श्रीशङ्कराचार्यवर्यम् – गीतम् – गणेशशास्त्रिणा विरचितम्
ஸ்ரீ சங்கராசார்ய வர்யம் என்ற கீதம் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்த ஸ்ரீ பகவத்பாதரின் மீது ஶ்ரீ கணேச சாஸ்த்ரி என்பவரால் இயற்றப்பட்டது. காமகோடி ப்ரதீபத்தில் என்னும் மாத இதழில் 1966-ஆம் ஆண்டு வைகாசி ௴ வெளியிடப்பட்டது. மேலும், ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஶங்கராசார்யரான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ சரணர்களால் குருவாயூர் கோவில் திருப்பணிக்காக அடிக்கல் நாட்டப்படும் தருணத்தில் 1-மே-1971 அன்று பொதுவிடத்தில் இது மீண்டும் ஸமர்ப்பிக்கப்பட்டது. இத்தகவலுடன் மீண்டும் 1971 வைகாசி ௴ ப்ரதீபத்தில் ப்ரசுரம் செய்யப்பட்டது.
The Gitam Shri Shankaracharya Varyam was composed by Shri Ganesha Shastri on Shri Bhagavatpada who shone as the first Acharya of the Shri Kanchi Kamakoti Peetam. It was published in 1966 Vrishabha month in the monthly magazine named Kamakoti Pradeepam.
Further, this was publicly submitted once again 1-May-1971 at the occasion of the laying of the foundation stone for the Renovation of Guruvayur Temple by Shri Jayendra Sarasvati Shricharana, 69th Shankaracharya of the Shri Kanchi Kamakoti Peetham: With this news, it was once again printed in 1971 Vrishabha month Pradeepam.
सदाशिव-समारम्भां शङ्करा·चार्य-मध्यमाम् ।
अस्म·दाचार्य-पर्यन्तां वन्दे गुरु-परम्पराम् ॥ १ ॥
ஸதாஶிவன் முதலானதும் ஶங்கராசார்யரை மையமாகக் கொண்டதும் நமது ஆசார்யர் வரையிலானதுமான குரு பரம்பரையை வணங்குகிறேன்.
श्रुति-स्मृति-पुराणाना¯मालयं करुणा·लयम् ।
नमामि भगवत्पाद-शङ्करं लोक-शङ्करम् ॥ २ ॥
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் இருப்பிடமும் கருணையின் உறைவிடமும் உலகிற்கு நன்மை செய்பவருமான ஶங்கர பகவத்பாதரை வணங்குகிறேன்.
जगतां गुरु-वर्यं च कामको·ट्यधिपं शिवम् ।
चन्द्रशेखर-योगी·न्द्र-देशिकं समुपास्महे ॥ ३ ॥
காமகோடி பீடாதிபதியும் எவ்விடத்தோர்க்கும் சிறந்த குருவும் மங்களமானவருமான சந்த்ரஶேகரர் எனும் யோகியான ஆசானை நன்கு வழிபடுகிறோம்.
(शंभो महादेव देव इति गीतप्रकारः)
श्री-शङ्करा·चार्य-वर्यम् –
चन्द्रचूडा·वतारं भजे ज्ञान-मूर्तिम् ॥ ० ॥
பிறைசூடியின் அவதாரரும் ஜ்ஞான மூர்த்தியுமான சிறந்த ஶ்ரீ ஶங்கராசார்யரை வழிபடுகிறேன்.
अद्वैत-सिद्धान्त-मूलम् –
द्वैत-वादा·ख्य-मत्ते·भ-पञ्चास्य-लीलम् ।
भस्म-त्रिपुण्ड्रा·ङ्ग-फालम् –
सूत्र-भाष्या·दि-निर्णीत-वेदान्त-भावम् ॥ १ ॥
அத்வைத ஸித்தாந்தத்திற்கு (பிற்காலத்தியவரைப் பொறுத்தவரை) மூலமானவரும், த்வைத வாதம் எனும் மத யானைக்கு ஸிம்ஹம் போன்று லீலை புரிந்தவரும், மூன்று கோடுகளாக திருநீற்றை உடலிலும் நெற்றியிலும் (கொண்டவரும்), ஸூத்ர பாஷ்யம் முதலிய (நூல்களால்) வேதாந்த(மாகிய உபநிஷத்துகளின்) கருத்தை நிர்ணயித்தவருமான (ஶ்ரீ …)
नाना-विध-स्तोत्र-गीतैः –
सर्व-लोको·पकार-क्रियायां प्रवृत्तम् ।
दुर्वादि-वादा·भ्र-वातम् –
दूर-दूरा·स्त-कामा·दि-दुर्वैरि-बृन्दम् ॥ २ ॥
பாடத்தக்க பல வித ஸ்தோத்ரங்களால் (பண்டிதர்கள் மட்டுமின்றி) உலகோர் அனைவருக்கும் உதவும் செயலில் முற்பட்டவரும், துர்வாதிகளின் பேச்சுகளாகிய மேகங்களுங்குக் காற்றானவரும், காமம் முதலிய தீய எதிரி கூட்டத்தை தூர தூர விரட்டியவருமான (ஶ்ரீ …)
काषाय-संवीत-गात्रम् –
यौवन-श्री-समाश्लिष्ट-सर्वा·ङ्ग¯मीड्यम् ।
कारुण्य-सम्पूर्ण-नेत्रम् –
मन्द-हासो·ल्लसद्-वक्त्र¯मानन्द-पात्रम् ॥ ३ ॥
காஷாயம் போர்த்திய உடலினரும், அனைத்து அங்கங்களிலும் இளமையின் அழகு தழுவியவரும், வணங்கத்தக்கவரும், கருணை ததும்பும் கண்களும், புன்முறுவல் விளங்கும் முகமும் கொண்டவரும், ஆனந்தம் (நிரம்பிய) பாத்திரம் (போன்றவருமான ஶ்ரீ …)
शिष्यैश्¯चतुर्भिः समेतम् –
वाम-हस्त-स्थ-वेदान्त-सिद्धान्त-कोशम् ।
वीरा·सने सन्निषण्णम् –
दक्ष-हस्ता·ग्र-भागे लस·ज्ज्ञान-मुद्रम् ॥ ४ ॥
(எத்தனையோ சிஷ்யர்களுள் முக்கியமாக) நான்கு சிஷ்யர்களுடன் கூடியவரும், இடது கையில் வேதாந்த ஸித்தாந்த நூல்களைக் கொண்டவரும், வீராசனத்தில் வீற்றிருப்பவரும், வலது கை முன்புறம் துலங்கும் ஞான முத்திரை உடையவருமான (ஶ்ரீ …)
संसार-दावा·ग्नि-तप्तम् –
ज्ञान-वृष्टि-प्रदानेन लोकं समस्तम् ।
दुःख-त्रयान्¯मोचयन्तम् –
नेत्र-निर्वाण-संदायि-रूपं यती·न्द्रम् ॥ ५ ॥
ஸம்ஸாரம் (எனும்) காட்டுத்தீயில் தவிக்கும் உலகம் முழுவதையும் ஞானம் (எனும்) மழையை அளித்து (தன் உடலுக்குள்ளும் வெளி இயற்கையாலும் பிற ஜீவர்களாலும் ஏற்படும்) மூன்று (வித) துன்பங்களிலிருந்து விடுவிப்பவரும், கண்ணுக்கு பரம ஸுகத்தை அளிக்கும் வடிவம் உடையவருமான (ஶ்ரீ…)
गोविन्द-योगी·न्द्र-शिष्यम् –
शारदा-पीठ-निक्षिप्त-वागीश-दारम् ।
साक्षात्कृत-ब्रह्म-तत्त्वम् –
षण्·मत-स्थापका·चार्य-कीर्त्या लसन्तम् ॥ ६ ॥
கோவிந்தர் என்ற சிறந்த யோகியின் ஶிஷ்யரும், (துங்கபத்ரா ஸங்கமத்தில்) ஶாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியை ஸ்தாபித்தவரும், ப்ரஹ்ம தத்த்வத்தை நேரில் அனுபவிப்பவரும், ஷண்மத ஸ்தாபகாசார்யர் என்ற புகழுடன் திகழுபவருமான (ஶ்ரீ…)
तत्-तन्·मठेषु स्व-शिष्यान् – स्थापयित्वा स्वयं कामको·ट्याख्य-पीठे ।
काञ्चीपुर-स्थेऽधिरुह्य –
सर्व-लोको·पदेश-क्रियायां प्रवृत्तम् ॥ ७ ॥
(ஆங்காங்கு பலவிடங்களில்) அந்தந்த மடங்களில் தன் ஶிஷ்யர்களை ஸ்தாபித்து, தாமே காஞ்சீபுரத்தில் உள்ள காமகோடி என்னும் பீடத்தில் ஏறி, அனைத்துலகிற்கும் (தர்ம) உபதேஶம் செய்ய முற்பட்டவரான (ஶ்ரீ…)
इत्थं गणेशेन गीतम् –
स्तोत्र¯मेतत् पठेद् यः स्मरन् शङ्करा·र्यम् ।
नश्यन्ति पापानि तस्य –
ज्ञान-लाभः शुभानां भवे¯च्चा¯पि वृद्धिः ॥ ८ ॥
இவ்வாறு கணேஶ (ஶாஸ்த்ரி) பாடிய இந்த ஸ்தோத்ரத்தை எவர் ஶங்கராசார்யரை நினைவில் கொண்டு ஓதுவார்களோ, அவர்களது பாபங்கள் அழியும், மங்களங்கள் பெருகி ஞானம் கிட்டும்.
इति नयतन्त्रपदाभिज्ञेन शिरोमणिविरुदभूषितेन गणेशशास्त्रिणा विरचितं श्रीशङ्कराचार्यगीतं सम्पूर्णम् ॥