॥ श्रीमदखिलाण्डेश्वरीताटङ्कप्रतिष्ठामहोत्सवचम्पूः ॥
ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் பிரசுரத்தால் பொயு 1923 -ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது
கும்பகோணத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கரபகவத்பாதாச்சார்யரின் கிருபை மிக்க அனுக்ரஹம் பெற்ற மஹாமஹோபாத்யாய விருது பெற்ற பைங்காநாடு ப்ரஹ்மஸ்ரீ ரா. கணபதி சாஸ்திரிகளின் சிஷ்யரான பைங்காநாடு பஞ்சாபகேஶ சாஸ்திரிகளால் இயற்றப்பட்டது
॥ श्रीः ॥
॥ श्रीगुरुभ्यो नमः ॥
॥ श्रीताटङ्कप्रतिष्ठामहोत्सवचम्पूः ॥
प्रथमस्तबकः
कैलासाचलतो महीमधिगतः श्रीशंकराख्यां वहन्
जित्वा योऽखिलदुर्मतानि परितः षण्णां मतानामपि ।
कृत्वा स्थापनमाशु काञ्चिविलसच्छ्रीकामकोटीरिते
पीठे स्थापितवान्स्वशिष्यमपि नः शंभुः सुखायास्तु सः ॥
அந்த ஶம்புவானவர் நமக்கு சுகத்தை அளிக்கட்டும். அவர் கைலாயத்திலிருந்து ஶங்கராச்சார்யார் என்ற பெயருடன் பூமியில் அவதரித்து, அவைதிக மார்க்கங்களை வென்று ஷண்மதங்களை ஸ்தாபித்தார். அவர் தனது சிஷ்யர்களை காஞ்சியில் விளங்கும் காமகோடி பீடத்தில் நிறுவினார்.
किं च –
लोकत्राणपरायणः करुणया स्वानर्हकूर्मादिमा-
न्वेषान्तोषयुतो विधाय बहुधा शैलूषवद्यः प्रभुः ।
क्षेमं चाक्षयमातनोत् त्रिजगतां सन्त्रासितानां परै
र्वैकुण्ठः स महानकुण्ठमाहिमा पायादपायात्सदा ॥ २ ॥
மேலும்,
குறையற்றவரும், குன்றாத பெருமை கொண்டவரும், உலகத்தை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டவருமான வைகுண்டவாஸியான விஷ்ணு நம்மைக் காத்து, அழியாத நல்வாழ்வை அருளட்டும். தனது மேன்மைபொருந்திய தன்மையிலிருந்து இறங்கி, கருணையினால் ஒரு நடிகரைப் போல தாம் ஏற்கவேண்டியிராத (கீழ்மையான) ஆமை முதலான பல அவதாரங்களை எடுத்த அந்த பிரபு பெருந்துன்பங்களை நீக்குபவர்.
अपि च
दोषात्कालकृतात्पराहतधियां निर्भक्तिकानां नृणा-
माविष्कृत्य निजं प्रभावमतुलं कारुण्यतः केवलम् ।
मद्भक्तिं भवदुःखनाशनचणां याऽजीजनत्सा सती
चित्ते भातु सदापि मे भगवती माताखिलाण्डेश्वरी ॥
காலத்தின் போக்கில் நடந்த தவறுகளால் குன்றிய புத்தியுள்ள, பக்தி இல்லாத மனிதர்களுக்கு, “எனது பக்தியே இவ்வுலகில் துன்பம் நீங்குவதற்கு காரணம்” என்று ஆவிர்பவித்து அறிவித்த அந்த தேவி அகிலாண்டேஶ்வரி என் மனதில் ஒளிரட்டும்.
इदं च
राज्ञा द्वारवतीजगद्गुरुवरैर्दत्तं प्रसिद्धं मह-
ल्लब्ध्वा यो बिरुदं समस्तविबुधैर्मान्यं महानैपुणीम् ।
साहित्ये सरसेऽवहच्च सदुपन्यासेषु शास्त्रेषु च
श्रीमान्सोऽनिशमान्तरे गणपतिः शास्त्री गुरुर्भातु मे ॥
மேலும்
அரசனாலும் த்வாரகா ஜகத்குருக்களாலும் கொடுக்கப்பட்ட புகழ்பெற்ற விருதுகளை பெற்று, அனைத்து வித்வான்களாலும் மதிக்கப்படும் பெரும் நிபுணத்துவத்தைப் பெற்று, எளிதில் பொழியும் ஸாஹித்யத்திலும், நல்ல உபன்யாஸங்களிலும் சாஸ்திரங்களிலும் வல்லவரான ஸ்ரீமான் கணபதி சாஸ்திரி என்னும் குரு எப்போதும் என் மனதில் தோன்றி அதை ஒளிரச் செய்யட்டும்.
एतच्च,
देवि त्वत्कृपयैव वक्तुमधुना किञ्चिद्यतेऽहं सुतः
भक्त्या केवलमत्र वाणि भवती मातानुगृह्णाति चेत् ।
वाङ्मे जन्म च संभजेत्सफलतामेतां कृतिं पश्यता-
मानन्दश्च भवेन्न चेद्विधिवधु स्यात्तेऽपवादो ध्रुवम् ॥
ஓ தாயே! உன் கருணையால் மட்டுமே, உன் மகனாகிய நான் பக்தியால் மட்டுமே சிறிது பேச முயல்கிறேன், உன் அருள் என் மீது இருந்தால். என் பேச்சிலிருந்து பிறந்த இந்த படைப்பு பலன் பெறட்டும். அதை பார்ப்பவர் மகிழ்ச்சி அடையட்டும். அப்படி இல்லையெனில், நிச்சயமாக ப்ரஹம்னின் மனைவியே தவறு உன் மீது தானே!
अखिलाण्डनायिकायाः कलितं काञ्चीलसज्जगद्गुरुभिः ।
कर्णाभरणस्थापनमहमुद्दिश्याद्य कथ्यते किञ्चित् ॥ ६ ॥
காஞ்சியில் திகழும் ஜகத்குருவால் அகிலாண்டேஶ்வரியின் காது அணிகலன் அணிவிக்கப்பட்டதைப் பற்றிய சிறு விவரம் இன்று என்னால் சொல்லப்படுகிறது.
तथा हि
रम्यो माधवमाधवोज्ज्वलमहागारव्रजालङ्कृतं
हारीभूतमरुद्वृधाहरिसरित्तीर्थैः पवित्रैः परैः ।
युक्तं मुक्तनिवासयोग्यविभवं वित्तास्तिकैर्मण्डितं
चोलेषु प्रथितं चकास्ति नगरं श्रीकुम्भघोणाभिधम् ॥
சோழதேசத்துள் கும்பகோணம் என்ற புகழ்பெற்ற நகரம் பிரகாசிக்கிறது. இளவேனில் காலம் போன்ற அழகிய, செழிப்பான கோயில்கள் லக்ஷ்மியின் நாதனைப் (விஷ்ணு) போல ஒளிர்கின்றன. வாழ்வதற்கு தக்க இடங்களும், செல்வமும், நல்ல ஆஸ்திக மக்களும் கொண்டது இப்பிரதேஶம். புனிதமான மருத்வ்ருதா (காவேரி) மற்றும் அரிசிலாறு நதிகளாலும் தீர்த்தங்களாலும் மேலும் புனிதமாக்கப்பட்ட பரிசுத்தமான விஷ்ணு க்ஷேத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, செல்வச்செழிப்பால் அனுக்ரஹிக்கப்பட்ட நகரங்களாலும் கிராமங்களுடனும் மிளிர்கிறது.
मासे मासे रचितमतुलं चोत्सवं विष्णुगौरी-
नाथादीनामितरनगरग्रामतो मोदयुक्तैः ।
द्रष्टुं प्राप्तैर्मनुजनिचयैः पूरिते राजमार्गे
यातुं यस्मिन्दृढबलवताप्याशु नो शक्यते हि ॥ ८॥
விஷ்ணு மற்றும் கௌரியின் நாதனான சிவபெருமானின் திருவிழாக்களைக் காண மாதந்தோறும் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வரும் கூட்டத்தால் பெரிய வீதிகள் நிரம்பி வழிகின்றன. மிக்க வலிமை கொண்டவர்களால் கூட அவற்றை எளிதாக கடந்து செல்ல முடியாது.
यस्मिन्कवेरतनुजातटमाश्रितं त-
त्सायंप्रगे प्रथितकर्मठविप्रबृन्दम् ।
आलोक्य वालिन इवैष च ऋश्यमूकः
के मेनिरे भुवि कलेर्विषयो न हीति ॥ ९ ॥
எவ்விடம் கவேரரின் மகளான (காவேரியின்) கரையில் காலையும் மாலையும் அனுஷ்டானங்களைச் செய்யும் பக்தியுள்ள பிராம்ஹணர்களின் கூட்டத்தைப் பார்த்து, வாலி ரிஷ்யமூக மலையைப் பார்ப்பதைப் போல உள்ள (மதங்கனின் சாபத்தால் நுழைய முடியாமல்), கலிபுருஷனின் ஆட்சிக்குள் இவ்விடம் இருக்கிறது என்று யாரும் நினைக்க மாட்டார்கள்!
सह्योद्भवा-हरिनदी-कृतरेखया य
द्धाता कलेर्न विषयो नगरं तवेति ।
प्राबोधयत्किल पुरैव ततो विहाय
तत्सर्वतः कलिरसौ कुरुते विहारम् ॥ १० ॥
ஸஹ்யாத்ரியிலிருந்து (மேற்குத் தொடர்ச்சி மலை) பிறந்த காவேரி நதியின் எல்லையால் குறிக்கப்பட்ட நகரங்களை பிரம்ஹா கலியிடம், ‘இவை உன் ஆட்சிக்குட்பட்டது அல்ல’ என்று அறிவித்தது போல இவ்விடத்தை தவிர்த்து, கலி மற்ற எல்லா இடங்களிலும் வஸிக்கிறது.
कुम्भेशनागेश्वरचक्रपाणिश्रीशार्ङ्गधन्वादिमदेववर्यान् ।
योगीशवत्स्वान्तरिदं विधाय विराजते पुण्यनदीतटे यत् ॥
எப்புனித நதியின் கரையில், கும்பேஶ்வரர், நாகேஶ்வரர், சக்ரபாணி, ஸ்ரீ சார்ங்கபாணி போன்ற வழிபடத்தக்க தெய்வங்களும் யோகிகளின் இதயங்களில் வசிப்பது போல இப்புண்ய நதிக்கரையின் தடத்தினை விரும்பி வசிக்கின்றனர்.
महामघाख्ये बृहदुत्सवे च
पुरे प्रतिद्वादशवत्सरं मुदा।
निजां जनिं यत्र च सार्थयन्ति
तीर्थेऽतिपुण्ये कृतमज्जना जनाः ॥ १२ ॥
மிகவும் புனிதமான இத்தலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நகரத்தில் நடைபெறும் மஹாமகம் என்ற பெரிய திருவிழாவின் போது, இப்புனித நீரில் நீராடி தங்கள் பிறவிகளை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் மக்கள்.
यत्किल, नाकमिव सहस्रनयनदर्शनीयविभवम्, अलकापुरमिव धनपतिसेवितम्, रजतगिरिरिव कलेशमूर्द्धन्यभूषितं, तुहिनगिरितटमिव सर्वमङ्गलाश्रयं, निखिलनगरीशेखरीभूतं विराजतेतराम् ।
(இந்நகரம்) ஆயிரம் கண்களால் (இந்திரனின்) காணத்தக்க மகிமையுடைய ஸ்வர்க்கத்தைப் போலவும், குபேரன் (செல்வத்தின் தலைவன்) ஆளும் அலகாபுரி போலவும், சிவனால் உச்சியில் அலங்கரிக்கப்பட்ட கைலாஸ மலை போலவும், எல்லா மங்களங்களின் இருப்பிடமான இமயமலை போலவும், எல்லா நகரங்களின் முடிமணியாகவும் மிகவும் பிரகாசிக்கிறது;
यच्च क्षीराम्भोधिमिव अनर्घरत्नाकरम् , लक्ष्मीजनकं च, विन्ध्याटवीतलमिव विविधपुण्डरीकभास्वरं , कनकभूधरमिव विबुधनिकानिवासालङ्कृतं, गाण्डीवधरमिव सततधर्मोज्ज्वलम्, असकृदागच्छन्ति संसेवितुं सकला अपि जनाः ।
மேலும் அது விலைமதிப்பற்ற ரத்தினங்களின் களஞ்சியமும் லக்ஷ்மியின் பிறப்பிடமுமான பாற்கடல் போலவும்; பல்வேறு தாமரைகளால் பிரகாசிக்கும் விந்திய காட்டுத்தரை போலவும்; தேவதைகளின் வாசஸ்தலங்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்மலை போலவும்; தர்மத்துடன் என்றும் ஒளிரும் காண்டீவதாரியான அர்ஜுனன் போலவும் – எல்லா மக்களும் மீண்டும் மீண்டும் பார்க்க வருகிறார்கள்.
येन च, महेश्वरशरीरेणेव विभूतिभास्वता, नारायणकटितलेनेव पीताम्बरमनोहरेण, विधातृपुरेणेव सतत-वेदाध्ययन-ध्वनि-पवित्रितेन, नाकनायकेनेव अनिमेष-लोचन-दर्शनीय-निजमहिम्ना, अधरीक्रियन्ते सकलान्यपि नगराणि ॥
மேலும் இது, விபூதியால் பிரகாசிக்கும் சிவபெருமானின் திருமேனி போலவும்; மஞ்சள் நிற பட்டாடைகளினால் மனத்தை கவரும் நாராயணனின் இடை போலவும், வேத அத்யயன ஒலியால் எபோதும் புனிதமாக்கப்பட்ட பிரம்மலோகம் போலவும், இமைக்காத கண்களுடைய தேவர்களுக்கு மஹிமை தெரியும் ஸ்வர்க்கத்தின் தலைவனான இந்திரனைப் போலவும் – மற்ற எல்லா நகரங்களையும் கீழ்ப்படுத்துகிறது.
यस्मै च, लङ्कापुरायेव पुण्यजनाधिष्ठिताय, निशीथाकाशतलायेव [द्यु]सद्गणमण्डिताय, तापसहृदयायेव कल्मषविहीनाय, शारदशशितेजसे इव सुधोज्ज्वलसद्माभिरामाय, स्पृहयन्ते बृन्दारकबृन्दाण्यापि ।
லங்கையில் புண்யஜனர்கள் (அரக்கர்கள்) இருப்பதால் அதனை ஜயிக்க தேவர்கள் விரும்பினார்கள். (கும்பகோணத்திலோ புண்யம் செய்யும் ஜனங்கள் இருக்கிறார்கள்.) த்யுஸத் என்னும் நக்ஷத்ர கூட்டங்கள் மிளிரும் இரவு நேர ஆகாயத்தில் தேவர்கள் வஸிக்கிறார்கள். (இங்கோ கோவில்களில் த்யுஸத் எனத்தக்க பல தேவதைகள் உள்ளனர்.) தவசிகளில் ஹ்ருதயத்தில் மாசு கிடையாது என்பதால் தேவர்கள் வாழ்கிறார்கள். (இவ்வூரிலும் அவ்வாறே.) சரத் கால சந்த்ர ப்ரகாஶத்தைக் கண்டு (சந்த்ரனின் கலைகளைப் பருக) தேவர்கள் ஆசைப்படுகின்றனர். அது போல் இங்கு ப்ரகாஶிக்கும் மாளிகைகள் கொண்ட வீடுகள் உள்ளன. ஆகவே தேவர்களும் இங்கு வசிக்க விரும்புகிறார்கள்.
यस्माच्च, वासन्तपद्माकरादिव द्विजाल्यामोदकरात् , दिनमणेरिव सन्मार्गराजमानात् ,पङ्कजभूमुखचतुष्टयादिव सर्वदा सरस्वतीविहारमण्डपभूतात्, कल्पमहीरुहादिव वाञ्छिताखिलफलवितरणचणात्, निखिल-वैदिक-लौकिककार्थ-निर्वहण-योग्यानि वस्तूनि नयन्ति देशान्तराणि ।
வஸந்த காலத்து தாமரைக்குளத்திலிருந்து த்விஜ (பறவைக்) கூட்டங்கள் மகிழ்வடைவது போல் இங்கு த்விஜ (அந்தணர்கள்) கூட்டங்கள் மகிழ்கின்றன. ஸூர்யன் பெரியதோர் பாதையில் இருப்பது போல் இவ்வூர் பெருஞ்சாலை வழியே உள்ளது. தாமரையில் பிறந்த பிரமனின் நான்கு முகங்களைப் போல் இவ்வூரும் சரஸ்வதியின் இன்பத்திற்கு என்றும் அரங்கமாக உள்ளது. கற்பகத்தருவைப் போல் விரும்பிய பழங்கள் (பயன்கள்) அனைத்தும் வழங்கத் திறன்கொண்டது. அத்தகைய இவ்வூரிலிருந்து வைதிக மற்றும் லௌகிக நோக்கங்களை நிறைவேற்றத் தகுந்த பொருட்களை மற்ற இடங்கள் எடுத்துக்கொள்கின்றன.
यस्य च, मलयाचलस्येव चारुचन्दनभासितस्य, पातालपुरस्येव सन्नागमण्डलमण्डितस्य, वाराणसीनगरस्येव विश्वनाथ-विशालाक्षी-शोभितस्य, नन्दनवनस्येव अनवरताखिल-पुष्प-संपूर्णस्य, समागच्छन्ति सानन्दं सर्वे निवासाय ।
மேலும் அழகிய சந்தனத்ததின் ஸுகந்தம் கூடிய மலய மலை போலவும், நாக சபையால் அலங்கரிக்கப்பட்ட பாதாள லோகம் போலவும், விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷியால் அழகுபடுத்தப்பட்ட வாராணஸீ நகரம் போலவும், எப்போதும் எல்லா மலர்களாலும் நிறைந்த புனித தோட்டம் போலவும் – அனைவரும் இங்கே மகிழ்ச்சியுடன் தங்க வருகிறார்கள்;
यस्मिंश्च, युद्धभूतल इव गजाश्वरथपत्तिनिबिडिते, गन्धर्वनगर इव गीतवादित्रमनोहरे, वाल्मीकाश्रम इव अजस्र-बोधित-श्रीराम-कथा-प्रसङ्गे, द्वारकानाथ इव सदानन्द-लोक-विलसिते, स्थितानि अतिकृपणेभ्योऽपि धनाकर्षण-समर्थान्यापण-बृन्दानि ।
மேலும் யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையால் நெரிசலான போர்க்களம் போலவும்; பாடல்கள் மற்றும் இசைக் கருவிகளால் மனதைக் கவரும் தேவலோக நகரம் போலவும், ஸ்ரீ ராமனின் கதையின் முடிவில்லா விவரிப்புடன் கூடிய வால்மீகி மஹரிஷியின் ஆசிரமம் போலவும், உலகில் நித்தியமான ஆனந்தத்தை உண்டாக்கும் துவாரகா நகரம் போலவும் உள்ள இவ்வூரில் மிகவும் கஞ்சனிடமிருந்தும் கூட செல்வத்தை ஈர்க்கும் திறன் கொண்ட கடைத் தெருக்கள் உள்ளன.
यत्रोन्नतान्सह्यभवातटस्थान्
श्रीनारिकेलाख्यतरून्फलाढ्यान् ।
विलोक्य पान्था ब्रुवते मरुद्वृधा-
प्रभावतो भान्ति भृशं द्रुमा इमे ॥ १३ ॥
எங்கே ஸஹ்யமலையிலிருந்து பிறந்த காவேரியின் கரையிலிருக்கும் காய்கள் காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்களை பார்த்த வழிப்போக்கர்கள் இம்மரங்கள் நிச்சயம் காவேரியின் மஹிமையால் வளர்கின்றன என்று சொல்லிச் செல்கிறார்களோ,
अपि च – यत्र स्थिताः,
कावेर्याः पयसो रुचिः समधिका स्वर्गस्थनद्या इति
भ्रान्तिं नाकनिवासिनां चिरभवां विध्वंसनाय द्रुतम् ।
मूलापीतकवेरजोदकमिमे श्रीनारिकेलाः फले-
ष्वाहृत्याशु निवेदितुं सुरपुरं यान्तीति मन्येऽधुना ॥
மேலும் எங்கே,
ஸ்வர்க்க நதியான கங்கையின் இனிமை காவேரியின் நீரை விஞ்சும் என்று – ஸ்வர்க்கவாசிகளிடையே நீண்டகாலமாக நிலவும் கருத்தை விரைவாக அடியோடு அகற்ற, இப்புனித தென்னை மரங்கள், காவேரியின் ஆழத்திலிருந்து நீரை தங்கள் பழங்களில் சேகரித்து, இப்போது அதற்கான சான்றை அளிக்க ஸ்வர்க்கத்திற்கு விரைகின்றன என நான் எண்ணுகிறேன்.
पतिनिकटनिवासः शास्त्रलोकैकमान्यः
सततमपि सतीनां स्यादिति स्वं पतिं सा।
जडनिधिमपि शीघ्रं प्राप्तुकामेव वेगात्
प्रवहति किल पूता सह्यजा यत्र मोदात् ॥ १५ ॥
ஸஹ்ய மலைகளில் பிறந்த புனிதமான காவேரி, சாஸ்திரங்கள் பெண்ணின் உரிய இடம் கணவனின் அருகில் என்று கூறுவதால், தாமதமின்றி அவரை அடைய ஆவலுடன் இருப்பதைப் போல ஸமுத்திரத்தை (தன் நாதனை) நோக்கி (ஸமுத்ரம் ஓட்டம் இல்லாததால் ஜ“ட”த்தின் நிதி போல் இருந்தாலும் அது ஜ“ல”-நிதியாகவும் இருப்பதால் தான் சுறுசுறுப்பாக) மகிழ்ச்சியுடன் விரைந்து பாய்கிறாள். (ட- ல- இரண்டிற்கும் அபேதம் உண்டென்பர்.)
किं च, एतादृशकवेरसुताधिकूलं विराजमानाः
அத்தகைய காவேரியின் கரையில் இருப்பவை
मठास्त्रिचतुरा इह प्रथितकर्मठानां सदा
जपादिविधिचोदितं कलयितुं च कर्मादरात् ।
लसन्ति किल दर्शनक्षणविदग्धचेतोमला
सुबिल्वपनसादिभिः परिवृताश्च पुण्यद्रुमैः ॥ १६ ॥
கர்மங்களை செய்வதில் ஈடுபட்டவர்கள் நிறைந்த மூன்று நான்கு மடங்கள் இங்கு விளங்குகின்றன. ஜபம் முதலாய விதிக்கப்பட்ட கர்மாக்களை பக்தியுடன் செய்ய, வெறும் பார்வையிலேயே மனங்களைப் புனிதப்படுத்தி ஒளிர்கின்றன, வில்வம் மற்றும் பலா போன்ற புனித மரங்களால் சூழப்பட்டுள்ளன.
एतन्मठद्वारदेशालङ्कारभूताः –
पूतावातचलद्दलाभिधकरैरश्वत्थभूमीरुहा
हे लोका इह सह्यजामलपयःपूरे महापुण्यदे ।
स्नात्वा संसृतिघोरदुःखशमनं कृत्वा फलं जन्मनः
सद्यः स्वीकुरुतेति भान्ति कृपया संबोधयन्तीव नः ॥
இந்த மடத்தின் நுழைவாயிலை அலங்கரிக்கும்:
தூய்மையான காற்றில் அசையும் அரச மரங்களின் இலைகள் சொல்வது போல் தோன்றுகிறது:
“மக்களே! பெரும்புண்ணியம் அளிக்கும் இத்தூய காவேரி நீரின் ஓட்டத்தில், ஸம்ஸாரத்தின் கொடிய துன்பத்தை நீக்கி வாழ்க்கையின் நோக்கத்தை அடையுங்கள். இதை உடனே பெற்றுக்கொள்ளுங்கள்!” என்றிவ்வாறு மரக்கூட்டங்கள் கருணையுடன் அழைப்பதாய் தோன்றுகிறது.
अस्मिन्निस्तुलवस्तुविस्तृतवणिग्वीथीव्रजालङ्कृते
कावेर्या करुणालयेन कमलानाथेन कामद्रुहा ।
अन्यैश्चास्तिकभूसुरैः परिवृते पुण्ये पुरे तादृशः
श्रीमच्छङ्करनामलोकगुरुराट् बाभाति रम्ये मठे ॥
விலைமதிப்பற்ற பொருட்கள் நிறைந்த தெருக்களால் அமைந்த இப்புனித நகரில், காவேரி, கருணைமிக்க கமலநாதர் (விஷ்ணு) மற்றும் சிவன், மற்றும் பிற பக்திமான்களான பிராம்ஹணர்களால் சூழப்பட்ட இவ்வழகிய மடத்தினில் ஸ்ரீ சங்கராசார்யர் என்ற பெயர்பெற்ற ஜகத்குரு விளங்குகிறார்.
श्रीमत्काञ्चिपुरीप्रसिद्धविलसच्छ्रीकामकोट्याख्यस-
त्पीठेशं प्रथितात्मवैभवयुतं चाद्वैतविद्यागुरुम् ।
दिक्कूलङ्कषराजदुत्तमयशोव्रातैः सदा भूषितं
श्रीमच्छङ्करदेशिकेन्द्रमनिशं कुर्वे मदीये हृदि ॥ १९ ॥
புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் பிரஸித்தி பெற்ற காமகோடி பீடத்தில் அமர்ந்திருப்பவரும், பிரஸித்தமான உள்ளார்ந்த மகிமை கொண்டவரும், அத்வைத ஞானத்தின் குருவும், அனைத்து திசைகளிலும் பரவும் பெரும் புகழால் என்றும் அலங்கரிக்கப்பட்டவரும், குருமார்களில் சிறந்தவருமான ஸ்ரீசங்கரரை என்றென்றும் என் இதயத்தில் இருத்துகிறேன்.
लोकावनार्थधृतमानुषरूपराज
च्छ्रीचन्द्रशेखरममुं सुकृतैकलभ्यम् ।
दैवे पुरेऽप्यसुलभं जनभाग्यरूपं
संसेव्य केचिदिह तं कृतिनो भवन्ति ॥ २० ॥
உலகைக் காக்க எடுத்த மனித உருவில் ப்ரகாஶிப்பவரும், நல்வினைகளால் மட்டுமே அடையத்தக்கவரும், தேவதைகளின் வாசஸ்தலமான ஸ்வர்க்கத்திலும் கூட கிடைக்காதவரும், மக்களின் நற்செயல்களின் பயனாகத் இருப்பவருமான இந்த ஶ்ரீ சந்திரசேகரரை சிலரே ஸேவித்து பாக்யம் பெறுகிறார்கள்.
यश्च, परमेश्वर इव कलाधिपालंकृतः, सत्याश्रयोऽपि न विषादी नोन्मत्तशेखरः, रमापतिरिव सकल-विबुध-हितकरोऽपि न पुण्यजनशत्रुः, चतुरानन इव परमहंसोपरि विराजमानोऽपि, न जडजातजातः, नाकाधीश इव सुमनोगण-सेवितोऽपि, न शतमन्युः, बाभाति ।
கலாதிபன் என்றால் சந்த்ரன் அல்லது கலைகளைக் கற்றோர். பரமேஶ்வரன் சந்த்ரனை தரித்தவர். ஜகத்குரு கலைஞர்களால் துதிக்கப்பட்டவர். சிவ பெருமான் ஸதீ தேவியின் ஆஶ்ரயமாக இருப்பினும் உன்மத்த (ஊமத்தை) புஷ்பத்தை சூடி விஷத்தை உண்பவராக இருக்கிறார். ஜகத்குருவோ ஸத்யத்தை ஆஶ்ரயித்தவர், மற்றும் அத்தகைய தோஷங்கள் அற்றவர். விபுதர்கள் என்னும் தேவர்களுக்கு ஹிதம் செய்த விஷ்ணு புண்யஜனர்கள் என்னும் அஸுரர்களுக்கு ஶத்ருவானார். ஆனால் ஜகத்குரு விபுதர்கள் என்னும் அறிஞர்களுக்கு ஹிதம் செய்தால் ஆனால் புண்யம் செய்பவர்களுக்கு ஶத்ரு அல்ல. ப்ரஹ்மா பெரிய ஹம்ஸத்தின் மேல் இருப்பவர், ஜடம் என்னும் ஜலத்தில் பிறந்த தாமரையில் பிறந்தவர். ஜகத்குரு பரமஹம்ஸர்களுக்குத் தலைவர் ஆனால் ஜடத்தன்மையற்றவர். நூற்றுக்கணக்கான அஸுரர்களிடம் கோபம் செய்து வதம் செய்ததால் இந்த்ரனுக்கு ஶதமந்யு என்று பெயர். அவன் தேவர்கள் கூட்டத்தால் சேவிக்கப்பட்டவன். ஜகத்குரு நல்லோர்கள் கூட்டத்தால் சேவிக்கப்பட்டவர் ஆனால் அவ்வாறு கோபப்படுபவர் அல்ல.
यं च जनकमिव तुच्छीकृतराज्यमपि न गृहाश्रमाभिलाषिणं, वसिष्ठमिव आदृत-ब्रह्म-वाक्यमपि न कौशिकशत्रुं, मनुमिव सकल-वर्णाश्रम-धर्म-बोधन-चणमपि न राज्यासक्तं , व्यासमिवावेदित-पुराण-पुण्य-कथा-प्रबन्धमपि नाविप्रकुलजातं, सादरं प्रणमन्ति सकला लोकाः ।
ஜனகமன்னன் போல அரசாட்சியையில் ஈடுபாடற்றவராக இருந்தும் அவரைப் போல் இல்வாழ்க்கையை விரும்பாதவராகவும்; வஸிஷ்டர் போல ப்ரஹ்மாவின்/வேதத்தின் வாக்கியங்களை போற்றியும் விஶ்வாமித்திரருக்கு எதிரியல்லாதவராகவும்; மனுவைப்போல அனைத்து வர்ணங்கள் மற்றும் ஆசிரம தர்மங்களை விரைவாக போதித்தும் அவரைப் போல் பூமியை ஆள்வதில் ஈடுபடாதவரும்; வியாஸர் போல புராணங்களின் புனித கதைகளை விவரிப்பவராக இருந்தும் பிராம்ஹண வம்சத்திற்கு வெளியே பிறக்காதவராகவும் உள்ள இவரை அனைவரும் மரியாதையுடன் வணங்குகிறார்கள்.
येन च, पङ्कजपतिनेव द्विजचक्रामोदकारिणापि न कुवलयद्वेषिणा, धर्मेणेव सूर्यानन्द-जनकेनापि न दण्डधरेण, वरुणेनेव शीत-स्वभावेनापि न जडपतिना, यक्षेश्वरेणेव महेश्वर-बद्ध-प्रीतिनापि न किन्नरेशेन, विध्वंस्यन्ते विनत-जनतान्तरस्थ-तमो-बृन्दानि ।
தாமரைகளின் தலைவனான சூரியனைப் போல – பிராம்ஹணர்களை / பறவைகளை மகிழ்வித்தும் அல்லி மலரிடத்தே (பூ மண்டலத்தில்) விரோதமல்லாதவராய்; (ஸூர்யனின் புத்ரனாகிய) யமதர்மன் போல சூரியனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினும் தண்டிக்கும் கோலை ஏந்தாதவர்; வருணன் போல குளிர்ந்த ஸ்வபாவம் கொண்டும் ஜலத்திற்கு (ஜடத்திற்கு) நாதனல்லாதவர்; யக்ஷர் தலைவனான குபேரன் போல சிவனிடம் பக்தி கொண்டும் கின்னரர்களுக்கு தலைவராக இல்லாதவர் – தன்னை வேண்டுவோரின் அடர்ந்த அக இருளை அழிக்கிறார்.
यस्मै च, भारतायेव धर्म-विजय-वृत्तान्त-प्रकटन-परायापि न कृष्णचरिताश्रयाय, रामायणायेव सुमन्त्रालोचनमहितायापि न खर-वध-बोधनपराय, भागवतायेव भगवन्महिम-वर्णनोत्सुकायापि अस्वीकृत-कुचेलवृत्ताय, देवीभागवतायेव वर्णित-श्रीपरदेवता-स्वरूपायापि न देवतान्तरमहिमासहिष्णवे, समर्पयन्ति सादरं वन्दनानि ।
மஹாபாரதம் போல – தர்மத்தின் வெற்றியை காட்டுவதில் ஈடுபாடு கொண்டவராயினும் கிருஷ்ண சரித்திரத்தை சார்ந்திராதவர் (அதாவது கறுப்பெனும் எந்த ஒரு மாசுமற்ற சரித்திரத்தவர்); ராமாயணம் போல ஸுமந்திரரின் அறிவுரையால் மேம்பட்டும் கரன் (முதலிய அசுரர்) வதையில் கவனம் செலுத்தாதவர்; பாகவதம் போல – தெய்வீக மகிமையை விவரிக்க ஆர்வம் கொண்டும் குசேலரராக இல்லாதவர் (கிழிந்த ஆடை அணியாதவர்); தேவி பாகவதம் போல – பரதேவதையின் தன்மையை விவரித்தும் பிற தெய்வங்களின் மஹிமையை குறைக்காதவர் – அத்தகையவரை அனைவரும் மரியாதையுடன் வணங்குகிறார்கள்.
यस्माच्च, व्याकरणादिव प्रकृतिभ्यः तद्धितानि विधीयतोऽपि[विदधतोऽपि] न पादाङ्गलोपकारिणः, कणादतन्त्रादिवानुमानसाधितेश्वरस्वरूपादपि न प्राधान्येतानङ्गीकृतागमप्रमाणात् , मीमांसातन्त्रादिव आविष्कृताखिल-वैदिक-कर्म-मर्म-स्वरूपायापि फलदातृत्वेनाङ्गीकृतेश्वरात्, वेदान्तदर्शनादिव अद्वैतात्म-स्वरूप-निरूपण-बद्ध-दीक्षादपि अनाविष्कृत-नास्तिक-मत-प्रक्रियात् , सर्वेऽपि स्वस्वसुकृतानुसारं सदुपदेशं गृह्णन्ति ।
வ்யாகரண (இலக்கண) ஶாஸ்த்ரத்தில் ப்ரக்ருதி என்ற ஒரு வேர்ச்சொல்லிலிருந்து தத்திதம் என்ற ஒரு விகுதியை சேர்த்து பாதம் முதலிய சொற்களில் லோபம் (எழுத்து நீங்குவது) ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஜகத்குருவோ ப்ரக்ருதி என்ற பொதுமக்களுக்கு அவர்களது ஹிதத்தை சொல்பவராகி ஆனால் யாருக்கும் எந்த ஒரு லோபமும் (குறைவும்) ஏற்படும்படி செய்யார். வைஶேஷிக ஶாஸ்த்ரம் போல ஜகத்குருவும் ஈஶ்வரன் இருப்பதை நிலைநாட்டும் யுக்திகளைக் காட்டினார். ஆனால் அந்த ஶாஸ்த்ரம் போல் அல்லாமல் ஜகத்குரு வேதத்தை முதன்மை பிரமாணமாக ஏற்பார். மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தைப் போல ஜகத்குருவும் அனைத்து வைதிக கர்ம ஸாரங்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் மீமாம்ஸை போலன்றி கர்மபலன் அளிப்பவராக ஈஶ்வரனை ஏற்பவர். வேதாந்தம் ஆத்மாவின் அத்வைத தன்மையை விளக்குவதில் முனைந்தது. ஆனால் அதிலுள்ள சில யுக்திகள் நாஸ்திகம் (அல்ல எனிலும் அது) போல் தோன்றலாம். ஆனால் ஜகத்குரு ஆஸ்திக முறையிலேயே அனைத்தையும் பேசியவர். இத்தகையவரிடம் அனைவரும் தத்தம் தகுதிக்கேற்ப சரியான போதனையைப் பெறுகின்றனர்.
यस्य च, कैलासस्येव कलेशशिरोमणिभूषितस्यापि न दुर्वर्णाश्रयस्य, तुषारभूधरस्येव सर्वमङ्गलोत्पत्तिकारणभूतस्यापि अजडात्मनः, काञ्चनाद्रेरिव समस्तविबुधालयभूतस्यापि अचापलताभाजः, विन्ध्याचलस्येव विविधप्राणिजीवनहेतोरपि अनाश्रितविषधरस्य, अच्छाच्छयशश्छटाभिर्धवलीक्रियते निखिलं जगन्मण्डलम् ।
சிவனால் அலங்கரிக்கப்பட்டு ஆனால் வெள்ளி அற்ற கைலாஸ மலை போலவும்; மங்களங்களனைத்தையும் உண்டாக்கியும் ஜடத்தன்மையற்ற இமயமலை போலவும்; எல்லா தேவர்களின்/பண்டிதர்களின் வாஸ ஸ்தலமாக இருப்பினும் சபலத்திற்கு விஷயமாகாத பொன்மலையான மேருவைப் போலவும்; பல்வேறு உயிரினங்களை தாங்கியும் விஷப் பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுக்காத விந்திய மலை போலவும் – இத்தகைய மலைபோன்ற இவரது தூய புகழ் கதிர்கள் முழு உலக மண்டலத்தையும் வெண்மையாக்குகின்றன.
यस्मिंश्च शारदगङ्गाप्रवाह इव निर्मलान्तरभास्वरेऽपि न स्वीकृतोन्मत्तशेखरे, सारस्वतझर इव स्वाश्रितपापहरेऽपि नाप्रकटीकृतनिजस्वरूपे, यमुनापूर इव स्वसञ्चारपवित्रितभुवनप्रदेशेऽपि अनङ्गीकृतकृष्णचरित्रे, कावेरीप्रवाह इव समस्तजीवनदानचतुरेऽपि अस्वीकृतभङ्गे, सकलजनचेतांसि सन्ततं रमन्ते ।
(மழைக்காலம் முடிந்த பின்) சரத்காலத்தில் உள்ள கங்கை ப்ரவாஹம் போல – தூய்மையும் அக ஒளியும் கொண்டவர் ஆனால் (கங்காதரனான சிவனைப் போல்) தலையில் ஊமத்தம் பூவை அணியாதவர். ஸரஸ்வதி நதியின் ஓட்டம் போல – பக்தர்களின் பாவங்களை நீக்குபவர் ஆனால் தன்னை மறைத்துக்கொள்ளாதவர். யமுனை வெள்ளம் போல – தன் ஸஞ்சாரத்தால் பிரதேசங்களைப் புனிதப்படுத்தபவர் ஆனால் (யமுனாலோலனான) க்ருஷ்ணனைப் போல் (தந்திரமான) செயல்கள் அற்றவர். காவேரியின் ஓட்டம் போல – அனைவருக்கும் உயிர் கொடுப்பதில் திறமை கொண்டும் வளைவுகள் அற்றவர். இவரிடம் அனைவரின் மனதுகளும் தொடர்ந்து மகிழ்ச்சியடைகின்றன.
तत्तादृशमहिमविराजमानेन श्रीजगद्गुरुसार्वभौमेन हि,
आसेतोरपि चाहिमाद्रिशिखराद्यत्रागतानां मही-
देवानां प्रतिवासरं शशिकलाचूडस्य देव्यास्तथा ।
स्वाद्वन्नं च ससूपपायसघृतापूपं निवेद्यादरा
त्सर्वेषामपि यावदीप्सिततमं सन्दीयते भोजनम् ॥२१॥
இத்தகைய மகிமை மிக்க சிறந்த ஜகத்குருவானவர், தினமும் பருப்பு, பாயசம், நெய் மற்றும் அப்பம் ஆகியவற்றுடன் கூடிய இனிய உணவை சிவன் மற்றும் தேவிக்கு, நைவேத்யம் செய்து ராமஸேது முதல் இமயமலையின் சிகரங்கள் வரை உள்ள பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வேதியர்களுக்கும் அனைவருக்கும் வேண்டும் அளவுக்கு வழங்குகிறார்.
सकलभुवनक्षेमाय दिवानिशमाराधित-श्रीचन्द्रमौलीश्वर-श्रीमहात्रिपुरसुन्दरी-चरणारुणसरसीरुहः श्रीजगदाचार्यवर्यः अवश्यानुष्ठेयं पारायणपाठनपूजनादिकार्यं विना अन्यं च समयं क्वचिदेकान्तस्थाने निजचेतश्चारु-स्फटिक-सिंहासनारोपित-सच्चिदानन्दरूप-परमात्मस्वरूपः गमयेत्समोदम् ।
அனைத்துலக நன்மைக்காக இரவும் பகலும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருடன் வணங்கப்படும் ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியின் சிவந்த தாமரை பாதங்களை ஆராதிக்கும் ஜகத்குரு, பாராயணம், ஶாஸ்த்ர சிந்தனம் மற்றும் பூஜை ஆகிய தன்னால் நித்யம் அனுஷ்டிக்கப்படவேண்டிய கடமைகளைச் செய்யும் நேரம் போக, தனது மனதின் ஸ்படிக சிம்மாசனத்தில் சுத்த சைதன்யமான பரமாத்மாவை நிலைநிறுத்தி தனிமையில் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கிறார்.
अथ कदाचित् तत्तादृशमहिमालङ्कृतं श्रीलोकगुरुवरं श्रीजम्बुकेश्वरक्षेत्रनिवासिनः सर्वे महाजनाः समागत्य कुम्भघोणनगरं श्रीपरमाचार्य-दर्शनोचित-फल-नालिकेरादि-मण्डित-पाणयः श्रीमठमाटीकमानाः सुसमये श्रीलोकाचार्यसन्निधिमधिगम्य सादरं साष्टाङ्गं प्रणिपत्य, उत्थाय बद्धाञ्जलयः तत्रैवातिष्ठन् ।
பின்னர் ஒருமுறை, ஸ்ரீ ஜம்புகேஸ்வரத்தின் சான்றோர் அனைவரும் கும்பகோண நகருக்கு வந்து, ஜகத்குருவின் தரிசனத்திற்கு ஏற்ற தேங்காய் பழம் போன்ற காணிக்கைகளுடன் மடத்தை அணுகி, சுபமான ஸமயத்தில் ஜகத்குருவின் ஸந்நிதியை அடைந்து, மரியாதையுடன் ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, எழுந்து கைகளைக் கூப்பி நின்றனர்.
गुरुवरः – अपि कुशलं भवताम् ?
महाजनाः – कुशलमेव तत्रभवतामनुग्रहेण ।
गुरुवरः – श्रीजम्बुनाथस्य श्रीजम्बुनाथस्य श्रीमदखिलाण्डेश्वर्याश्च अभिषेकार्चनाराधनादिकं सर्वमपि निर्विघ्नमनुष्ठीयते वा ?
महाजनाः – क्रियते यथाशक्ति ।
ஜகத்குரு: தாங்கள் அனைவரும் நலமா?
மக்கள்: தங்கள் அருளால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்.
ஜகத்குரு: தாங்கள் அனைவரும் நலமா?
மக்கள்: தங்கள் அருளால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்.
ஜகத்குரு: ஶ்ரீ ஜம்புநாதர் மற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் ஆராதனைகள் எந்தத் தடையுமின்றி நடைபெறுகின்றனவா?
மக்கள்: எங்கள் சக்திக்கு ஏற்ப அனைத்தும் செய்யப்படுகின்றன.
इत्यावेद्यानुक्षणं तेषां मध्ये धीरतरः लौकिकज्ञः कश्चिदयमेवास्मदभिप्रायाविष्करणस्य समुचितः समय इति निश्चित्य सद्यः प्रणम्य,”अस्ति किञ्चिन्महास्वामिसन्निधौ विज्ञापनीयम्” इति निवेद्य, गृहीततदाज्ञापुरःसरं वक्तुमपाक्रमत ।
இது நடந்து முடிந்தவுடன், அவர்களில் லோகவ்யவஹாரங்களை அறிந்த தைரியமிக்க ஒருவர், “இதுவே நம் எண்ணத்தை வெளிப்படுத்த சரியான நேரம்” என்று முடிவு செய்து, உடனே வணங்கி, “மஹாஸ்வாமிகளின் ஸந்நிதானத்தில் தெரிவிக்க வேண்டிய ஒன்று உள்ளது” என்று கூறி, அவரது அனுமதியைப் பெற்று பேச ஆரம்பித்தார்.
लोकाचार्यप्रथितगुरुणा श्रीमहेशांशभाजा
तस्यै देव्यै कनककलितं यन्त्रराजाञ्चितं तत् ।
भक्त्या दत्तं भुवनसुखदं रत्नताटङ्कयुग्मं
देवी सापि स्फुरति महिता तेन चाद्यापि माता ॥
சிவனின் அம்சமாக விளங்கிய லோகாசார்யர் என்ற பெயர் பெற்றவரால் (சங்கராச்சார்யாரால்) இத்தேவிக்கு பொன்னால் ஆன புனித (ஸ்ரீ)யந்திரம் பொறிக்கப்பட்ட அந்த இரட்டை ரத்தின காதணிகள் பக்தியுடன் அளிக்கப்பட்டன; இன்றும் படைத்தவளான அன்னை அவற்றால் ஒளிர்கிறாள்.
समस्तभुवनक्षेमैककलिताविर्भावायाः भगवत्या श्रीमदखिलाण्डेश्वर्याः तत्रभवच्छ्रीशङ्करभगवत्पादाचार्यवर्यसमर्पितं तादृशं श्रीचक्रात्मकं ताटङ्कयुगलमधुना किञ्चिज्जीर्णं दृश्यते, नातिविलम्बेन तदुद्धारणमारचय्यानुग्राह्या अखिला अपि लोकाः इति ॥ एतद्वचनमाकर्ण्य श्रीगुरुवर्यः “किमस्माभिरेव तज्जीर्णोद्धारणं कर्तव्यम् ?” इत्यपृच्छत् ।
“உலக நன்மைக்காக ஆவிர்பவித்த அன்னை அகிலாண்டேஶ்வரிக்கு ஸ்ரீ சங்கராச்சாரியார் அளித்த ஸ்ரீ சக்ரவடிவிலான காதணிகள் இப்போது சற்று தேய்மானத்துடன் காணப்படுகின்றன. அதிக தாமதமின்றி, அவற்றை புதுப்பித்து அனைவரையும் அனுக்ரஹிக்க வேண்டும்.” இந்த வார்த்தைகளைக் கேட்ட மதிப்பிற்குரிய குருவானவர், “இந்த புதுப்பித்தல் நம்மால் தான் மேற்கொள்ளப்பட வேண்டுமா?” என்று கேட்டார்.
तेऽपि एतद्वचनमाकर्ण्य सञ्जाताशङ्काः सविनयं साञ्जलिबन्धम् – “न तथा निवेदनीयं श्रीमहास्वामिना” इति विज्ञाप्य, तत्तादृश्याः श्रीमदखिलाण्डेश्वर्याः आदौ लोकक्षेमकृते कैलासादवतरता श्रीजगद्गुरुपरमाचार्येण यथाशास्त्रं स्वेनैव तत्ताटङ्कप्रतिष्ठा कृता; ततः मध्ये मध्ये यदा यदा किञ्चिज्जीर्णं भवति तदा तदा श्रीकाञ्चीकामकोटिपीठाधिपेन तादृशपरमाचार्यशिष्यपरम्परागतेन प्राचीनाचार्येणैव समुद्धारितम् ।
அவர்களும் அதைக் கேட்டு, தயக்கத்துடன் விநயத்துடன் கைகூப்பி “மஹாஸ்வாமிகளால் அவ்வாறு சொல்லப்படக்கூடாது.” என்று விஜ்ஞாபித்து “உலக நன்மைக்காக கைலாஸத்திலிருந்து அவதரித்த ஜகத்குருவால் இக்காதணிகள் முதலில் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் பிறகு, அவை சிறிது தேய்ந்தபோதெல்லாம், அப்பரம குருவின் சிஷ்ய பரம்பரையில் வந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபர்களால் மட்டுமே புதுப்பிக்கப்பட்டன” என்று விளக்கினர்.
अधुनापि, माकिं षष्टिसंवत्सरेभ्यः पूर्वं जीर्णमिदं ताटङ्कद्वयमपि एतत्पीठाभिषिक्ताचार्यवर्येणैवोद्धारितम् अतः तद्विषये एतत्पीठाभिषिक्त-गुरुवराणामेवाधिकारः नान्येषाम् । किं वक्तव्यं मादृशसामान्यजनानाम् । तस्मादवश्यमस्मत्प्रार्थनामङ्गीकृत्यानुग्राह्या श्रीमहास्वामिना” इति व्यजिज्ञपन् ।
“இப்போதும், அறுபது ஆண்டுகளுக்கு முன், இக்காதணிகள் தேய்ந்தபோது, இந்த பீடத்தில் ஆசார்யராக அபிஷேகம் செய்யப்பட்ட குருவால் மட்டுமே இவை புதுப்பிக்கப்பட்டன. ஆகவே, இந்த பீடத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஜகத்குருக்களுக்கு மட்டுமே இவ்விஷயத்தில் அதிகாரம் உள்ளது, மற்றவர்களுக்கு அல்ல. எங்களைப் போன்ற சாதாரண மக்களைப் பற்றி என்ன சொல்வது? ஆகவே, மஹாஸ்வாமிகள் எங்கள் வேண்டுதலை ஏற்று எங்களை அனுக்ரஹிக்க வேண்டும்.” என்று விண்ணப்பித்தனர்.
श्रुत्वा वाचं भुवनगुरुणाप्येतदीयां तदानीं
मातुर्देव्याः सकलजगतां कार्यमेतत्पवित्रम् ।
आद्याचार्यैः कलितमपि चानुष्ठितं पूर्वकाले
ह्येतत्पीठस्थितगुरुवरैः कार्यमेतच्च भाति ॥ ४३ ॥
அப்போது அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட ஜகத்குரு, “பழங்காலத்தில் ஆதி ஆச்சார்யர்களால் முதலில் மேற்கொள்ளப்பட்ட லோகமாதாவின் இப்புனித பணி, இந்த பீடத்தில் முன்பிருந்த பூஜ்ய ஜகத்குருக்களால் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் (நாம்) செய்ய வேண்டியதாகவும் தெரிகிறது. “
इत्थं विचिन्त्य जगतीगुरुराट् तदानीं
तेभ्यः सुभक्तिभरितेभ्य इदं ह्यवादीत् ।
चिन्ताधिका न भवतामुचितात्र कार्ये
सङ्कल्पयोग्यमिदमद्य चलेन्महेश्याः ॥ ४४ ॥
இவ்வாறு சிந்தித்து, அதன் பின் ஜகத்குரு, பக்தி நிறைந்த அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “மிகவும் உசிதமான இப்பணியைக் குறித்து அதிகம் கவலை வேண்டாம், இன்று இது அந்த மஹேஸ்வரியின் ஸங்கல்பப்படி தகுந்தவாறு நடந்தேறும்.
अपि च –
सिद्ध्येच्छीघ्रं चैतत्कार्यं ह्यखिलाण्डनायिका-कृपया ।
भवतां संकल्पोऽस्मिन्मा भूत्तत्कार्यमेवमेवेति ॥ ४४ ॥
மேலும்:
மேலும்:
“அகிலாண்டநாயகியின் ஸங்கல்பப்படியே இப்பணி விரைவில் நிறைவேறும். நீங்கள் இதில் இப்படி அப்படி என்று மிகவும் சிந்திக்கவேண்டாம்.”
इत्थं निवेद्य प्रसाददानेनैतानन्वगृह्णन् । तेऽपि सानन्दं प्रसादं गृहीत्वा इतः प्रभृति सर्वदा सर्वे वयं श्रीमहास्वाम्यागमनसमयाकाङ्क्षिण एव भवाम इति वन्दनपूर्वकं विज्ञाप्य स्वग्राममयासिषुः ।
இவ்வாறு சொல்லி, பிரசாதம் கொடுத்து அவர்களுக்கு ஆசி கூறினார். அவர்களும், மகிழ்ச்சியுடன் பிரஸாதத்தை ஏற்று, “இனி நாங்கள் அனைவரும் எப்போதும் மஹாஸ்வாமிகளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்போம்” என்று ஸாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் அறிவித்து, தத்தம் கிராமத்திற்குத் திரும்பினர்
इत्थं कृपाभरजुषा गणपत्यभिख्य
श्रीमद्गुरोर्मृडवधूकरुणाप्तिहेतोः ।
पञ्चागेशकविना रचितेऽत्र चम्पू-
ग्रन्थे समाप्तिमगमत् स्तबकोऽयमाद्यः ॥
இவ்வாறு கணபதி என்ற பெயருடன் கூடிய (வித்யா)குருவின் கருணையால், சிவனின் துணைவியின் அருளைப் பெறுவதற்காக, கவிஞர் பஞ்சாபகேச சாஸ்திரிகளால் இயற்றப்பட்ட இந்த சம்பூ நூலில், முதல் அத்தியாயம் முடிவுற்றது.