Menu

Kalavai Periyava – 1

கலவைப் பெரியவர்-I

( ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 66வது பீடாதிபதி )

பிரம்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள்

இந்த ஆசார்யர்களது மூதாதையர்கள் கர்நாடக தேசத்திலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குடியேறிய சில குடும்பங்களைச் சார்ந்த ஹோஸால கர்நாடக ஸ்மார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் செங்கல் பட்டு ஜில்லா பாலாற்றங்கரையை அடுத்துள்ள உதயம்பாக்கம் என்னும் ஊரில் தங்கி யாகங்கள் பல செய்து சுரோத்திரியர்களாக விளங்கி வந்தார்கள். அவர்களுக்கு விஜயநகர அரசர்கள் சில கிராமங்களைத் தானமாக அளித்திருந் தார்கள். 18 வது நூற்றாண்டின் பிற்பகுதியில் காமகோடி பீடத்தின் ஆஸ்தானம் கும்பகோணத்துக்கு மாறின சமயம் இந்தக் குடும்பத்தாரும் காவேரி தீரத்துக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார்கள். ஸ்ரீ ஸ்வாமிகளுக்குப் பூர்வாச்ரமப் பெயர் ஸ்வாமிநாதன். 65வது பீடாதிபதிகளாகிய ஸ்ரீ ஸுதர்ஸன மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இராமனாதபுரம் ஜில்லாவில் விஜய யாத்திரை செய்தபோது ஸ்வாமிநாதன் என்னும் இந்த இளைஞர் மடத்து முகாமுடன் சென்று மடத்தின் பண்டிதர்கள் மூலமாக வேதம் பயின்று ஸ்ரீ ஸ்வாமிகளின் நித்ய பூஜைக்கு வேண்டிய சிசுருஷைகளையெல்லாம் நன்கு நடத்தி வந்தார். நல்ல தேஜஸ்வியாக விளங்கின இந்த பால கனையே தனக்குப்பின் இந்தப் பீடத்தை அலங் கரிக்கத் தக்கவரென குருநாதர் மனத்தில் முடிவு செய்திருக்க வேண்டும். தமது நிர்யாண காலத்தை முன்னரே அறிந்த அந்த மகான் பதினெட்டு வயதான இந்தச் சிறுவனுக்கு தக்க சமயத்தில் சந்நியாச ஆச்ரமம் தந்து மகாமந்திர உபதேசமும் செய்தார்கள்.

1890, விரோதி பால்குண மீ அமாவாசையன்று குருநாதர் இளையாற்றக் குடியில் சித்தியடைந்த பின்னர் 66-வது பீடாதி பதிகளாகி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று நாமம் தரித்த ஸ்வாமிநாதர் தன் குருநாதரின் மகாபூஜை முதலியவற்றை முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்தின் எல்லா ஸன்னாகங்களுடன் புதுக்கோட்டை, தஞ்சை. திருவையாறு. கபிஸ்தலம் மார்க்கமாக கும்பகோணத்தை யடைந்தார்கள். தனது சாஸ்திர வித்யாப்யாஸத்தைத் தொடங்கி திருவையாறு மீமாம்ஸா குப்புசாமி சாஸ்திரிகள் திருவிசநல்லூர் மகா லிங்க சாஸ்திரிகள் மற்றும் பல வித்வான்கள் மூலமாக வேதாந்தம், தர்க்கம் முதலான சாஸ்திரங்களையும் பயின்றார்கள். கும்பகோணம் அய்யங்கார் தெரு அக்னிஹோத்திரம் ராஜ கோபாலதாதாசார்ய ஸ்வாமியிடமும் மகா மகோபாத்யாய திருவிசநல்லூர் வெங்கடசுப்பா சாஸ்திரிகளிடமும் பின்பகுதியில் ஸ்வாமிகள் பாடம் பயின்றதாகத் தெரிகிறது. அத்வைத வேதாந்தத்தில் பயிற்சி பெறும் பண்டிதர்களுக்கு ஊக்கமளிக்கவும் அது சம்பந்தமான நூல்களை வெளியிடவும் 1894 ளு (ஜய வருஷம்) ஸ்ரீ ஸ்வாமிகள் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் அத்வைத சபையென்னும் ஒரு சபையை ஆரம்பித்து வைத்தார்கள். பண்டிதர்களில் மன்னார்குடி மகாமகோபாத்யாய ராஜு சாஸ்திரிகளும் ஸௌகார்களில் திவான் சேஷய்யா சாஸ்திரிகளும் மற்றும் பல பண்டிதர்களும் ஸௌகார்களும் இந்தச் சபையின் அபிவிருத்தியில் விசேஷப் பங்கை ஏற்று வந்தார்கள். இன்றும் இந்த சபை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1896-க்குப் பின்னர் ஸ்வாமிகள் தஞ்சை ஜில்லாவில் விரிவான விஜய யாத்திரையை மேற் கொண்டார்கள். சுமார் 1000 கிராமங்களுக்கு விஜயம் செய்து, ஆங்காங்குள்ள சிவ-வைஷ் ணவ க்ஷேத்திரங்களைத் தரிசித்து, தீர்த்தங் களிலும் ஸ்நானம் செய்து மூன்று வருஷங்களில் யாத்திரையை முடித்துக்கொண்டார்கள். கிராமந் தோறும் பக்தர்கள் ஸ்ரீ ஸ்வாமிகள் நடத்தி வந்த நித்யபூஜையைத் தரிசிக்க ஆயிரக்கணக்காக ஆங்காங்கு கூடினார்கள். இந்த யாத்திரையில் வேறு ஒரு முக்கியமான அம்சம் என்னவென் றால், அநேகமாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமத்தின் பொது நஞ்சை நிலத்திலிருந்து ஒரு பாகத்தை ஸ்ரீ மடத்துக்கு கிராமத்தார்கள் சாசன மாக எழுதிவைத்தார்கள். அதுபோன்ற துண்டு நிலங்கள் இப்போது ஐந்நூருக்கு மேல் உள்ளன. இது ‘பட்டய மான்ய நிலம்’ எனக் கூறப் படுகிறது. இதற்கு முன் ஸ்ரீமடப் பூஜைக்கு என மிராசுதாரர்கள் வேலிக்கு ஒரு குருணி நெல் வீதம் கொடுத்துவந்ததற்குப் பதிலாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலங்களி லிருந்து ஸ்ரீ மடத்துக்கு கணிசமானதொரு வருமானம் தற்காலம் வந்துகொண்டிருக்கிறது.

ஸ்ரீ ஸ்வாமிகள் 1906-வது ஆண்டின் ஆரம்பத்தில் விஜயயாத்திரை தொடங்கி தென்னாற்காடு ஜில்லாவில் திருப்பாதிரிப் புலியூரிலும் புதுச்சேரியிலும் சில மாதங்கள் தங்கியிருந்தார்கள். புதுச்சேரியில் அக்காலத்தில் இருந்த பிரஞ்சு கவர்னர் ஸ்வாமிகளுக்கு ராணுவ மரியாதை செலுத்தினார். அந்த மரியாதை ஸ்ரீமடம் புதுச்சேரி விஜயம் செய்யும் சமயங்களில் தற்காலத்திலும் நடைபெற்றுவருகிறது. அக்காலத்தில் ஸ்ரீ ஸ்வாமிகள் யானை மீது அம்பாரி வைத்து அதில் அமர்ந்தே பவனி வருவார்கள். சுமார் 30 மாட்டுவண்டிகளும், யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு இவற்றுடன் சுமார் 200 பேர்கள் ஸ்ரீமட முகாமுடன் தொடர்ந்து வருவார்கள். அந்தக் காட்சி இனி காணமுடியாத காட்சியாகும். ஸ்ரீ ஸ்வாமிகள் வடஆற்காடு ஜில்லா கலவையென்னும் ஊரில் விஜயமாகியிருந்தபோது எதிர்பாராத வகையில் உடல்நலம் குன்றி 1907 ளு பராபவ வருஷம் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று மகா சமாதியடைந்து விட்டார். அப்போது அவர்களுக்கு வயது சுமார் முப்பத்தைந்தே யாகும்.

Kalavai Periva-1

Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamy
66th Shankaracharya of Shri Kanchi Kamakoti Mulamnaya Sarvajna Pitham

(Translation from Brahmashri Sambamurthy Sastrigal’s writings by Brahmashri Dr. T. Vasudevan)

The forefathers of this Acharya belonged to the Hoysala Karnataka Smartha Brahmin families who had migrated from Karnataka to many parts of Tamil Nadu. They were located on the banks of Palar in Chengalpattu District. They stayed in a place called Udayambakkam and performed many Yagnas (sacrifices) and came to be known as Shrotriyas.

The kings of Vijayanagara had donated some villages to them. When in the late 18th century hermitage of the Kamakoti Peetha was shifted to Kumbakonam, they too shifted their abode to the banks of the Cauvery.

The original name of this Acharya was Swaminathan. When Sri Sudarsana Mahadevendra Saraswati Swamigal, the 65th Peetadhipati of the Kanchi Kamakoti Peetam, made a pilgrimage to Ramanathapuram district, this young Swaminathan went with the Matam camp, studied the Vedas through the pandits of the Matam, and performed all the help required for the daily puja of the senior Acharya. The Guru must have decided in His mind that this child, who was very much a tejasvi, deserved to adorn His position after Him. Knowing his niryana period in advance, the Acharya gave this eighteen-year-old boy the sanyasa ashrama at an appropriate time and gave Mahamantra upadesha.

In 1890 Sri Sudarsana Mahadevendra Saraswati Swamigal attained siddhi on the new moon day of Phalguna month, Virodhi year. Shri Swaminatha, who took the name Sri Chandrasekharendra Saraswati and became the 66th Pithadipati, completed His Guru’s Mahapuja etc. along with all the retinue of Sri Mutt, reached Kumbakonam via Pudukottai, Tanjore, Thiruvaiyaru, and Kapistalam.

Starting His shastra vidyabhyasam with Thiruvaiyaru Mimamsaka Kuppusamy Shastrigal, Thiruvisanallur Mahalinga Sastrigal and many other scholars he also studied vedanta, tarkam etc. It is learnt that He had later studied with Kumbakonam Iyengar Street Agnihothram Rajagopala Tatacharya Swami and Mahamahopadhyaya Thiruvisanallur Venkatasubba Sastrigal.

To publish Books related to Advaita Vedanta and to inspire and motivate scholars Sri Swamigal started a Sabha by the name Advaita Sabha in 1894 (Jaya Year) in Kumbakonam Srimatam. Mannargudi Mahamahopadhyaya Raju Shastrigal and other Pandits and Dewan Seshaiya Shastri among Saukars and many other Saukars played a special role in the development of this Sabha. This Sabha is still functioning today almost 130 years.

After 1896, the Swamis undertook an extensive Vijaya Yatra in Tanjore District and visited around 1000 villages. He is hence known as “Aayiram graamathu Periyava” – the Acharya of A Thousand Villages. He visited various Siva-Vaishnava Kshetras and bathed in Tirthas and completed the pilgrimage in three years. Devotees from every village gathered in thousands to visit the Nitya Pooja conducted by Sri Swamigal. Another important aspect of this pilgrimage is that probably in every village, the villagers deed a portion of the village’s common land to the Sri Matham as a charter. Such plots are now more than five hundred. It is said to be ‘Pattaya Manya Nilam’. This arrangement seems to have been made in place of the earlier practice of Mirasdars donating one kuruni grain of paddy per one veli of land for Srimatam Puja. A substantial income is now coming to the Shrimatam from these lands.

Sri Swamigal at the begining of the year 1906 started a Vijaya Yatra and stayed for a few months in South Arcot district at Tirupadiripuliyur and Puducherry. The then French Governor of Puducherry paid military honors to the Swamigal. That honor is being performed even nowadays when Srimatam visits Puducherry.

At that time, Sri Swamigal would make the procession by placing Ambari on an elephant and sitting on it. Approximately 30 bullock carts, elephants, horses, camels and palanquins along with around 200 people would accompany Srimatam camp. That scene is one that can no longer be seen.

When Sri Swamigal was on a visit to the villages of North Arcot district, His health unexpectedly failed and He passed away on Parabhava Makara/Magha Krishna Paksha Ashtami in 1907. He was about thirty-five years old then.

His Samadhi is in the village of Kalavai. One Tamil poet by name Duraiswami Upadhyayar has recorded in four verses the details of the Acharya attaining siddhi, including the panchanga details and one Minakshiammal doing bhoodaanam for constructing the Samadhi of the land east of one Mandapa Pillaiyar, west of the then village, north of the Perumal Pond, south of a small hillock.

It was this Acharya who decided that another Swaminathan, whom we all know as Shri Maha Periyava, shall be appointed as Kanchi Kamakoti Peetadhipati. The younger Swaminathan had had darshanam of the Acharya in the village called Saaram near Chengalpattu.

But towards the last days of the Acharya it was not possible to immediately bring the younger Swaminathan to the Mahasannidhanam. So the elder Acharya gave sannyasa to younger Swaminathan’s cousin one Shri Lakshmikantan. After the siddhi of the elder Acharya, this younger Acharya then blessed the diksha vastra etc to be given to Swaminathan as per the wishes of His Guru, before attaining siddhi Himself.