக்ஷிதரும் இந்த கிராமத்தைச் சார்ந்தவர்.தன்னுடைய கிராமத்தின் சிறப்பை ஶ்ருங்காரஸர்வஸ்வபாணத்தில்,
जयति किल चोलमण्डलमण्डनमुदण्डपाण्डिताध्युषितम् ।
कण्डरमाणिक्यमिति ख्यातं महादग्रहारमाणिक्यम् ॥ ६ ॥
என்று வர்ணிக்கிறார். தன் குருவான ஸ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளைத் தன்னுடைய பரிமளம் என்ற அத்வைதரஸ மஞ்சரீ வ்யாக்யானத்தின் கடைசியில் குறிக்கிறார்.
इति श्रीकौशिककुलजलधिचन्द्र श्रीबालचन्द्रदीक्षिततनूभवस्य श्रीमत्परमहंसपरिव्राजकाचार्य- श्रीपरमशिवेन्द्रपाद-श्रीसदाशिव- ब्रह्मपूज्यपादानुग्रह-भाजनस्य श्रीनल्लाकवेः कृतिषु स्वकृताया अद्वैतरसमजर्या व्याख्या परिमलाख्या संपूर्णा ।।
அதே போல அவர்தம் சிஷ்யரான ஸ்ரீ ஸதாஶிவப்ரஹ்மேந்த்ரரரையும் தம் க்ரந்தங்களில் வணங்குகிறார்.
वेदान्तसूत्र-वृत्ति-प्रणयन-सुव्यक्त-नैज-पाण्डित्यम् | वन्दे अवधूत-मार्ग-प्रवर्तकं श्री-सदाशिव-ब्रह्म ||
(Preceptors of Advaita, C.Sivaramamurti)
இது தவிர ஸ்ம்ருதிமுக்தாபலம் இயற்றிய வைத்யநாத தீக்ஷிதர் மற்றும் அவர் மகனான ராமக்ருஷ்ண தீக்ஷிதர் (भिषगीशयज्वसूनुः என்று தன்னைப்பற்றி சொல்கிறார்). இவர்கள் அனைவரும் இந்த க்ராமத்தவர்கள். இது தவிர வேதாந்த பரிபாஷை எழுதிய தர்மராஜ அத்வரீந்த்ரர், அவர் மகனான ராமகிருஷ்ண யஜ்வா முதலியோர் இக்ராமத்தவர்கள்.
6.கோமல ராமநாத² ஶாஸ்த்ரி
இவர் ஷட்தர்ஶநீஸங்க்ரஹத்தின் ஒரு பாகத்தை இயற்றிய ராமநாதமகியாக இருக்கக்கூடும்.
7.அத³ம்ʼவார வேங்கடேஶ்வரஶாஸ்த்ரி
8.ஶ்ரீநிவாஸ ஶாஸ்த்ரி
ராமபத்ர தீக்ஷிதரின் சிஷ்யர் இப்பெயரில் ஒருவர் இருந்திருக்கிறார். ஸ்வரசித்தாந்த சந்திரிகா க்ரந்தகர்த்தா. இவரும் ஷட்தர்ஶநீஸங்க்ரஹத்தின் ஒரு பாகத்தை இயற்றியுள்ளார்.
9.நீலகண்ட² ஶாஸ்த்ரி – இவரைப்பற்றியும் இன்னும் சிலரைப்பற்றியும் வேறு விவரங்கள் இல்லை.
10.வித்³யா விலாஸ அன்னா திருமல தீ³க்ஷிதர் – இவர் பற்றிய விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
11.ராமக்ருʼஷ்ணஶாஸ்த்ரி
12.அட³யப்பலம்ʼ அண்ணா ஶாஸ்த்ரி
13.சட்³ட³கோ³பால ஶாஸ்த்ரி
14.ராஜகோ³பால ஶாஸ்த்ரி
- ஸ்வாமி தீ³க்ஷிதர்
ஆர்யதர்மத்தில் ப்ரசுரம் செய்யப்பட்ட லேகமாலை: #
(அங்கே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம், மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு)
ஆர்யர்களே! நமது குல பரம்பரையாக கல்யாண காலங்களில் ஸ்ரீமதாசார்யாளுக்கு செய்யப்பட்டுவரும் ஸம்பாவனையைப்பற்றின பண்டைய பத்ய-கத்யங்கள் அடங்கின ஏட்டுப் பிரதிகள் சில கிடைக்கிருக்கின்றன. அவ்வாக்கியங்கள் ஸாஹித்ய ரசமும் பக்திப்ரவாஹமும் அத்வைதாம்ருதமும் நிரம்பித் ததும்பி தற்காலத்தியவர்களுக்கும் ஆசார்யாளின் பக்தியையும், ஸம்ஸ்க்ருத மொழியின் பெருமையையும் படனமாத்திரத்திலேயே வெளியிடுகின்றன. அப்பிரதிகளில் கையொப்பமிட்ட மஹாநுபாவர்களின் பெயரைக் கவனிக்கும்போது நம்குலத்து முன்னோர்களின் ஸ்மரணத்தால் ஏற்படும் பெரும் பாக்யமும் உதிக்கிறது.
மஹாராஜபுரம், கண்டரமாணிக்கம், அடையப்பலம், திருவிசைநல்லூர், திருவாலங்காடு முதலான கிராமவாஸிகளான, வேதகவி, ஸ்ரீயாவெங்கடேச்வார், வைத்தியநாத தீக்ஷிதர், மார்க்கஸஹாய தீக்ஷிதர் முதலான மஹான்களின் பெயர் முதலானவை கிரந்த லிபியில் இருக்கின்றன. அவைகளை நாகரிலிபியில் எழுதி அதன் பொருளை தூரான்வயமிருந்தாலும் உள்ளபடியே எழுதத்தொடங்குகிறேன், இம்மாதிரியான ப்ராசீனலேகமாலைகள் இன்னும் கிடைக்குமானால் ஆர்யதர்மத்தின் வாயிலாக வெளிப்படுத்தும்படி மற்ற மஹா ஜனங்களையும் வெண்டிக்கொள்கிறேன். லேகமாலைகள் சிற்சில இடங்களில் எழுத்துக்கள் செல்லரித்ததை விட்டுவிட்டும் எழுதுகிறேன்.
स्वस्ति-श्रीमत्प्रशस्त-प्रथितगुणमणि-श्रेणिरत्नाकरेषु स्वर्गङ्गोद्यत्तरङ्ग-प्रकर-मद-गल-ग्राहि-वाग्गुम्भनेषु । स्वच्छन्द-स्वान्तरङ्ग-प्रति-नव-कमला-क्रीड-वाटी-विहार स्निग्ध-श्री-शैल-कन्या-सहचर-करुणा-सार-वर्षार्द्रितेषु ॥
स्वाङ्घ्रि-द्वन्द्वोपसेवोदित-सकलकुलोद्दण्डपाण्डित्य-कीर्ति- प्रौढान्तेवासिवर्ग-प्रकटित-विजय-स्तम्भ-दिङ्मण्डलेषु । जिह्वानानट्यमानाम्बुज-भव-तरुणी-तुङ्ग-वक्षोज-कुम्भ- क्रीडा-हारायमाणामित-विमल-यशोधौत-लोक-त्रयेषु ॥
हृत्पङ्केरुह-केलि-सौध-विहरन्नीहार-शैलाग्रणी- वंशौन्नत्य-यशो-विभूषित-वपुस्सौभाग्यधन्योदयैः । कारुण्यामृत-वीचि-लालितभरैः काम्यैः कटाक्षाङ्कुरैः लीलाताण्डविताब्धिराजतनयालीलेषु सद्वेश्मेसु ॥
चक्रोद्धारानुबद्ध ……कलाधीश सर्वस्वतन्त्र श्रीकाञ्चीपीठिकाधीश्वरविदितयशःश्रीमदाचार्यवर्यात् । संलब्धाचार्य-पीठ-त्रिभुवन-गुरु-साम्राज्य-सिंहासनाढ्ये श्रीमच्चन्द्रावतंसाह्वय-सदृशताख्यापितोदारनाम्नि ॥
अचञ्चलाभक्तिगभीरचित्तेष्वाशान्त-विश्रान्त-यशोभरेषु । श्रीमन्महादेवसरस्वतीन्द्रेष्वद्वैतविद्याविधुतान्तरेषु ।
महाराजपुराशेष-विद्वज्जनकदम्बकैः। वैद्यनाथबुधोत्तंसप्रमुखैर्नतिशालिभिः ॥ पदाम्बुरुहयोर्भक्तिप्रह्वकल्पकशाखिनोः । विज्ञप्तयो विभाव्यन्ते विहितायुतवन्दनाः॥
विकारिनामसंवत्सरे चैत्रशुद्धदशमीपर्यन्तस्य निर्व्याजनिखिल-भूतोपब्रह्मायमा ण-निरवधिकतर-करुणा-सुधान्तरङ्गायमाणापाङ्ग-प्रतीक्षण-निरीक्षणानुग्रह-वशा ……………करतल-कमलाः विलिखित-प्रहित-नारायणपत्रिका-गंध-प्रसादाः अहोबिलसोमयाज्यानीताः साम्प्रतमस्माकमशेषाणामपि मौलिस्थलीरलंकुर्वन्त्यनर्घा इव मकुटाः । अत्र श्रीचन्द्रमौळीश्वरस्य कल्याणादिमहोत्सवेषु अग्रसंभावना कर्तव्येति अतियत्नलब्ध-मार्जारानुग्रहं मूर्ध्ना दधानाः । शुभशोभनाद्युत्सवेषु तथैवानुतिष्ठन्तो वर्तामहे ।
वेनुगोण्ड-नरहरि-सोमयाजिसंमतिः ।
कण्डरमाणिक्यं-वैद्यनाथ-संमतिः ।
कोमल-रामनाथ-शास्त्रिसंमतिः।
अदंवार-वेङ्कटेश्वर-शास्त्रिसंमतिः ।
श्रीनिवास-शास्त्रि-संमतिः।
नीलकण्ठ-शास्त्रिसंमतिः ।
विद्या-विलास-अन्ना-तिरुमल-दीक्षित-संमतिः।
रामकृष्ण-शास्त्रि-संमतिः।
अडयप्पलम्-अण्णाशास्त्रि-संमतिः ।
चड्डगोपाल-शास्त्रि-संमतिः।
राजगोपाल-शास्त्रि-संमतिः।
स्वामि-दीक्षित-संमतिः।
अप्पय्य-यज्वावलिशेखराणां नप्ता महामार्गसहाययज्वा ।
तत्पुत्रवर्यो हरिशङ्कराख्यो वसन्महाराजपुराग्रहारे ॥श्रीमन्महादेवयोगीन्द्रमहिताज्ञाधुरंधरः । स्वामिनां करुणापाङ्गसङ्गमर्थयते सदा ॥
மஹாராஜபுரம்.
க்ஷேமம்- அழகுவாய்ந்தவைகளும் சிறந்தவைகளும் கீர்த்தி பெற்றவையுமான குண ரத்நங்களின் வரிசைக்கு ரத்நாகரங்களாயும், ஆகாய கங்கையில் மோதுகின்ற அலைக் கூட்டத்தின் அஹங்காரத்தைப் போக்குகின்ற வாக்கும் மனத்தையுடையவைகளும், தனக்கதீனமான மனதாகிற புதிய அழகிய மத்தியான வனத்தில் பிரியமுள்ள பார்வதீ நேசனின் கருணை வள்ளலுள்ளவைகளும், தனது இரு திருத்தாளை சேவிப்பதால் உண்டான ஸகல கலைகளின் அபாரமான பாண்டித்யம் பெற்ற மேம்பட்ட சீடர்களின் ஸமூஹத்தால் பிரகடனம் செய்யப்பட்ட ஜயத்தூண் களோடு கூடின திசை மண்டலத்தையுடையவைகளும், நாக்கில் மிகவும் நடனம் புரிகின்ற கலைமகளின் உன்னதங்களான கலசங்கள் போன்ற பயோதரங்களின் க்ரீடாஹாரம் போன்ற அளவி லாத பரிசுத்தமான கீர்த்தியால் அலம்பப்பட்ட மூவுலகையுடையவைகளும், ஹ்ருதய கமலமாகிற விளையாட்டு உப்பரிகையில் விஹாரஞ்செய்கின்ற சூரியசந்திர வம்சங்கள் போன்ற வம்சத்தின் மேன்மையாலாகிய கீர்த்தியால் அலங்கரிக்கப்பட்ட ஶரீர சௌபாக்கியத்திற்குத் தன்யதையைத் தருகின்றவையும், கருணாம்ருத தரங்கங்களால் கொண்டாடப்பட்ட மேன்மையையுடையவைகளும் இஷ்டத்தை அளிக்கின்றவைகளுமான கடாக்ஷாங்குரங்களால் லீலா தாண்டவமாடுகிற லக்ஷ்மீ விலாஸத்தையுடையவைகளுமான ஸாதுக்களின் க்ருஹங்களில் ஸ்ரீகாஞ்சீ பீடாதிபதிகளால் தெரியப்படுத்தப்பட்ட கீர்த்தியைடைய ஆச்சார்ய ச்ரேஷ்டரிடம் இருந்து அடையப்பட்ட ஆச்சார்ய பீடத்தையுடைய மூவுலகின் குருவின் ஸாம்ராஜ்ய சிம்ஹாஸனத்தால் விளங்குகின்றவர்களாயும் சந்திராவதம்ஸர் என்ற பெயருக்கிணங்கின உதாரமான அன்வர்த்த நாமாவுள்ளவர்களுமான ஸ்வாமிகளிடத்தில், அசைவற்ற கம்பீரமான மனதுள்ளவர்களும், திசைக் கோடியில் பரவின கீர்த்தி வாய்ந்தவர்களும்,அத்வைத வித்தையால் பரிசுத்தமான ஹ்ருதயமுள்ளவர்களுமான ஸ்ரீமஹாதேவ ஸரஸ்வதீந்திரர்களிடம் வைத்யநாதர் முதலான வணக்கமுள்ள மஹாராஜபுரத்திலுள்ள ஸகல வித்வஜ்ஜனங்களால் பக்தியால் வணங்குகின்றவர்களுக்கு கற்பகதரு போன்ற சரண கமலங்களில் அனேக ஆயிரம் வந்தனத்தோடு விக்ஞாபனங்கள் செய்யப்படுகின்றன.
விகாரி ஸம்வத்ஸாத்தில் சைத்ரசுத்த தசமியில்………… அஹோபில ஸோமயாஜியால் கொண்டுவரப்பட்டவைகளும், வ்யாஜமில்லாமலே ஸகல ப்ராணிகளிடம் தழைத்தோங்கும் எல்லையில்லாத கருணாமிருதாந்தரங்கம் போன்ற அபாங்கங்களின் ஈசுவராநுக்கிரஹத்திற்கு வசங்களும்…… கரதல கமலத்தால் எழுதப்பெற்று அனுப்பப்பட்ட நாராயணஸ்மிருதி பத்ரிகாவாஸனையோடு கூடினவைகளுமான ப்ரஸாதங்கள் இப்பொழுது எங்கள் எல்லோருடைய உத்தமாங்கங்களையும் விலை மதிக்கப்பெறா மகுடங் கள் போல் அலங்கரிக்கின்றன.
ஸ்ரீ சந்திரமெளீச்வரருக்கு, கல்யாணம் முதலான மஹோத்ஸவங்களில் அக்ர ஸம்பாவனை செய்ய வேண்டுமென்ற விடா முயற்சியால் ஏற்பட்ட மார்ஜ்ஜாரானுக்ரஹத்தை ஶிரஸால் வஹித்துக்கொண்டு ஶுபஶோபனாதி உத்ஸவங்களில் அப்படியே அனுஷ்டித்துக்கொண்டு இருக்கின்றோம்.
ஒப்பந்தம்.
வேனுகொண்டா நரஹரி ஸோமயாஜி ஸம்மதி
கண்டராமாணிக்கம் வைத்தியநாத ஸம்மதி.
இன்னும் அனேக சம்மதிகள் கையெழுத்திடப் பட்டிருக்கின்றன. பிறகு – அப்பய்ய தீக்ஷிதாளின் பேரன் மார்க்கஸஹாய தீக்ஷிதர் அவருடைய பிள்ளை சங்கரர் என்பவர் மஹாராஜபுர அக்கிரஹாரத்தில் வசித்துக்கொண்டு மஹாதேவயோகீந்த்ராளின் கௌரவமான ஆக்ஞையை வஹித்து எப்போதும் ஸ் வாமிகளின் கருணாகடாக்ஷ ஸம்பந்தத்தை வேண்டுகிறார்.K. V. சுப்பிரமணிய சாஸ்திரி.
- क्वचित्कृता कृता क्वापि मार्जारी भक्तिरित्युच्यते | எலியைப் பிடிக்கும் ஸமயத்தில் பூனை எப்படி மனதை அசைவற்றதாகச் செய்கிறதோ அப்படி ஏகாக்ரமான பக்தியைச் செலுத்தினால் அதை மார்ஜார பக்தி என்று ஆன்றோர் கூறுகின்றனர்.
குறிப்பு: क्वचित्कृता कृता என்ற மேற்படி ஶ்லோகத்தின் பொருள் வேறு. இதழாசிரியர் கொடுத்ததை உள்ளவாறு அப்படியே கொடுக்கப்படுகிறது.English Summary
There is a Prachina Acharya Sambhavana Lekhamala that has been published in the Aryadharmam magazine associated with the Kanchi Kamakoti Pitham. Volume 7, Issue 25 – Angirasa year, Adi, 6th corresponding to 1932-July-21st. This lekhamala illustrates the reverence shown by grhasthas, vidvans and important people of various agraharas such as Maharajapuram, Kandaramanikkam etc and the traditional respects paid on occasions such as weddings in families, to the Acharyas of the Kanchi Kamakoti Pitham. These contain padyams on the 61st Pithadipati of Kanchi Kamkaoti Pitham, Shri Mahadevendra Sarasvati Swamigal (5) and also has the names of various vidvans who lived during those time.
This is a historically important document. It was during the time of the succeeding Acharya Shri Chandrashekharendra Sarasvati Swamigal who wrote the Shivashtapadi that the Kanchi Kamakoti Pitham was moved to Kumbhakonam due to the political uncertainty caused by invading armies.
The following information helps us ascertain the antiquity of this document and the acharya mentioned in this:
The samvatsara, masa and tithi mentioned:
It is mentioned as Vikari Chaitra Shuddha dashami. The year that corresponds to this would be 1719-1720 CE.
1659-1660 CE | 1719-1720 CE | 1779-1780 CE | 1839-1840 CE |
---|
Shri Mahadevendra Sarasvati Svamigal (5)
The name of Shri Mahadevendra Sarasvati Svamigal is mentioned in this lekhamala. The acharyas of Shri Kanchi Kamakoti Pitham and the years they attained siddhi are shown below.
No. | Name | Siddhi |
---|---|---|
57 | Shri Paramashivendra Sarasvati Svamigal | 1585 CE |
58 | Shri Atmabodhendra Sarasvati | 1637 CE |
59 | Shri Bhagavannama bodhendral் | 1691 CE |
60 | Shri Advaitatmaprakashendra Sarasvati | 1637 CE |
61 | Shri Mahadevendra Sarasvati (5) | 1745 CE |
62 | Shri Chandrashekharendra Sarasvati (4) | 1783 CE |
Based on this, it can be ascertained that this document refers to Shri Mahadevendra Sarasvati Swamigal (5). The relevant verses from the Punyashlokamanjri are quoted below:
अद्वैतात्मप्रकाशेन्द्राद् बाल्य आश्रितसंयमः ।
नारायण आदिपुरे लिल्येऽनशनतत्परः ।।६।।
महादेवेन्द्राख्यो गुरुवर इहाचार्यपदवीं समाश्चत्वारिंशद द्विशरदधिका बिभ्रद अतुलाम् ।
महायोगी साक्षात्कृतपरमहाः क्रोधनसमे तथा ज्येष्ठे शुक्ले नवमसुतिथौ सिद्धिम् अभजत् ।।७ ॥
-पुण्यश्लोकमञ्जरी
His Purvashrama name as Narayana. He took sanyasa from Shri Advaitatma Prakashendra Swamigal at a very young age. He undertook a vow of living on a frugal meal of leaves and was a great yogi and attained Siddhi in 4846 Krodhana samvatsara, Jyeshta shukla navami (CE 1745-Jun-08)
Comparison with information published in the prefatory note of Ashirvada Shatakam
One of the publications of Kamakoti Koshasthanam is Ashirvada Shatakam. This was written by Vanchanatha Mahakavi, the son of Govinda Dikshita’s dauhitri. When comparing this with the information provided there by Shri Kuppa Anjaneya Shastri, we understand that this Vanchanathakavi was the descendant of Kutti Kavi the author of Mahisha Shatakam. (Information about Shri Vanchyeshvara Kavi or Kuttikavi can be seen from the fourth volume of DeivattinKural.
“As per the information preserved in Kamakoti Matham, in the Shalivahana sakhabda 1642 (1720 CE) Vikari year, before the Kanchimatham was shifted to Kumbhagonam, Acharyal who was in Kanchipuram instructed Ahobala a yajnika to collect the agrasambhavana for Chandramaulishvara and to continue this tradition for posterity and had him send word to various key people in various agraharas of Choladesha to get their responses. The sammati patras collected by the yajnika in each village is there in the manuscripts. Many of those living in these agraharas wrote some padyas. Among those are:
- Shridhara Venkateshvara who wrote many granthas. He is denoted as shriya Venkatesha
- Viraraghava Shastri who was the ancestor of the well-known Pandita Ramachandra Shastri and Shri Lakshmana Shastri Dravid
- Vanchyeshvara or Kuttikkavi who was the great grandfather of the author of Ashirvada Shatakam
- Tirumalamakhi the dauhitra of Shri Govinda Dikshita
- The elder brother of Tirumalamakhi, Ayyavarumakhi and his son Lakshmipati
Kuttikavi, Tirumalamakhi and Lakshmipati together wrote some padyas. These are:
वृत्तिं शाश्वतिकीमशेषविदुषां पञ्चाग्रहारात्मना यश्चक्रेऽनुकवेरकन्यमयजद्यो द्वादशाहादिभिः |
पुत्रस्तस्य किलाय्यवारुमखिनो लक्ष्मीपतिः श्रीमहादेवेन्द्रस्य जगद्गुरोः प्रथमतः संमन्यते शासनम् ||
तिरुमलमखी तस्य भ्राताय्यवारुमखीशितुर्दुहितृतनयस्य श्रीगोविन्ददीक्षित मन्त्रिणाम् |
अपि च भगिनीपुत्रो वाञ्चेश्वरोऽपि तदाज्ञया सविनयमिमामग्रे स्वयं बहुमन्यते ||
It is to be noted that the above padyas are not there in the ones published in Aryadharmam but the editor mentions that there were eight such manuscripts.
The lekhamala in Aryadharmam pays tribute to the Acharya and acknowledge the prasada of Shri Chandramaulishvara