तृतीयस्तबकः

एकाम्रनाम्ना भृशभक्तिभाजा
शिष्येण मासद्वयमादरेण ।
आराधितो लोकगुरूत्तमोऽसौ
श्रीरामसेतुं प्रति यातुमैच्छत् ॥ १ ॥
சிஷ்யரான ஏகாம்ரரால் இரண்டு மாதங்கள் மரியாதையுடன் பக்தியாக வழிபடப்பட்ட அந்த உத்தம ஜகத்குரு, ஸ்ரீராமஸேதுவை நோக்கிச் செல்ல விரும்பினார்.
सद्यः श्रीजगद्गुरुवरः सर्वाधिकारिणमाहूय “भाविमहोदयपुण्यकाले सेतुस्नानमपि लभ्येतेति प्रतिभाति, तस्मात् श्वः विश्वरूपयात्रानन्तरं दक्षिणाशामुखेनैव विजययात्रा कार्या, सज्जीक्रियन्तां सर्वाण्यपि साधनानि” इति समादिशत् । सर्वाधिकारी तथैवेति तदाज्ञां शिरसि कृत्वा सज्जीकृतवान् सर्वमपि ।
உடனே ஜகத்குரு பிரதான நிர்வாகியை அழைத்து கட்டளையிட்டார்: “வரவிருக்கும் மஹோதய புண்யகாலத்தில் ராமஸேது ஸ்நானமும் கிட்டும் என்று தோன்றுகிறது. ஆகவே, நாளை விஶ்வரூப யாத்திரைக்குப் பின், விஜயயாத்திரையாக தென்திசை நோக்கிச் செல்ல வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படட்டும். ப்ரதான நிர்வாகி, அந்த ஆஜ்ஞையை சிரஸால் ஏற்று, அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
अन्येद्युर्नगरप्रदक्षिणकृते श्रीदेशिकेन्द्रो भृशं
शिष्यैरर्थित आत्मनाथचरणं संसेव्य पूर्वं ततः ।
एकाम्रादिमशिष्यलोकलषितं सम्पूरयन्तन्निशि
प्रातः प्रस्थितवान्निजैः परिजनैः श्रीरामसेतुं प्रति ॥
மறுநாள், நகரம் முழுதும் சுற்றி வந்து அருளும்படி சிஷ்யர்களால் வேண்டப்பட்ட குருவானவர், முதலில் ஆத்மநாதரின் பாதங்களை வணங்கி, பின்னர் ஏகாம்ரர் போன்ற சிஷ்யர்கள் சூழ அந்த இரவு தங்கி, காலையில் தனது பரிவாரங்களுடன் ஸ்ரீராமஸேதுவை நோக்கி புறப்பட்டார்.
स्वेनैवागतभक्तशिष्यनिवहः श्रीदेशिकेन्द्रस्ततः
रामस्थापितविघ्नराजमहितं क्षेत्रं प्रपद्यामलम् ।
स्थित्वा वासरयुग्ममत्र कुतुकात्संसेव्य विघ्नेश्वरं
देवीपत्तननामकं प्रतिययौ क्षेत्रं प्रसिद्धं ततः ॥
பின்னர் குருநாதர், தாமாகவே வந்திருந்த பக்தி மிகுந்த சிஷ்யர்களின் குழுக்களுடன், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்னராஜரின் புனித ஆலயத்தை அடைந்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி மகிழ்ச்சியுடன் விக்னேஶ்வரரை வழிபட்டு, பின்னர் தேவிபட்டணம் என்ற பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு சென்றார்.
आदिसेतुरित्याजगन्मण्डलं विख्यातं भगवता श्रीरामचन्द्रेण निर्विघ्नं पौलस्त्यस्य विजयाय सिन्धुतीरविरचितश्रीनवग्रहदेवतापूजनम् आतुषारगिरिशिखरात् अनवरतागतजननिकरनिबिडितं तत्क्षेत्रमासाद्य श्रीजगदाचार्यवर्यः स्वपूर्वाचार्यानुष्ठितक्रमानुसारं नवग्रहपूजादिकं यद्यत्तत्र कर्तव्यं तत्तद्यथाविधि विधाय दिनमनु समुद्रस्नानपवित्रान् तत्क्षेत्रवासिनः स्वकृतसुवर्णदानवर्षणेन अतिमहत्यानन्दसागरे निमज्जयामास ।
பௌலஸ்த்யனை (ராவணனை) தடையின்றி வெற்றி கொள்வதற்காக ஸ்ரீராமச்சந்திர பிரபு கடற்கரையில் நவக்ரஹ பூஜை செய்த, உலகம் முழுவதும் ஆதிஸேது என அறியப்பட்டதும், இமயமலையிலிருந்து தொடர்ந்து வரும் மக்கள் கூட்டத்தால் நிறைந்ததுமான அவ்வாலயத்தை அடைந்து, பூஜ்ய ஜகத்குரு தன் பூர்வாசார்யர்கள் அனுஷ்டித்த முறைப்படி நவக்ரஹ பூஜை போன்ற அங்கே செய்ய வேண்டியவற்றை செய்து, கடல் நீராடி தினமும் பரிசுத்தமாய் விளங்கும் அந்த க்ஷேத்ரவாசிகளை தனது ஸ்வர்ண தான மழையால் பெரும் ஆனந்த ஸமுத்ரத்தில் தினமும் மூழ்கடித்தார்.
स्थित्वादिसेतौ जगतीगुरूत्तमः स्नानादिकं सर्वमपि स्वकृत्यम् ।
कृत्वानयत्तत्र दिनत्रयं हि विशुद्धचेता निखिलैश्च सेव्यः ॥ ४ ॥
ஆதிஸேதுவில் தங்கி, உத்தமரான ஜகத்குரு ஸ்நானம் முதலான தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி, மனம் தூய்மையுடன் அனைவராலும் வழிபடப்பெற்று மூன்று நாட்கள் அங்கு கழித்தார்.
ततः प्रस्थितोऽतो जगद्देशिकेन्द्रो विलम्ब्यार्धमार्गे त्रयं वासराणाम्
अगादन्तिकं द्राक् स रामेश्वरस्य प्रशस्तैः समस्तैः स्वशिष्यैरुपेतः ॥ ५ ॥
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜகத்குரு, வழியில் மூன்று நாட்கள் தங்கி, தனது அனைத்து சிறந்த சிஷ்யர்களுடனும் விரைவாக ராமேஶ்வரத்துக்கருகில் வந்தடைந்தார்.
तदानीं बहोः कालादारभ्य तत्रागत-जन-निचय-सानन्द-वर्णित-श्रीजगद्गुरु-शेखर-गुण-गण-समाकर्णन-सञ्जात-दृढभक्ति-प्रेरित-सिषेविषा-सहितैः “कदा आगमिष्यन्ति श्रीजगद्गुरुचरणाः? कदा वा वयं च तद्दर्शनेनात्मानं कुलं च पवित्रीकुर्मः? कदा वा तदीयसदुपदेशश्रवणेन अस्मादपारात्संसारपारावारात् उत्तरामः?” इति बहुविधचिन्तया सन्ततं सादरं चातकबृन्देनेव पयोदनिकुरुम्बं तदागमनं प्रतिपालयद्भिः तन्नगरसीमान्ते माकिं क्रोशदशकदूरे विराजमाने विश्वेश्वरालये पूर्वमेव सज्जीकृत-करि-तुरग-च्छत्र-चामर-वाद्यादि-बिरुद-पूर्णकुम्भ-माला-नालिकेर-कदली-फल-लिकुच-फलादि-मङ्गल-द्रव्य-भास्वर-स्वकरैः श्रीगुरुचरणागमनमार्गमावृत्य तिष्ठद्भिः निखिलै रामेश्वरवास्तव्यमहाजनैः तद्देशागतस्य श्रीजगद्गुरुमहास्वामिनः पूर्णकुम्भप्रदर्शनहारसमर्पणपूर्वकं चरणनलिनयोः अकारिषत नमांसि ।
பலகாலமாக, அங்கு ஸ்ரீ ஜகத்குருசேகரரின் குணங்களை கேள்விப்பட்டு, கண்டு வந்தவர்களின் மகிழ்ச்சிகரமான வர்ணனைகளை கேட்டதால் உண்டான உறுதியான பக்தியால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு சேவை செய்ய விரும்பியவர்களுடன் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தனர்: “ஸ்ரீ ஜகத்குரு எப்போது செல்வார்? எப்போது அவரது திவ்ய தரிசனத்தால் நம்மையும் நமது குலத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்வோம்? எப்போது அவரது புனித போதனைகளைக் கேட்டு இந்த எல்லையற்ற ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்போம்?” என்று மழை மேகங்களை எதிர்பார்க்கும் சாதக பக்ஷிகளின் கூட்டம் போல, அவர்கள் மரியாதையுடன் அவரது வருகைக்காக தொடர்ந்து காத்திருந்தனர். நகர எல்லையிலிருந்து பத்து க்ரோசத் தொலைவில் உள்ள விஶ்வேஶ்வரர் ஆலயத்தில், யானைகள், குதிரைகள், குடைகள், சாமரங்கள், வாத்யங்கள் முதலிய உபசாரங்கள், பூர்ண கும்பங்கள், மாலைகள், தேங்காய்கள், வாழைப்பழங்கள், பலாப்பழங்கள் மற்றும் பிற பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு, ராமேஶ்வரத்தின் அனைத்து மக்களும் இப்பொருட்கள் தங்கள் கரங்களில் ஒளிர ஸ்ரீ ஜகத்குருவின் வருகை பாதையில் வரிசையாக நின்றனர். ஸ்ரீ ஜகத்குரு மஹாஸ்வாமி அந்தப் பகுதிக்கு வந்தபோது, ராமேஶ்வவரத்தின் அனைத்து குடிமக்களும் பூர்ண கும்பங்கள், மாலைகளை ஸமர்ப்பித்து அவரது பாத கமலங்களை வணங்கினர்.
ततः उत्थाय, उत्तप्त-चामीकर-चारु-रुचि-परिहसन-पटुतर-शरीर-शोभाभरेण निज-कलेवराच्छादिताचिन्त्यामूल्यात्यद्भुत-पीताम्बर-भास्वर-तेजः-पुञ्जेन चाच्छादिताखिलदिगन्तप्रदेशं निसर्गनिस्सरत्-करुणा-प्रवाहार्द्रीभूत-दिव्य-कटाक्षालङ्कृतं श्रीजगद्गुरु-शिरोमणिमालोक्य क्षणमानन्द-सागर-निमग्नाः सर्वेऽपि चित्रलिखिता इव निःस्पन्दावयवाः अस्वाधीनचित्ताश्च बभूवुः ।
பின்னர் எழுந்து, உருக்கிய பொன்னின் அழகையும் மிஞ்சும் உடல் ஒளியுடையவரும், அவரது உருவத்தை அலங்கரிக்கும் அசாதாரணமான விலையுயர்ந்த காஷாய ஆடையால் மூடப்பட்டவர் போன்று, அனைத்து திசைகளையும் நிரப்பும் பிரகாசமான தேஜஸ் கொண்டவரும், இயல்பாகவே பாயும் கருணை வெள்ளத்தால் நனைந்த திவ்யமான பார்வை கொண்டவருமான ஸ்ரீ ஜகத்குரு சிரோமணியைக் கண்டதும் – அனைத்து மக்களும் ஒரு கணம் ஆனந்த ஸாகரத்தில் மூழ்கி, ஓவியத்தில் வரையப்பட்டவர்கள் போல அசையாது நின்றனர். அவர்களின் மனம் அவர்கள் வசத்தில் இல்லாமல் போனது.
गुरूत्तमस्ततो महान्सुचित्तभक्तसन्ततिं
सुधाझरीकिरत्कटाक्षवीक्षणेन सादरम् ।
निरीक्ष्य पावनां च तां विधाय मोदवारिधौ
न्यमज्जयत्तदा सुधांशुशेखरावतारभाक् ॥ ६ ॥
பின்னர் சந்திரசேகரனின் (சிவன்) அவதாரமான (ஆதி சங்கரரின்) ஸ்தானத்திலிருக்கும் அந்த உத்தமமான குரு, அமிர்தம் பொழியும் பார்வையால் மரியாதையும் பக்தியும் மிக்க சிஷ்யர்களின் நீண்ட வரிசையை நோக்கி, அவர்களை (பார்வையால்) புனிதப்படுத்தி, ஆனந்த ஸாகரத்தில் மூழ்கடித்தார்.
क्रमेण च महाजना गुरुवरं ज्वलद्दीपिका-
सहस्रविलसन्महानगरवीथिमार्गेण ते ।
अनैषुरखिलार्चितं प्रथितरामनाथालय-
प्रदक्षिणपुरस्सरं महति सज्जिते सद्गृहे ॥ ७ ॥
அதன்பின் முறையாக, ஆயிரக்கணக்கான ஒளிரும் விளக்குகளால் பிரகாசிக்கும் நகர வீதிகள் வழியாக, அனைவராலும் வணங்கப்படும் புகழ்பெற்ற ராமநாதர் கோயிலை முதலில் வலம் வந்த பின்னர், அந்த பெருமக்கள் சிறந்த ஜகத்குருவை நன்கு அலங்கரிக்கப்பட்ட வாஸஸ்தலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
तस्मिन्महार्हासनराजमानं
श्रीदेशिकेन्द्रं प्रणिपद्य भक्त्या ।
सन्तिष्ठते सर्वजनाय सोऽयं
दत्त्वा प्रसादं स्वगृहं ह्यनैषीत् ॥ ८ ॥
அங்கே அழகான ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்த, ஜகத்குருவை பக்தியுடன் வந்து நின்ற அனைத்து மக்களுக்கும் தனது ப்ரஸாதங்களை வழங்கிய பின்னர், அவரவர்தம் இடத்திற்கு அனுப்பினார்.
अन्येद्युः श्रीभुवनगुरुराट् तत्र विराजमानपुण्यतीर्थेषु यथाविधि स्नात्वा तत्र तत्रागतवैदिकभूसुरवृन्देभ्यः कनक-राङ्कव-पीताम्बरादि-दानेनाल्पित-सुरोद्यान-विद्योतमान-कल्प-महीरुहः अन्ततः श्रीरामनाथसन्निधौ देदीप्यमाने सकल-प्राणि-दुष्कर्म-जनित-दुरित-सन्तति-निःशेष-निर्मूलन-बद्ध-कङ्कणे अग्नितीर्थ इति नाम्नैव स्वस्मिन्स्नातानां समस्तपापपलालानां भस्मीकरणे दक्षोऽहमिति स्पष्टमावेदयति प्राच्यां भास्वति पयोनिधावपि विधिवत्स्नात्वा तत्रापि स्वर्णपीताम्बरादीनि समर्प्य वैदिककुलेभ्यः स्वनिवासस्थानमवाप्य श्रीचन्द्रमौळीश्वरपूजायै उपाक्रमत ।
மறுநாள், ஜகத்குருக்களின் அரசர் அங்குள்ள புனித ஜலங்களில் சாஸ்திர விதிப்படி நீராடிய பின்னர், அங்கு கூடியிருந்த வேத ப்ராம்ஹணர் குழுக்களுக்கு தங்கம், சால்வைகள், உயர்ந்த ஆடைகள் மற்றும் பிற தானங்களை வழங்கி சுவர்க்க வனத்தை பிரகாசிக்க செய்யும் கற்பக விருட்சம் போல் ஆனார். இறுதியாக, ஸ்ரீ ராமநாதர் ஸந்நிதியில், தன்னுள் நீராடுபவர்களின் பாபக்கூட்டங்களை முழுவதுமாக வேரோடு அழித்து, அக்னிதீர்த்தம் என்னும் பெயராலேயே அனைத்து ஜீவன்களின் தீயகர்மாக்களால் உருவான பாபங்களாகிய வைக்கோல் அனைத்தையும் சாம்பலாக்குவதில் திறமை பெற்றதாக உறுதி பூண்டதை தெளிவாக பிரகடனப்படுத்தும் பிரகாசமான அக்னி தீர்த்தத்திலும் – கிழக்கு திசையில் ஒளிரும் ஸமுத்திரத்தில் முறையாக ஸ்நானம் செய்து, வைதிக குலங்களுக்கு தங்கம், உயர்ந்த ஆடை முதலியவற்றை வழங்கிவிட்டு, தனது இருப்பிடத்திற்கு திரும்பி ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரர் பூஜையை ஆரம்பித்தார்.
तस्मिन्नेव दिवसे तत्रस्थ देवस्थानप्रधानाधिकारिभिः सादरं श्रीस्वामिदर्शनार्थमागन्तव्यमिति संप्रार्थितः श्रीदेशिकेन्द्रः सायमष्टमघण्टोपरि श्रीरामनाथदर्शनार्थं सपरिवारः बहुशिष्यगणपरिवीतश्च स्वस्थानात्प्रस्थाय देवस्थानाधिकारिभिः पुरःप्रदर्शितसरणिः मन्दं मन्दं श्रीरामनाथालयम् आसाद्य महागणपतिदर्शनपूर्वकं श्रीरामनाथस्वामिसन्निधिम् आटीकत ।
அதே தினத்தில், அங்குள்ள கோயில்களின் பிரதான நிர்வாகிகளால் ஸ்வாமி தர்ஶநத்திற்கு வர வேண்டும் என்ற மரியாதையுடன் கூடிய அழைப்பை ஏற்று, குருநாதர் இரவு எட்டு மணிக்கு மேல் தனது பரிவாரங்களுடனும் பல சிஷ்யர்கள் சூழவும் ஸ்ரீ ராமநாதரின் தரிசனத்திற்காக தனது இருப்பிடத்திலிருந்து புறப்பட்டார். கோயில் நிர்வாகிகளால் முன்கூட்டியே காண்பிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி, மெதுவாக ஸ்ரீ ராமநாதர் கோயிலை நெருங்கி, முதலில் மஹாகணபதியின் தரிசனம் செய்து, பின்னர் ஸ்ரீராமநாத ஸ்வாமியின் ஸன்னிதியை அடைந்தார்.
सर्वेऽधिकारिपुरुषाः बाह्येऽतिष्ठन्हि मण्टपे चान्ये ।
एकान्ते गुरुराजः स्तोतुं श्रीरामनाथमारभत ॥ ९ ॥
அனைத்து அதிகாரிகளும் பிறரும் வெளி மண்டபத்தில் நின்றனர். தனிமையில், ஜகத்குருக்களின் அரசர் ஸ்ரீ ராமநாதரைத் துதிக்கத் தொடங்கினார்.
स्वाराडादिसुपर्वशेखरमणिं नारायणार्च्याङ्घ्रिकं
वीराग्रेसरमागमान्तरमणीहारायितप्राभवम् ।
पारावारभवं विषं विदधतं भूरादिदाहोन्मुखं
तारानायकशेखरं स्मररिपुं श्रीरामनाथं भजे ॥ १० ॥
இந்த்ரன் முதலிய சிறந்த தலைவர்களிடையே மகுட ரத்தினமானமவரும், (ராமராகிய) நாராயணனால் வணங்கப்பட்ட பாதங்கள் உடையவரும், வீரர்களுள் முதன்மையானவரானவரும், ஆகமங்களின் உள் (கருத்துகளாகிய) ரத்தினங்களால் கட்டப்பெற்ற மாலை போன்ற கீர்த்தி கொண்டவரும், பூமி முதலிய லோகங்களை எரிக்கத் இருந்த ஸமுத்திரத்திலிருந்து தோன்றிய விஷத்தை உண்டவரும், சந்திரனை கிரீடமாக அணிந்தவரும், மன்மதனின் எதிரியாயும் உள்ள ஸ்ரீ ராமநாதரை பூஜிக்கிறேன்.
जन्तूनां त्वं परमशिवसम्पालनायात्र लोके
सञ्जातोऽभूः सहजकृपया रामनाथाभिधेन ।
योग्योऽयोग्योऽयमिति भवता चिन्तनां तां च हित्वा
रक्ष्याः सर्वे न हि विमुखता युज्यते स्वीयधर्मे ॥ ११ ॥
நீர் (அனைத்து) உயிரினங்களின் பரம மங்களத்தை நன்கு ரக்ஷிப்பதற்காக இயல்பான கருணையுடன் ராமநாதர் என்ற பெயரில் இவ்வுலகில் தோன்றியுள்ளீர். தகுதியானவர்/தகுதியற்றவர் என்ற எண்ணத்தை விட்டொழித்து, அனைவரும் தங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் – உண்மையில், பாராமுகமாக இருத்தல் உமது இயல்புக்கு ஏற்றதல்ல.
किं च –
सकलभजनयोग्यं पार्वतीपुण्यभाग्यं
निगमशिरसि मृग्यं योगिबृन्दैकभोग्यम् ।
धनपतिकृतसख्यं देवगोष्ठीषु मुख्यं
भज हृदयसुविख्यं रामनाथाख्यमेनम् ॥ १२ ॥
மேலும் – அனைத்து மக்களாலும் பக்தி செய்ய தகுதியானவரும், பார்வதியின் பரம பாக்கியமானவரும், வேதங்களின் முடியில் தேடப்படுபவரும், யோகிகள் கூட்டத்தின் ஒரே ஆனந்தமானவரும், குபேரனுடன் நட்பு கொண்டவரும், தேவர்கள் சபையில் முதன்மையானவரும், ஹ்ருதயத்தில் நன்கு காணப்படுபவருமான ராமநாதர் என அறியப்படுபவரை வணங்குங்கள்.
तस्माद्धिमगिरिवर-विरचित-सुचरित-निचय-परम्पराया इव मूर्तिमत्याः शारद-राका-निशोदयाकृश-शशाङ्करुचि-परिहसन-पटुतर-मुग्ध-निज-मुखारविन्द-भास्वर-सुन्दरतर-मन्दस्मितालङ्कृतायाः, करुणारस-वरुणालय-भक्तगण-परिरक्षणचण-वीक्षण-कोण-मनोहरायाः श्रीपर्वतवर्धनीनाम्न्याः सकलभुवनजनन्याः सन्निधिमधिगम्य श्रीशङ्करगुरुवरः यथावद्ध्यात्वा स्तुत्वा च ततो निष्क्रम्य प्रदक्षिणक्रमेण श्रीनटराजादिदेवतादर्शनमपि विधाय चण्डिकेश्वरानुमतिपूर्वकं निजावाससदनम् अयासीत् ।
பின்னர், இமயமலையால் செய்யப்பட்ட நற்செயல்களின் பலனெனும் கூட்டமே உருவெடுத்தாற் போன்றவளும், சரத்கால பௌர்ணமி இரவில் உதயமாகும் பூர்ண சந்திரனின் ஒளியையும் மிஞ்சும் அழகிய தாமரை முகத்தில் மென்மையான புன்னகையால் அலங்கரிக்கப்பட்டவளும், கருணை ரஸத்தின் கடலென பக்தர்களைக் காப்பதில் பெயர்பெற்ற கடாக்ஷ பார்வைகளால் மனதை கொள்ளைகொள்பவளும், ஸ்ரீ பர்வதவர்தனீ என்ற பெயருடையவளுமான ஸர்வலோக மாதாவின் ஸந்நிதியை அடைந்து, ஸ்ரீ சங்கர குருவரர் முறையாக தியானித்து துதித்து, பின்னர் புறப்பட்டு, பிரதக்ஷிணம் செய்யும்போது ஸ்ரீ நடராஜர் மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்து, சண்டிகேஶ்வரரின் அனுமதியுடன் தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார்.
परेद्युः,
यस्य दर्शनमात्रेण मुक्तिरित्युच्यते बुधैः ।
यद्देशगमना लोकाः मुच्यन्ते सर्वपातकैः ॥ १३ ॥
संसाराम्बुधिमग्नलोकनिवहाः कूलं प्रयातुं परं
जात्यन्धा इव सन्ततं सुसरणेरज्ञानतस्तत्र च ।
कामक्रोधमदादिदुष्टविलसज्जन्तुव्रजैरावृते
कुर्वाणा भ्रमणं प्रयान्ति परमं पारश्च यत्स्नानतः ॥ १४ ॥
மறுநாள்,
யாருடைய தரிசனத்தால் மட்டுமே முக்தி கிடைக்குமோ, எந்த பிரதேசத்தை தரிசிப்பதால் உலகங்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறதோ, எங்கு நீராடுவதால் அஞ்ஞானத்தால் நல்வழியிலிருந்து பிறவிக் குருடர்கள் போல தொடர்ந்து அலையும், ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிய காமம், கோபம், அஹங்காரம் போன்ற தீமைகளின் கூட்டத்தால் சூழப்பட்ட மக்கள் கூட்டம், எங்கு பரகதியை அடைய முயல்கிறார்களோ.
दुष्टग्रहाविष्टजना नितान्तं
कष्टं वहन्तो बहुमन्त्रतन्त्रैः ।
श्रमं प्रपद्याधिकमन्ततो य-
द्देशं गतास्ते सुखिनो भवन्ति ॥ १५ ॥
प्रायश्चित्ततैरप्यनिर्वत्या ये जनार्जिता दोषाः ।
यस्य स्पर्शनमात्रात्कलयन्ति पलायनं स्वयं ते हि ॥
தீமையான க்ரஹபலன்களினால் பீடிக்கப்பட்டவர்கள், பல மந்திரங்கள் தந்திரங்கள் இருந்தும் தீவிர துன்பம் அனுபவிப்பவர்கள், அதிக சோர்வடைந்து இறுதியில், எந்த இடத்தை அடைந்ததும் மகிழ்ச்சி அடைகிறார்களோ
பிராயஶ்சித்த கர்மங்களாலும் கூட நீக்க முடியாத மக்களின் தோஷங்கள், எந்த [இடத்தின்] ஸ்பரிசத்தால் மட்டுமே தாமாகவே பறந்தோடி விடுகின்றனவோ
तत्तादृशं सर्वसुखैकहेतुं
श्रीरामसेतुं प्रति यातुकामः ।
प्रस्थाय तस्मात्सह सर्वलोकैः
प्रापाशु तं देशिकसार्वभौमः ॥ १७ ॥
அனைத்து சௌபாக்கியங்களுக்கும் ஒரே காரணமான அத்தகைய ஸ்ரீராமஸேதுவிற்கு செல்ல விரும்பி, அனைத்து மக்களுடனும் அங்கிருந்து புறப்பட்டு, ஸர்வலோககுரு விரைவாக அந்த இடத்தை அடைந்தார்.
अनन्तरदिने च श्रीमहागुरूदयात्प्राक् स्वेनापि सज्जेन भवितव्यमिति मनीषयेव महोदयपुण्यकालेऽपि झडिति समागते सेतुस्नानकरणमेव महान्विशेषः तत्रापि महोदयपुण्यकाले स्नानं विशेषतरं ततोऽपि जगदाचार्यवर्यश्रीमहास्वामिसन्निधौ स्नानं विशेषतममित्यभिप्रायेण नानादेशसादरसमागतैः जनसहस्रनिचयैः क्षौद्रपटले मक्षिकबृन्दैरिव निरन्तरं कवचिते मार्गे निरवकाशे श्रीगुरुवरोऽपि उषःकालोचितं स्वीयनिखिलनियममपि यथावत् विधाय महता जनसङ्घेन साकं पूर्वमेव श्रीरामधनुष्कोटौ सज्जीकृतं नारिकेलपर्णनिर्मितम् अतिपवित्रतमं स्थानमभजत् ।
மறுநாள், ஶ்ரீமஹாகுரு எழுவதற்கு முன்பே தாமும் தயாராக வேண்டும் என்ற ஆர்வத்தினால், மஹோதய புண்ய காலமும் சீக்கிரம் வந்திருந்த போதிலும் – ஸேதுவில் நீராடுவதே மிகவும் சிறப்பானது, மஹோதய புண்ய காலத்தில் நீராடுவது அதைவிட சிறப்பானது, மேலும் ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஸந்நிதியில் நீராடுவது அதைவிட சிறப்பானது – என்ற எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து மரியாதையுடன் கூடியிருந்து, தேனீக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக அடைக்கப்பட்ட தேனடையைப் போல இடைவெளியின்றி பாதையை நெரிசலாக்கியிருந்தனர். சிறந்த ஜகத்குருவும், விடியற்காலைக்கு உசிதமான அனைத்து காலை அனுஷ்டானங்களையும் முறையாக செய்து முடித்து, பெருங்கூட்டத்துடன் ஸ்ரீ ராமரின் தனுஷ்கோடியில் தென்னை ஓலைகளால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட மிகவும் பரிசுத்தமான இடத்திற்குச் சென்றார்.
श्रीगुरूत्तमस्तदा महोदयाभिधे दिने
पूर्वपश्चिमोज्ज्वलत्समुद्रयोश्च सङ्गमे ।
सचापकोटिनामके स्वभृत्यवर्गवेष्टितो
मुहुर्मुहुर्न्यमज्जदात्तकौतुको यथाविधि ॥ १८ ॥
பின்னர் உத்தம குரு, மஹோதயம் என அழைக்கப்படும் அந்நாளில், பிரகாசிக்கும் கிழக்கு மற்றும் மேற்கு ஸமுத்ரங்களின் ஸங்கமத்தில், தனுஷ்கோடி என்ற இடத்தில், தனது பரிவாரங்கள் புடை சூழ, மிகுந்த மகிழ்ச்சியுடன் விதிப்படி பலமுறை மூழ்கினார்.
ततः तत्तीर्थमध्यात्पुञ्जीभूतैरिव राजतचूर्णैः अतिपवित्रतमैः अच्छाच्छसिकतासमूहैः भासमानं तत्कूलप्रदेशमासाद्य परिगृहीतशुष्कशाट्यन्तरः श्रीजगदाचार्यवर्यः तत्कालोचितं स्वीयमनुष्ठानं विधिवन्निर्वत्य तत्र संमिलितानां विद्वन्मणीनां भूसुरनिकराणां यथार्हं कौशेयपीताम्बर-कम्बल-कनकादीनि बहूनि दानानि कृत्वा अवशिष्टेभ्योऽपि सर्वेभ्यः प्रधानाधिकारिमुखेन बहूनि दानान्यकार्षीत् । एवं श्रीगुरुवरनवमेघवर्षितं सुवर्णादिकमधिगतवन्तः सकला लोका इत्थं स्तोतुमुपाक्रमन्त ।
பின்னர், அந்த புனித ஜலத்தின் நடுவிலிருந்து வெள்ளி பொடியின் குவியல்கள் போல தோன்றும் மிகவும் பரிசுத்தமான, தெளிவான வெண்மணல்களால் பிரகாசிக்கும் ப்ரதேசத்தில் கரையை அடைந்த, ஸ்ரீ ஜகதாசார்யர், காய்ந்த வேறு வஸ்த்ரம் தரித்து, அந்த நேரத்திற்கான அனுஷ்டானங்களை முறையாக செய்தார். கூடியிருந்த சிறந்த வித்வான்கள் மற்றும் பிராம்ஹணர் குழுக்களுக்கு பட்டு மற்றும் பிற உயர்ந்த வஸ்த்ரங்கள், கம்பளிகள், தங்கம் மற்றும் பிற பொருட்கள் போன்ற பல தானங்களை தகுதிக்கேற்ப வழங்கி, பிரதான நிர்வாகி மூலம் மற்ற அனைவருக்கும் பல தானங்களை வழங்கினார். இவ்வாறு ஸ்ரீ ஜகத்குரு புதிய மேகம் போல பொழிந்த தங்கவர்ஷம் மற்றும் பிற பொருட்களைப் பெற்று, அனைத்து மக்களும் அவரை இவ்வாறு புகழத் தொடங்கினர்.
भोजो नाम पुरा बभूव नृपतिः दाता कवीनां परं
कश्चित् किञ्चिदिति क्वचिद् विलिखितो ग्रन्थे परं दृश्यते ।
लोकाचार्यवराभिधोऽयमधुना भूमौ नवीनाम्बुदः
सर्वेषामपि वाञ्छिताधिकमहो स्वर्णाम्बु संवर्षति ॥
கவிஞர்களுக்கு கொடை அளிக்கும் போஜன் என்ற அரசன் ஒருவர் முற்காலத்தில் இருந்தார் என்று வெறுமனே எங்கோ ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைக் மட்டும் காணப்படுகிறது. ஆனால் லோககுருக்களில் உத்தமர் என அழைக்கப்படும் இவர் இப்போது பூமியில் ஒரு புதிய மேகமாக, அனைவரின் விருப்பங்களுக்கும் அதிகமாக பொன் மழையைப் பொழிகிறார் அன்றோ!
अन्ये च,
महोदय इतीरिते महितपुण्यकालेऽधुना
समस्तकलुषच्छिदि प्रथितरामसेताविह ।
महेशमहिमोज्ज्वलद्भुवनदेशिकेन्द्रान्तिके
विधाय किल मज्जनं तदुचितञ्च लब्धं फलम् ॥
மற்றவர்களோ:
இப்போது மஹோதயம் என்று போற்றப்படும் இந்த புண்ய காலத்தில், அனைத்து பாவங்களையும் அழிக்கவல்ல புகழ்பெற்ற ராமஸேதுவில், சிவனின் தேஜஸ்ஸுடன் பிரகாசிக்கும் உத்தம ஜகத்குருவின் அருகில், நாம் நமது ஸ்நானத்தை செய்து அதன் உரிய பலனைப் பெற்றோம்
इतरे च,
श्रीकाञ्चिकामकोटीशाः जगद्गुरुवरा इमे ।
महान्तः सर्वदा भान्तु स्वदानाल्पितकल्पकाः ॥
பிறரோ:
ஸ்ரீ காஞ்சி காமகோடியின் பீடாதிபதிகளான இந்த ஜகத்குருக்கள், இந்த மஹான்கள், தங்கள் தானங்களால் கற்பக விருட்சங்களாகி எப்போதும் விளங்கட்டும்
इत्याद्यनेकप्रकारं वर्णितनिजरवमुखरितनिखिलदिङ्मुखाः सकललोकाः श्रीमदाचार्यवर्यचरणसरोजयुगलं प्रणम्य लब्धतदीयदिव्यानुग्रहाः स्वस्वनिवासस्थानमवापुः । श्रीगुरुशेखरोऽपि तस्मन्निर्गत्य श्रीचन्द्रमौलीश्वरसदनं प्रतिपद्य यथाक्रमं पूजोपक्रममतानीत् ।
இவ்வாறு பல விதங்களில், அனைத்து மக்களும், வர்ணித்த புகழால் அனைத்து திசைகளையும் எதிரொலிக்கச் செய்து, சிறந்த ஸ்ரீ ஆச்சார்யரின் பாதகமல இணையடிகளை வணங்கி, அவரது திவ்யமான கிருபையைப் பெற்று, தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினர். ஸ்ரீ குருசேகரும், அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரரின் ஸந்நிதியை அடைந்து, முறைப்படி பூஜையைத் துவங்கினார்.
अथ तत्रैव धनुष्कोटौ स्थित्वा प्रतिवासरं सेतुस्नानपूर्वकं नवरात्रमहोत्सवपूजां सानन्दं सविशेषञ्च विधाय तत्रत्यानां सर्वेषामप्यभ्यधिकां मुदमुत्पादयामास श्रीदेशिकेन्द्रः।
அதன்பின் அங்கேயே தனுஷ்கோடியில் தங்கி தினமும் ஸேதுஸ்நானம் செய்து நவராத்ரோத்ஸவ பூஜையை ஆனந்தமாகவும் விசேஷமாகவும் செய்து அங்குள்ளவர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்தினார்.
सारस्वतं पूजनमत्र कृत्वा
परेद्युरस्मात्स महान्गुरूत्तमः ।
निर्गत्य रामेश्वरपूर्निवासि-
लोकार्थितः तत्पुरमाप तूर्णम् ॥ २२ ॥
பின்னர்,மறுநாள் ஸரஸ்வதி பூஜையை முடித்து ஜகத்குரு அங்கிருந்து சென்று மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ராமேஶ்வரத்தினை மிக விரைவாக வந்தடைந்தார்.
तत्र स्थितार्यनिकरैः समहाजनैश्व
संपूर्णभक्तिभरितैर्निजशक्तियोग्यम् ।
सर्वैरपूज्यत महागुरुराट् स्वकीय
वाचाझरीभिरखिलान् समतोषयच्च ॥ २३ ॥
அங்கே முழுமையான பக்தியினாலும் தனது யோகசக்தியாலும் , பெருமைமிக்க குருவானவர் அங்கே உள்ள ப்ராம்ஹணர்கள் மற்றும் பெருமக்கள் கூட்டத்தினால் சூழப்பட்டிருந்தார். ஜகத்குரு அனைவராலும் வழிபடப்பட்டார். தமது பேச்சு எனும் நீர்வீழ்ச்சியால் அவர் அனைவரையும் மிகவும் மகிழ்வித்து நிறைவடையச் செய்தார்.
तदानीं-
नटेशार्य इति ख्यातः मधुरापुरभूषणम् ।
गुरुपादाब्जसेवायै प्राप रामेश्वरं पुरम् ॥ २४ ॥
அப்போது:
மதுரை நகரத்தினை அலங்கரிக்கும் நடேசய்யர் என்று அறியப்படும் ஒருவர், குருவின் பாத கமலங்களுக்கு சேவை செய்ய ராமேஶ்வர நகரத்தை அடைந்தார்.
सद्यः श्रीगुरुपादवन्दनकृते साकं सुपुष्पैः फला-
न्यदाय प्रथमं निवेद्य तदनुज्ञातस्तदीयान्तिकम् ।
प्राप्तः पुष्पफलानि तत्र च नयन् श्रीमान्नटेशः प्रभुः
साष्टाङ्गं प्रणिपातनं समतनोदानन्दपूर्णान्तरः ॥
முதலில் ஸ்ரீ குருவின் பாதங்களை வழிபட்டு நல்ல மலர்களுடன் பழங்களை ஸமர்ப்பித்து, பின்னர் அவர் அனுமதி பெற்று, புகழ்பெற்ற நடேசய்யர், அங்கு மலர்களையும் பழங்களையும் கொண்டு வந்து, இதயம் மகிழ்ச்சியால் நிறைந்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
श्रीगुरुवरः प्रणम्योत्थाय सभक्तिश्रद्धं साञ्जलिबन्धं च तिष्ठन्तं तं नटेशार्यम् अनवरत-निसर्ग-निष्यन्दि-करुणा-प्रवाह-विराजमान-निज-कटाक्ष-वीक्षणस्य पात्रीकृत्य कोमलतराल्प-मन्दस्मितालङ्कृतमुखारविन्दः ‘अपि कुशलम्’ इत्यप्राक्षीत् ।
பக்தியும் மரியாதையும் கொண்டு வணங்கி எழுந்து கைகூப்பி நின்ற நடேசய்யரை பார்த்த ஸ்ரீ ஜகத்குருவானவர், இயல்பான முடிவில்லா கருணை வெள்ளம் பாயும் தனது கடாக்ஷத்தை அளித்து, தாமரை முகத்தில் மென்மையான சிறு புன்னகை அலங்கரிக்க, “எல்லாம் நன்றாக இருக்கிறதா?” என்று வினவினார்.
नटेशार्यः – तत्र भवदव्याजानुग्रहाचरमभाजनीभूतानामस्मादृशानामकुशलमिति वार्तायाः का प्रसक्तिः ।
गुरुवरः – किमधुना मधुरात एव आगमनम् ?
नटेशार्यः – तस्मादेवागच्छामि
श्रीगुरुवरः – द्वित्राणि वासराणि सहैव स्थातुं शक्यते वा
नटेशार्यः – सर्वदा श्रीमद्भिः साकमेव स्थातव्यमित्येवाभिप्रायः तथापि लौकिककर्मपिशाचिकया बलात्समाकृष्टः मदीयाभिप्रायानुसारं श्रीमदाज्ञामनुष्टातुमशक्नुवन् अपराधीभवामि।श्रीगुरुवरः – सर्वेऽपि कर्मवशगा एव तत्रापि बहुजनोपकारपराणां गृहस्थमार्गावलम्बिनां कथं कर्म त्यक्तुं शक्यते ? अत एव “नहि देहभृताशक्यं त्यक्तुं कर्माण्यशेषतः” इति गीताचार्येणापि वर्णितं नानापराधलेशोऽपि किं भवत्यन्यो निवेदनीयांशः
நடேஶய்யர்: தங்களின் காரணமில்லா கிருபைக்கு பாத்திரமாக ஆகியுள்ள எங்களைப் போன்றவர்களுக்கு, சௌக்யம் என்று சொல்வதற்கு தேவை தான் என்ன?
ஜகத்குரு: நேராக மதுரையிலிருந்து வந்திருக்கிறீர்களா?
நடேஶய்யர்: ஆம், அங்கிருந்துதான் வருகிறேன்.
ஸ்ரீஜகத்குரு: இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்திருக்க முடியுமா?
நடேஶய்யர்: தங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம், ஆனால் உலக கடமை என்னும் பிசாசால் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு, என் விருப்பப்படி தங்கள் கட்டளைகளை பின்பற்ற முடியாமல் போவதற்கு குற்றவாளியாகிறேன்.
ஸ்ரீஜகத்குரு: அனைவரும் கர்மத்தால் கட்டுண்டவர்கள். குறிப்பாக பல மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள இல்லறத்தாருக்கு, கர்மத்தை எப்படி கைவிட முடியும்? அதனால்தான் கீதாசார்யனாலும் கூட “சரீரம் உள்ளவர்களால் முற்றிலும் கர்மங்களை முற்றிலும் கைவிட முடியாது” என்று சொல்லப்பட்டது. அதனால் துளியும் குற்றமில்லை. வேறு ஏதேனும் தெரிவிக்க வேண்டுமா?
नटेशार्यः – नास्त्यधिकं निवेदनीयं अथापि किश्चित् विज्ञापये। बहोः कालादारभ्य तत्रभवत्सन्निधौ असकृन्निवेदितो मदीयमनोरथोऽधुना सफलीकरणीय इति
श्रीगुरुवरः – ‘कोऽसौ मनोरथः ?’
नटेशार्यः –
मधुरा मधुरा कार्या धन्याश्च जनसञ्चयाः ।
श्रीमतां विजयेनेति या कृता प्रार्थना च सः ॥
श्रीगुरुवरः – तत्रत्याः सर्वेऽपि श्रीमठागमनमभिलषन्ति वा ?
नटेशार्यः – प्रायः सोत्सुकाः प्रतिपालयन्ति श्रीमतां विजयम्
श्रीगुरुवरः – “श्रीताम्रपर्णीतीरविराजत्पुण्यतीर्थक्षेत्रस्नानदर्शनार्थं गम्यते ; तन्नगरमार्गेणैव प्रयातव्यमिति भाति ; तदानीं तत्र द्वित्राण्यहानि विलम्बनेन भवत्प्रार्थनां सार्थां कुर्मः” इति न्यवेदयत् ।
नटेशार्यः – अधुनैव धन्योऽस्मि इतः प्रभृति श्रीमद्विजययात्रां प्रतीक्षमाणा भवामः ।
श्रीगुरुवरः – वारद्वयानन्तरमेव तत्रागन्तुं शक्येतेति प्रतिभाति ।
नटेशार्यः – श्रीमतां सौकर्यानुसारं भवतु (इत्युत्थाय प्राणंसीत्)
श्रीगुरुवरः – किमिदानीमेव गन्तव्यम्?
नटेशार्यः – श्वः अवश्यं तत्र स्थातव्यं साम्प्रतमेव धूमशकटागमनसमयः श्रीमदाज्ञानुसारं कर्तुं सज्जोऽस्मि ।
श्रीगुरुवरः – तदधुनैव याहि दीयते प्रसादः ; रे कृष्ण, आनीयतां प्रसादः
कृष्णः – (तथा करोति)
நடேஶய்யர்: தெரிவிக்கவேண்டியது வேறு ஒன்றுமில்லை. இருப்பினும் ஒன்றை மட்டும் ஸமர்ப்பிக்க விரும்புகிறேன். நெடுங்காலமாக, தங்கள் ஸந்நிதானத்தில் என் ஹ்ருதயத்தின் ஆசையை மீண்டும் மீண்டும் ஸமர்ப்பித்துள்ளேன் – அது இப்போது நிறைவேற வேண்டும்.
ஸ்ரீஜகத்குரு:”என்ன அந்த ஆசை?
நடேஶய்யர்:
தங்களின் விஜயத்தால் மதுரை இன்னும் இனிமையாக்கப்பட வேண்டும். அதன் மக்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இதுதான் என்னால் செய்யப்பட்ட பிரார்த்தனை.
ஸ்ரீஜகத்குரு: அங்குள்ள அனைத்து மக்களும் மடத்தின் வருகையை விரும்புகிறார்களா?
நடேஶய்யர்: கிட்டத்தட்ட அனைவரும் தங்களின் விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.”
ஸ்ரீஜகத்குரு: நாங்கள் புனித தாம்ரபரணி நதியின் புனித தலங்களில் நீராட மற்றும் தரிசனத்திற்காக செல்கிறோம். அந்நகரத்தின் (மதுரை)வழியாக செல்ல வேண்டியிருக்கிறது என தெரிகிறது. அப்போது இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்கி உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவோம்.
நடேஶய்யர்: இப்போதே நான் பாக்கியம் பெற்றவன். இனி தங்களின் விஜய யாத்திரையை எதிர்பார்த்திருப்போம்.
ஸ்ரீஜகத்குரு: இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கு வர முடியும் என தெரிகிறது.
நடேஶய்யர்: தங்கள் சௌகர்யப்படி நடக்கட்டும் (என்று எழுந்து வணங்கினார்.)
ஸ்ரீஜகத்குரு: இப்போதே புறப்படுகிறீர்களா?
நடேஶய்யர்:”நாளை கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும்.இப்போது ரயில்வண்டி வரும் நேரம். தங்கள் கட்டளைக்கேற்ப செயல்பட தயாராக உள்ளேன்.”
ஸ்ரீஜகத்குரு: இப்போதே செல்லுங்கள். பிரஸாதம் கொடுக்கப்படும். கிருஷ்ணா, பிரஸாதத்தைக் கொண்டு வா.”
(கிருஷ்ணன் அவ்வாறே செய்கிறார்)
श्रीगुरुवरः नटेशार्यमाहूय तं प्रसादमर्पयति स्म । सोऽपि गृहीत्वा वन्दनपूर्वकं प्राप्तानुज्ञः स्वनगरमगात् ।
ஸ்ரீ குருவரர், நடேஶய்யரை அழைத்து, அவருக்கு பிரஸாதத்தை கொடுத்தார். அவரும், அதைப் பெற்று வணங்கி, அனுமதி பெற்று தனது நகரத்திற்குச் சென்றார்.
रामेश्वरे गुरुवरः स महान्समस्तै-
राराधितो दिवसपञ्चकमादरेण ।
श्रीरामनाथपदपङ्कजपुण्यतीर्थ-
संसेवनेन समयं गमयेत्समोदम् ॥ २७ ॥
ராமேஶ்வரத்தில், உத்தம மஹாகுரு, ஐந்து நாட்கள் அனைவராலும் மரியாதையுடன் வழிபடப்பட்டு,ஸ்ரீ ராமநாதரின் பாத கமலங்களிலும் புண்ய தீர்த்தங்களிலும் சேவை செய்து மகிழ்ச்சியுடன் காலத்தை செலவிட்டார்.
इत्थं कृपाभरजुषा गणपत्यभिख्य
श्रीमद्गुरोर्मृडवधूकरुणाप्तिहेतोः ।
पञ्चापगेशकविना रचितेऽत्र चम्पू-
ग्रन्थे समाप्तिमगमत्स्तवकस्तृतीयः ॥ १८ ॥
இவ்வாறு கணபதி என்ற பெயருடன் அனுக்ரஹிக்கப்பட்ட (வித்யா)குருவின் கருணையால், சிவனின் துணைவியின் அருளைப் பெறுவதற்காக, கவிஞர் பஞ்சாபகேச சாஸ்திரிகளால் இயற்றப்பட்ட இந்த சம்பூ நூலில், மூன்றாவது அத்தியாயம் முடிவுற்றது.