॥ श्रीः॥
॥ शिवरहस्ये नवमांशे शङ्करप्रादुर्भावो नाम षोडशोऽध्यायः ॥
சிவ ரஹஸ்யத்தில் 9ம் அம்ஶத்தில் ஶ்ரீ ஶங்கரர் ஆவிர்பவித்தல் என்பதான 16ம் அத்யாயம்
स्कन्द उवाच –
ஸுப்ரஹ்மண்யர் சொன்னார் –
तदा गिरिजया पृष्टस्त्रिकालज्ञस्त्रिलोचनः ।
भविष्यच्छिवभक्तानां भक्तिं संवीक्ष्य विस्मयन् ॥१॥
मौलिमान्दोलयन्देवो बभाषे वचनं मुने ।
शृणु त्वमेभिर्गणपैर्मुनीशैश्च सुरैस्तथा ॥२॥
प्रभावं शिवभक्तानां भविष्याणां कलावपि।
ஓ முனிவரே! அப்போது மலைமகளால் வினவப்பட்டவரான முக்காலமுமுணர்ந்த முக்கண்ணர் வருங்காலத்து சிவபக்தர்களைக் கண்டு ஆஶ்சர்யத்தில் தலையை அசைத்துக்கொண்டு இவ்வாறு பேசலானார் – இந்த கணங்களின் தலைவர்களுடனும் முனிவர்களுடனும் தேவர்களுடனும் (சேர்ந்து) வருங்காலத்தில் – கலியிலும் கூட – வரும் சிவபக்தர்களின் மஹிமையைக் கேட்பாய்!
ईश्वर उवाच –
ஈசன் சொன்னார் –
शृणु देवि भविष्याणां भक्तानां चरितं कलौ ॥३॥
वदामि सङ्ग्रहेणाहं श्रवणाद्भक्तिवर्धनम् ।
गोपनीयं प्रयत्नेन नाऽऽख्येयं यस्य कस्यचित् ॥ ४ ॥
पापघ्नं पुण्यमायुष्यं श्रोतॄणां मङ्गलावहम् ।
கேட்பாய் ஓ தேவி! கேட்பதால் பக்தியைப் பெருக்கக்கூடியதான கலிகாலத்தில் ஏற்படப்போகும் பக்தர்களின் சரிதத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன். இதை பாத்திரமறியாது கூறாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொளல் வேண்டும். (இது) பாபத்தைப் போக்கும், கேட்போருக்கு புண்யம், ஆயுள் மற்றும் மங்கலங்களை நல்கும்.
पापकर्मैकनिरतान्विरतान्सर्वकर्मसु ॥ ५ ॥
वर्णाश्रमपरिभ्रष्टान् अधर्मप्रवणान् जनान् ।
कल्यब्धौ मज्जमानांस्तान् दृष्ट्वाऽनुक्रोशतोऽम्बिके ॥ ६ ॥
ஓ அம்பிகையே! கலியெனும் கடலில் மூழ்கி அனைத்து (நற்) செயல்களை விடுத்து பாபச்செயல்களையே செய்வோரை, வர்ணாஶ்ரம தர்மத்திலிருந்து வழுவியவர்களை, அதர்மத்தை நோக்கி இயல்பாக செல்லும் மக்களைக் கண்டு மனமிரங்கி…
मदंशजातं देवेशि कलावपि तपोधनम् ।
केरलेषु तदा विप्रं जनयामि महेश्वरि ॥ ७ ॥
ஓ மஹேஶ்வரி! ஓ தேவர்களின் தலைவியே! என் அம்சத்திலிருந்து தோன்றுபவராக கலியிலும் தபோதனமாகத் திகழும் ஒரு அந்தணரை கேரளதேஶத்தில் பிறக்க வைப்பேன்।
तस्यैव चरितं तेऽद्य वक्ष्यामि शृणु शैलजे ।
कल्यादिमे महादेवि सहस्रद्वितयात्परम् ॥ ८ ॥
கேள் மலைமகளே! அவருடைய சரிதத்தை இன்று கூறுவேன். ஓ மஹாதேவி! கலியின் தொடக்கத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்…
सारस्वतास्तथा गौडा मिश्राः कर्णाजिना द्विजाः ।
आममीनाशना देवि ह्यार्यावर्तानुवासिनः ॥ ९ ॥
औत्तरा विन्ध्यनिलया भविष्यन्ति महीतले ।
शब्दार्थज्ञानकुशलास्तर्ककर्कशबुद्धयः ॥ १० ॥
ஸாரஸ்வதர்கள், கௌடர்கள் மிஶ்ரர்கள், கான்யகுப்ஜர்கள்(?) ஆகிய ஆர்யாவர்த்தவாசிகளான ப்ராஹ்மணர்கள் ஆமையையும்(?) மீனையும் உண்பவர்களாவர். (இவர்கள்) விந்த்யத்தின் வடக்குப்பகுதியில் பூமியிலேயே (அதிக) ஶப்தார்த்த ஞானம் கூடி ஆனால் தர்க்கத்தினால் மென்மையற்ற புத்தியுடையவர்களாக இருப்பார்கள்.
जैना बौद्धा बुद्धियुक्ता मीमांसानिरताः कलौ ।
वेदबोधितवाक्यानामन्यथैव प्ररोचकाः ॥ ११ ॥
புத்திசாலிகளான ஜைனர்கள், பௌத்தர்கள் (மற்றும்) மீமாம்ஸையில் மூழ்கியவர்களும், கலியில் வேதம் கூறும் வாக்யங்களின் (அர்த்தத்தை உண்மையான ஸித்தாந்தத்தைக் காட்டிலும்) வேறு விதமாக வர்ணிப்பவர்கள்…
प्रत्यक्षवादकुशलाश्शल्यभूताः कलौ युगे।
मिश्राश्शास्त्रमहाशस्त्रैरद्वैतोच्छेदिनोऽम्बिके ॥ १२ ॥
कर्मैव परमं श्रेयो नैवेशः फलदायकः ।
इति युक्तिपरामृष्टवाक्यैरुद्बोधयन्ति च ॥ १३॥
ஓ அம்பிகையே! கலியுகத்தில் ப்ரத்யக்ஷ(மே சிறந்தது என்ற) வாதத்தில் திறனுடையவர்களாக, பண்டிதர்கள் (ஆனால்) முட்களைப்போல (கெடுப்பவர்களாக) சாஸ்த்ரங்கள் எனும் பெரிய ஆயுதங்கள் கொண்டு அத்வைதத்தை அழிப்பவர்களாக, மேலும் “கர்மமே மிக உயர்ந்தது, ஈசன் (கர்மாக்களின்) பலனைக் கொடுப்பவனல்ல” என்று யுக்தியுடன் கூடிய வாக்யங்களைக் கொண்டு போதிக்கலாயினர்.
तेन घोराः कुलाचाराः कर्मसारा भवन्ति च ।
तेषामुत्पाटनार्थाय सृजामीशे मदंशतः॥१४॥
ஈச்வரியே, இதனால் குலாசாரங்கள் கோரமாகவும் வறட்டு கர்மங்களாகவும் ஆகிவிடும். அவற்றை வேரறுப்பதற்காக என் அம்ஶத்திலிருந்து (ஒருவரை) உண்டாக்குவேன்.
केरले शशलग्रामे विप्रपत्न्यां मदंशतः ।
भविष्यति महादेवि शङ्कराख्यो द्विजोत्तमः॥१५॥
ஓ மஹாதேவி! கேரளத்தில் (காலடி என்று தமிழ்/மலையாளத்தில் சொல்லப்பட்ட) ஶஶலம் என்ற க்ராமத்தில் ஒரு அந்தணரின் மனைவியினிடத்தில் என் அம்ஶத்துடன் ஶங்கரன் என்ற பெயருடைய உத்தம அந்தணர் உண்டாவார்.
उपनीतस्तदा मात्रा वेदान् साङ्गान् ग्रहीष्यति ।
अब्दावधि ततः शाब्दे विहृत्य स सुतर्कजाम् ॥ १६॥
मतिं मीमांसमानोऽसौ कृत्वा शास्त्रेषु निश्चयम् ।
वादिमत्तद्विपवरान् शङ्करोत्तमकेसरी ॥१७ ॥
உபநயனம் ஆன பிறகு தாயாரால் (குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு) அங்கங்களுடன் வேதங்களை ஒரு வருடத்தில் அறிவார். பிறகு வ்யாகரணத்தில் விளையாடி நல்ல தர்க்கத்திலிருந்து வரும் அறிவை (பெறுவதற்கு) மீமாம்ஸை (வேதார்த்த விசாரம்) செய்பவராக சாஸ்த்ரங்களின் (ஸாரமென்ன என்ற) தீர்மானத்தை செய்துகொண்டு, ஶங்கரர் என்ற மிகச்சிறந்த ஸிம்ஹமானது வாதிகள் என்ற மதம் கொண்ட யானைகளை …
भिनत्त्येव तथा बुद्धान् सिद्धविद्यानपि द्रुतम् ।
जैनान् विजित्य तरसा तथाऽन्यान्कुमतानुगान् ॥ १८॥
… பிளக்கும். அவ்வாறே நன்கு வித்யையை பயின்ற பௌத்தர்களையும் ஜைனர்களையும் அவ்வாறே மற்ற துர்மதத்தில் செல்பவர்களையும் வேகத்துடன் விரைவில் வென்று …
तदा मातरमामन्त्र्य परिव्राट् स भविष्यति ।
அப்போது (இந்த தருணத்தில்) அன்னையை ஸம்மதிக்க வைத்து அவர் துறவி ஆகிவிடுவார்.
परिव्राजकवेषेण मिश्रानाश्रमदूषकान् ॥ १९ ॥
xxxxxxxx xxxxxxxx ।
(ஸந்ந்யாஸ) ஆஶ்ரமம் (கூடாது என்று சொல்லி) தூஷிக்கும் பண்டிதர்களை துறவற கோலத்தில் இருந்தே (ஶ்ரீ ஶங்கரர் வாதம் செய்து நிராகரித்து ஸந்ந்யாஸம் ஶாஸ்த்ரத்திற்கு ஸம்மதமானது என்று நிரூபித்தார்.) [இங்கே ஒரு வரி விட்டுப்போயிருப்பதாக தோன்றுகிறது.]
दण्डहस्तस्तथा कुण्डी काषायवसनोऽमलः ॥ २० ॥
भस्मदिव्यत्रिपुण्ड्राङ्को रुद्राक्षाभरणोज्ज्वलः ।
ताररुद्रार्थपारीणः शिवलिङ्गार्चनप्रियः ॥ २१ ॥
தண்டத்தை கையிலேந்தி அவ்வாறே கமண்டலமும் காவி வஸ்த்ரமும் தரித்து சுத்தமாக பஸ்மத்தினால் திவ்யமான த்ரிபுண்ட்ர சின்னம் (துலங்க) ருத்ராக்ஷ ஆபரணம் பொலிபவராய், ப்ரணவம் மற்றும் ஶ்ரீருத்ரத்தின் பொருளுணர்ந்தவராய், சிவலிங்கார்ச்சனத்தில் பிடித்தமுள்ளவராய் …
स्वशिष्यैस्तादृशैर्घुष्यन् भाष्यवाक्यानि सोऽम्बिके ।
मद्दत्तविद्यया भिक्षुर्विराजति शशाङ्कवत् ॥ २२ ॥
ஓ அம்பிகையே! அந்த துறவி பாஷ்ய வாக்யங்களை முழங்குபவராக, அப்படிப்பட்ட தன் (சிறந்த) சிஷ்யர்களுடன் என்னால் கொடுக்கப்பட்ட வித்யையினால் சந்திரனைப் போல ஒளிர்வார்.
सोऽद्वैतोच्छेदकान् पापानुच्छिद्याक्षिप्य तर्कतः ।
स्वमतानुगतान्देवि करोत्येव निरर्गलम् ॥ २३ ॥
அவர் அத்வைதத்தை அழிக்கும் தீயோரை யுக்தியினால் ஆக்ஷேபித்து (அம்மதத்திலிருந்து) ஒழித்து எளிதில் தன் (சுத்தமான) மதத்தை பின்பற்றும்படி செய்வார்.
तथापि प्रत्ययस्तेषां नैवासीच्छ्रुतिदर्शने ।
मिश्राः शास्त्रार्थकुशलास्तर्ककर्कशबुद्धयः ॥ २४ ॥
அப்போதும் அவர்களுக்கு வேதத்தின் கருத்தான (அத்வைதத்தில்) பிடிமானம் ஏற்படவில்லை (ஏனெனில் அந்த) பண்டிதர்கள் சாஸ்த்ர சர்ச்சைகளில் திறமிக்கவர்களாக தர்க்கத்தினால் கடினமேறிய புத்தியுடையவர்கள்.
तेषामुद्बोधनार्थाय तिष्ये भाष्यं करिष्यति ।
भाष्यघुष्यन्महावाक्यैस्तिष्यजातान् हनिष्यति ॥ २५ ॥
(அந்த புத்தி கடினத்திற்கு காரணமான) கலியில் அவர்களை புரிந்து கொள்ளும்படி செய்ய பாஷ்யத்தை செய்வார். பாஷ்யத்தில் கோஷிக்கப்படும் பெருமைமிகு வாக்யங்களால் கலியிலிருந்து உருவான (தோஷங்களை) அழிப்பார்.
व्यासोपदिष्टसूत्राणां द्वैतवाक्यात्मनां शिवे ।
अद्वैतमेव सूत्रार्थं प्रामाण्येन करिष्यति ॥२६॥
வ்யாஸரால் உபதேசிக்கப்பட்ட ஸூத்ரங்களுக்கு (மேலோட்டமாக படித்தால்) த்வைதத்தை (போதிக்கும்) வாக்யங்களின் சொரூபம் உடையவையாக (தோன்றிடினும்), அத்வைதமே சுட்டப்படும் பொருள் என்று ப்ரமாணத்துடன் நிரூபிப்பார்.
अविमुक्ते समासीनं व्यासं वाक्यैर्विजित्य च ।
शङ्करं स्तौति हृष्टात्मा शङ्कराख्योऽथ मस्करी ॥ २७ ॥
அவிமுக்தம் (என்ற பெயர் கொண்ட காசியில் தன்னுடன் வாதத்திற்காக) உடன் அமர்ந்த வ்யாஸரை (ஆதாரமுள்ள) சொற்றொடர்களால் வென்று மகிழ்வுடன் (கீழ்க்கண்டவாறு) சங்கரரைத் தொழுவார் சங்கரர் என்ற பெயர் கொண்ட துறவி.
शङ्कर उवाच –
ஶ்ரீ ஶங்கரர் சொன்னார் –
सत्यं सत्यं नेह नानास्ति किञ्चिदीशावास्यं ब्रह्मसत्यं जगद्धि ।
ब्रह्मैवेदं ब्रह्म पश्चात्पुरस्तादेको रुद्रो न द्वितीयाय तस्थे ॥२८॥
இங்கே பல(வென்பது) இம்மியும் இல்லை (என்பதே) உண்மை உண்மை. இவ்வுலகு உண்மையில் ஈச்வரனென்று அறியத்தக்கது, ப்ரஹ்மத்தையே ஸத்யமாகக் கொண்டது. இது ப்ரஹ்மமே! ப்ரஹ்மமே முன்னும் பின்னும் (உள்ளது). (அந்த) ஒரு சிவனே (இவ்வுலகில் இருக்கிறீர்). இரண்டாவதுக்கு இடம் கொடுக்கவில்லை.
एको देवस्सर्वभूतेषु गूढो नानाकारोद्भासिभानैस्त्वमात्मा।
पूर्णापूर्णो नामरूपैर्विहीनो विश्वातीतो विश्वरूपो महेशः ॥ २९ ॥
பல வடிவங்களுடன் ஒளிரும் காட்சிகளால் எல்லாவற்றிலும் மறைந்து நிற்கும் ஒரே தேவனாகிய நீரே ஆத்மா. முழுமையானவரும், முழுமையற்ற (உலகானவரும்), பெயர் உருவம் அற்று உலகிற்கப்பாற்பட்டவரும், (பெயர் உருவம் கொண்ட) உலக வடிவினரும் ஆன மஹேசன் (நீர்).
भूतं भव्यं वर्तमानं त्वयीशे सामान्यं वै देशकालादिहीनः ।
नो ते मूर्तिर्वेदवेद्यस्त्वसङ्गस्सङ्गीव त्वं लिङ्गसंस्थो विभासि ॥ ३० ॥
நடந்தது நடக்கப்போவது நடப்பது (என்ற முக்காலமும்) ஈசனான உம்மிடத்தில் (உள்ளது ஆனால் நீர்) இடத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்ட (அனைத்து தேச காலங்களுக்கும்) பொதுவானவர். உமக்கு வடிவமில்லை. வேதத்தினாலறியக் கூடியவர் நீர். பற்றற்றவரானாலும் பற்றுள்ளவர் போல் ஶரீரத்திற்குள் காணப்படுகிறீர்.
त्वद्भासा वै सोमसूर्यानिलेन्द्रा भीषैवोदेत्येष सूर्यश्च देवः ।
त्वं वेदादौ स्वर एको महेशो वेदान्तानां सारवाक्यार्थविद्यः ॥ ३१ ॥
உமது ஒளியினால் சந்த்ரன், ஸூர்யன், வாயு, இந்த்ரன் (செயல்படுகின்றனர்). ஸூர்ய தேவன் உம்மிடமுள்ள பயத்தால் (உமது ஆணைக்கு கட்டுப்பட்டு) உதயமாகின்றான். நீர் வேதத்தின் ஆதியிலுள்ள (ப்ரணவமாகிய) அக்ஷர ஸ்வரூபி. ஒன்றேயாகிய மஹேஶர்; வேதாந்தங்களில் உள்ள ஸாரமான (அகண்ட) வாக்யார்த்தமே (உமது) வித்யை.
वैद्योऽभेद्यः सर्वभूताद्यवेद्यः भिद्येत दृष्ट्या तव हृत्तमोऽद्य ।
ओङ्कारार्थः पुरुषस्त्वं हितं च सत्यज्ञानानन्दभूमाऽसि सोम ॥ ३२ ॥
ஓ உமையுடன் கூடியவரே! (நீர்) அழிவற்ற (ஸம்ஸார) வைத்யர், அனைத்து பூதங்களுக்கும் முதன்மையாக அறியத்தக்கவர். உமது பார்வையால் (மட்டும் பக்தர்களின்) ஹ்ருதயத்தில் (உறையும்) இருட்டு இன்றே (உடனே) விலகும். ஓங்காரத்தின் பொருளான (பரம) புருஷன் (நீர்). நல்லதும் (நீர்). ஸத்யம் ஜ்ஞானம் ஆனந்தம் இவற்றின் நிறைவு நீர்.
बद्धो मुक्तो नासि सङ्गिष्वसङ्गी प्राणप्राणो मनसस्त्वं मनश्च ।
त्वत्तो वाचा मनसा सन्निवृत्तास्तवानन्दज्ञानिनो बुद्धभावाः ॥ ३३ ॥
(நீர்) பந்தமுள்ளவரோ மோக்ஷமடைந்தவரோ அல்ல. பற்றுள்ள (ஜீவர்களில் உள்ளுறையும்) பற்றற்றவராக (திகழ்கிறீர்)! உயிருக்குயிரும் மனத்திற்கு மனமும் நீர்! உம்மிடத்திலிருந்து சொற்கள் மனதுடன் (எட்டவியலாமல்) திரும்பிவிடுகின்றன. உமது உண்மையை அறிந்தவர்கள் ஆனந்தத்தையும் ஞானத்தையும் பெற்றவர்கள் (ஆகின்றனர்).
त्वत्तो जातं भूतजालं महेश त्वया जीवत्येतदेवं विचित्रम् ।
त्वय्येवान्ते संविशत्येव विश्वं त्वां वै को वा स्तौति तं स्तव्यमीश ।
किञ्चिज्ज्ञात्वा सर्वभावेन बुद्ध्या त्वामात्मानं वेत्ति देवं महेशम् ॥ ३४ ॥
மஹேச! உலக தோற்றமானது உம்மிடமிருந்து பிறந்தது. இப்படியும் அப்படியும் பலவகையாய் இருக்கும் (இது) உன்னால் உயிர்வாழ்கிறது. (ஊழிக்காலத்தில்) உம்மிடமே இவ்வுலகம் அடங்குகின்றது. யார் தான் துதிக்கத் தகுந்த ஈசனாகிய உம்மையே சிறிதளவேனும் அறிந்து முழு ஶ்ரத்தையுடன் அறிவுடன் ஸ்துதிக்கிறார்? (யார் தான்) பெரும் ஈசனாகிய தேவனாம் உம்மை தா(னே என்று) அறிகிறார்?
ईश्वर उवाच –
इति शङ्करवाक्येन विश्वेशाख्यादहं तदा ।
प्रादुर्बभूव लिङ्गात्स्वादलिङ्गोऽपि महेश्वरि ॥ ३५ ॥
ஈஶ்வரன் கூறுகின்றார் –
ஓ மஹேஶ்வரி! ஶங்கரரின் இத்தகைய வாக்யத்தினால், அப்போது நான் (உண்மையில்) வடிவற்றவனானாலும் அந்த விஶ்வேஶ என்னும் பெயர் பொருந்திய லிங்கத்தினின்றும் வெளிப்பட்டேன்.
त्रिपुण्ड्रविलसत्फालश्चन्द्रार्धकृतशेखरः ।
नागाजिनोत्तरासङ्गो नीलकण्ठस्त्रिलोचनः ॥ ३६ ॥
விபூதி விளங்கும்படியான நெற்றியையும், அரை சந்திரனை தலையணியாகவும், யானைத்தோலை உத்தரீயமாகவும், நீலக் கழுத்தும், மூன்று கண்களும் உடையவனாக…
वरकाकोदरानद्धजटाभारस्त्वयाम्बया ।
तमब्रवं महादेवि प्रणतं यतिनां वरम् ॥ ३७ ॥
சிறந்த நாகங்களால் கட்டப்பட்ட சடைகள் கொண்ட நான் உன்னுடன் கூடி, ஹே மஹாதேவி! வணங்கிய அந்த யதி ஶ்ரேஷ்டரை (நோக்கிக்) கூறலானேன்.
शिष्यैश्चतुर्भिश्च युतो भस्मरुद्राक्षभूषणः । मदंशतस्त्वं जातोऽसि भुवि चाद्वैतसिद्धये ॥ ३८ ॥
நான்கு (பிரசித்த) சிஷ்யர்களோடும் (மற்றவர்களோடும்) கூடி, பஸ்மமும் ருத்ராக்ஷமும் அணிந்தவனாய், அத்வைதத்தை நிலைநிறுத்த பூமியில் எனதம்ஶமாக நீ அவதரித்துள்ளாய்.
पापमिश्राश्रितैर्मागैर्जैनदुर्बुद्धिबोधकैः ।
भिन्ने वैदिकसंसिद्धे अद्वैते द्वैतवाक्यतः ॥ ३९ ॥
துஷ்ட பண்டிதர்களால் நாடப்பட்டவையும் ஜைனர்கள் (முதலிய நாஸ்திகர்களின்) தவறான கொள்கைகளை போதிப்பவையுமான பாதைகளால் த்வைதத்தை (போதிக்கும் யுக்திகள் கொண்ட) வாக்யங்களால் வேதத்தையே அண்டியவர்களுக்கு (மட்டும்) தெரியக்கூடிய அத்வைதமானது பாதிக்கப்பட்டபோது…
तद्भेदगिरिवज्रस्त्वं सञ्जातोऽसि मदंशतः ।
द्वात्रिंशत्परमायुस्ते शीघ्रं कैलासमावस ॥ ४० ॥
அந்த த்வைதமாம் மலையைப் பிளத்தற்கு வஜ்ராயுதமாக எனதம்ஶத்தால் அவதரித்திருக்கின்றாய். உனக்கு ஆயுள் முப்பத்திரண்டு வரை. விரைவில் கைலாயத்தினையடைவாய்!
एतत्प्रतिगृहाण त्वं पञ्चलिङ्गं सुपूजय ।
भस्मरुद्राक्षसम्पन्नः पञ्चाक्षरपरायणः ॥ ४१ ॥
शतरुद्रावर्तनैश्च तारेण भसितेन च ।
बिल्वपत्रैश्च कुसुमैर्नैवेद्यैर्विविधैरपि ।
त्रिवारं सावधानेन गच्छ सर्वजयाय च ॥ ४२ ॥
இந்த ஐந்து லிங்கங்களைப் பெற்றுக் கொள்வாய். விபூதி ருத்ராக்ஷம் தரித்து, பஞ்சாக்ஷரத்தில் திளைத்து, சதருத்ரங்களின் ஆவ்ருத்தியாலும், ப்ரணவத்தினாலும், விபூதியினாலும், வில்வ பத்ரங்களாலும், புஷ்பங்களாலும், பலவித நைவேத்யங்களுடனும், (தினமும்) மும்முறை கவனமுடைய (மனதுடன் இந்த லிங்கங்களை) நன்கு பூஜிப்பாய்! (மேலும்) அனைவரையும் ஜயிக்க செல்!
त्वदर्थे कैलासाचलवरसुपालीगतमहा- समुद्यच्चन्द्राभं स्फटिकधवलं लिङ्गकुलकम् ।
समानीतं सोमोद्यतविमलमौल्यर्चय परम् कलौ लिङ्गार्चायां भवति हि विमुक्तिः परतरा ॥ ४३ ॥
உமக்காக வேண்டி கொண்டுவரப்பட்டதும் சிறந்த கயிலையங்கிரியின் அழகிய மேல்விளிம்பிலிருந்து உதயமாகும் பெரிய சந்த்ரனைப் போல் (ப்ரகாசிப்பதும்) வெள்ளை ஸ்படிகமானதும் சந்த்ரமௌளீஶ்வரர் என்ற பெயரை உடையதுமான (இந்த) உயர்ந்த ஐந்து லிங்கங்களை அர்ச்சிப்பாய். கலியுகத்தில் லிங்கார்ச்சனையால் உயர்வான முக்தியுண்டாகும்.
स शङ्करो मां प्रणनाम मस्करी मयस्करं तस्करवर्यमार्ये ।
सङ्गृह्य लिङ्गानि जगाम वेगात् जेतुं स बुद्धार्हतजैनमिश्रान् ॥ ४४ ॥
ஓ தேவி! அந்த ஸந்ந்யாஸியான ஶங்கரர் பரம மங்களத்தைச் செய்யும் (உள்ளம் கவரும்) திருடர்களில் சிறந்தவனான என்னை நமஸ்கரித்தார். பின் லிங்கங்களை வாங்கிக் கொண்டு புத்தர்கள், அருகர்கள், ஜைனர்கள் (முதலிய) பண்டிதர்களை ஜயிக்க விரைவில் பூமிக்கு சென்றார்.
तद्योगभोगवरसिद्धिविमुक्तिनाम-लिङ्गार्चनाधिगत-दिग्विजयः प्रकामम्।
सर्वज्ञपीठमधिरुह्य विजित्य मिश्रान् काञ्च्यां शिवे तव पुरः स च सिद्धिमाप॥ ४५ ॥
யோகம், போகம், வரம், ஸித்தி, (வி)முக்தி என்ற பெயர்கள் கொண்ட அந்த (ஐந்து) லிங்கங்களின் பூஜையினால் திக்குகள் (அனைத்திலும்) த்ருப்தியுடன் ஜயம் பெற்று, காஞ்சியில் பண்டிதர்களை வென்று ஸர்வஜ்ஞ பீடம் ஏறி, ஹே ஶிவையே, (காமாக்ஷியாகிய) உனது முன்னிலையில் அவர் ஸித்தியடைந்தார்.
(இலக்கணப்படி இதுவரை அனைத்து வினைச்சொற்களும் கடந்தகாலத்தில் இருந்தாலும், தொடக்கத்திலேயே வருங்கால ஶிவ பக்தர்களைப் பற்றிச் சொல்வதாக கூறியமையால், அதுவரை ஏற்பட்டிராத வருங்கால ஶங்கராவதாரத்தைப் பற்றி பகவான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.)
इति श्रीशिवरहस्ये नवमांशे शङ्करप्रादुर्भावे षोडशोऽध्यायः ॥
அத்யாயம் முற்றுப்பெற்றது
நூல் முடிவு பற்றிய குறிப்புகள்: #
- क-ख-ग இம்மூன்று பழமையான பாடங்களிலும் இத்துடன் அத்யாயம் முற்றுப்பெறுகிறது.
- கடைசி ஶ்லோகத்திற்கு பல பாட பேதங்கள் உள்ளன:
- போலகம் ஸ்ரீ ராம ஶாஸ்த்ரிகள் குரு ரத்ன மாலை புஸ்தகம் பின்னிணைப்பு –
क-पाठःतद्योगभोगवरमुक्तिसुमोक्षयोगलिङ्गार्चनात् प्राप्तजयः स्वकाश्रमे। तान् वै विजित्य तरसाऽक्षतशास्त्रवादैर्मिश्रान् स काञ्च्यामथ सिद्धिमाप॥
- ஸரஸ்வதீ மஹால் – ग-पाठः – स्वकाश्रमम्
- குரு ரத்ன மாலை வ்யாக்யானமாகிய ஸுஷமாவில் –
तद्योगभोगवरसिद्धिविमुक्तिनामलिङ्गार्चनात् प्राप्तजयः स्वकाश्रमे ।
तान् वै विजित्य… - நாராயண ஶாஸ்த்ரிகள் தமது Age Of Shankara நூலின் முகவுரையில் காட்டியுள்ளது
तद्योगभोगवरसिद्धिविमुक्तयोग-लिङ्गार्चनाधिगत-दिग्विजयः प्रकामम्।
सर्वज्ञपीठमधिरुह्य विजित्य मिश्रान् काञ्च्यां शिवे तव पुरः स च सिद्धिमाप॥
நான்கு பாதங்களிலும் ஒரே போல் 14 அக்ஷரங்கள் உடையதாக இந்த ஒரு பாடம் தான் உள்ளது. (மற்ற பாடங்களில் இரட்டை படை பாதங்களில் 11 அக்ஷரங்களே உள்ளன. அத்தகைய விஷம வ்ருத்தம் அவ்வளவு ப்ரஸித்தமல்ல.) மேலும் இதில் ஸர்வஜ்ஞ பீடம் ஏறி, இறுதியில் காமாக்ஷியின் எதிரே ஸித்தி அடைந்ததும் சொல்லப்படுகிறது என்பதால் அதிக தகவல்கள் கிடைக்கின்றன.
இதில் நாராயண ஶாஸ்த்ரி பாடத்தில் योग என்ற பதம் இரு முறை வந்துள்ளதால் அதற்கு பதில் नाम என்ற சொல் ஸுஷமாவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ன பெயர்களையுடைய என்ற பொருள் கிடைக்கிறது.
மேலும் विमुक्त என்பதற்கு பதிலாக विमुक्ति என்ற பெயரே ஸுஷமாவில் காணப்படுகிறது. योग भोग என்பவற்றைப் போல் भावार्थप्रत्ययान्तமாகவும் சட்டென்று புரிகிறது. மேலும் புண்ய ஶ்லோக மஞ்ஜரியில் अर्चन्नेव च मुक्तिलिङ्गम् என்றும் ஜகத்குரு பரம்பரா ஸ்தவத்தில் मुक्तिलिङ्गार्चनानन्दविस्मृताशेषवृत्तये என்றும் இருப்பதால் विमुक्ति என்ற ஸுஷமா பாடத்தையே மேற்கொண்டுள்ளோம்.
- போலகம் ஸ்ரீ ராம ஶாஸ்த்ரிகள் குரு ரத்ன மாலை புஸ்தகம் பின்னிணைப்பு –
- இவை தவிர பழைய சுவடிகளில் காணப்பெறாத சில ஶ்லோகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்று தெரிகிறது. அவ்வாறே ஸுஷமாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவ்வெளியீட்டில் அவை சேர்க்கப்படவில்லை.
॥ श्रीः॥
॥ शिवरहस्ये नवमांशे शङ्करप्रादुर्भावो नाम षोडशोऽध्यायः ॥
In the Shiva Rahasya 9th Amsha, 16th Adhyaya by name Shri Shankara’s birth
स्कन्द उवाच –
Subrahmanya said –
तदा गिरिजया पृष्टस्त्रिकालज्ञस्त्रिलोचनः ।
भविष्यच्छिवभक्तानां भक्तिं संवीक्ष्य विस्मयन् ॥१॥
मौलिमान्दोलयन्देवो बभाषे वचनं मुने ।
शृणु त्वमेभिर्गणपैर्मुनीशैश्च सुरैस्तथा ॥२॥
प्रभावं शिवभक्तानां भविष्याणां कलावपि।
O Sage! The three-eyed God who knew the three kalas, thus questioned by the daughter of the mountains, spoke shaking his head in astonishment about the Shivabhaktas of the future. “Listen, alongwith the lords of the ganas, the sages and the devatas, to the greatness of the Shivabhaktas of the future – even in Kaliyuga!”
ईश्वर उवाच –
Ishvara said –
शृणु देवि भविष्याणां भक्तानां चरितं कलौ ॥३॥
वदामि सङ्ग्रहेणाहं श्रवणाद्भक्तिवर्धनम् ।
गोपनीयं प्रयत्नेन नाऽऽख्येयं यस्य कस्यचित् ॥ ४ ॥
पापघ्नं पुण्यमायुष्यं श्रोतॄणां मङ्गलावहम् ।
Listen, O Devi! I will succinctly tell you about the charitam of devotees who will live in Kaliyuga. Listening to it will develop bhakti. This must be kept secret without revealing indiscriminately. This will remove papam, yield punyam to those who hear it and also bestow longevity and auspiciousness.
पापकर्मैकनिरतान्विरतान्सर्वकर्मसु ॥ ५ ॥
वर्णाश्रमपरिभ्रष्टान् अधर्मप्रवणान् जनान् ।
कल्यब्धौ मज्जमानांस्तान् दृष्ट्वाऽनुक्रोशतोऽम्बिके ॥ ६ ॥
O Ambika! Taking pity on people who are drowning in the ocean of Kali, leaving all the (good) deeds and only doing acts that bring papam, and those who fall from Varnashrama dharma and gravitate towards adharma…
मदंशजातं देवेशि कलावपि तपोधनम् ।
केरलेषु तदा विप्रं जनयामि महेश्वरि ॥ ७ ॥
O Maheshvari! O Goddess of the gods! I shall cause to be born in Kerala a person formed from my amsha, a brahmana who is a treasure of tapas even in Kali!
तस्यैव चरितं तेऽद्य वक्ष्यामि शृणु शैलजे ।
कल्यादिमे महादेवि सहस्रद्वितयात्परम् ॥ ८ ॥
Hear O daughter of the mountains! I will tell His story. O great goddess! Two thousand years after the beginning of Kaliyuga…
सारस्वतास्तथा गौडा मिश्राः कर्णाजिना द्विजाः ।
आममीनाशना देवि ह्यार्यावर्तानुवासिनः ॥ ९ ॥
औत्तरा विन्ध्यनिलया भविष्यन्ति महीतले ।
शब्दार्थज्ञानकुशलास्तर्ककर्कशबुद्धयः ॥ १० ॥
Sarasvatas, Gaudas, Mishras, Kanyakubjas(?) – All these brahmanas who dwell in Aryavarta shall eat the turtle(?) and the fish. (They) in the North of Vindhyas, will have (great) knowledge of shabdartha and intellect hardened due to tarka.
जैना बौद्धा बुद्धियुक्ता मीमांसानिरताः कलौ ।
वेदबोधितवाक्यानामन्यथैव प्ररोचकाः ॥ ११ ॥
In Kali, intelligent Jainas, Bauddhas and those engrossed in Mimamsa, who will explain the sentences taught by the Vedas differently (in meaning as compared to their true import)
प्रत्यक्षवादकुशलाश्शल्यभूताः कलौ युगे।
मिश्राश्शास्त्रमहाशस्त्रैरद्वैतोच्छेदिनोऽम्बिके ॥ १२ ॥
कर्मैव परमं श्रेयो नैवेशः फलदायकः ।
इति युक्तिपरामृष्टवाक्यैरुद्बोधयन्ति च ॥ १३॥
O Ambika! In Kaliyuga, those like thorns (despite being) Panditas, adept at arguing that pratyaksha (mundane perception is the best source of knowledge), bearing the great weapons of shastram, with the intent to destroy Advaita further began preaching that “Karma is the most supreme. Ishvara does not bestow the fruit (of karmas)” by means of sentences framed with logic.
तेन घोराः कुलाचाराः कर्मसारा भवन्ति च ।
तेषामुत्पाटनार्थाय सृजामीशे मदंशतः॥१४॥
O Ishvari! Because of this Kulacharas become terrible and merely became the dry performance of karma. I shall create (someone) in my amsha, to uproot these.
केरले शशलग्रामे विप्रपत्न्यां मदंशतः ।
भविष्यति महादेवि शङ्कराख्यो द्विजोत्तमः॥१५॥
O Mahadevi! In Kerala, in the village named Shashala (known in Tamil/Malayalam as Kaladi) a noble brahmana named Shankara who is my own amsha will be born to the wife of a brahmana.
उपनीतस्तदा मात्रा वेदान् साङ्गान् ग्रहीष्यति ।
अब्दावधि ततः शाब्दे विहृत्य स सुतर्कजाम् ॥ १६॥
मतिं मीमांसमानोऽसौ कृत्वा शास्त्रेषु निश्चयम् ।
वादिमत्तद्विपवरान् शङ्करोत्तमकेसरी ॥१७ ॥
After his upanayanam, (having sent to the gurukula) by his mother, he will learn the Vedas with their angas within the span of a year. He will then sport in Vyakarana, and will practice Mimamsa (discussing the meaning of the Veda to attain) knowledge arising out of good tarka, thus determining (the essence of) shastras, the excellent lion Shankara (taking on) the debaters who are like mad elephants…
भिनत्त्येव तथा बुद्धान् सिद्धविद्यानपि द्रुतम् ।
जैनान् विजित्य तरसा तथाऽन्यान्कुमतानुगान् ॥ १८॥
… will break them. Similarly he will quickly (vanquish) the well-versed Bauddhas and Jainas, and all those who walk on these wrong paths…
तदा मातरमामन्त्र्य परिव्राट् स भविष्यति ।
Then with his mother’s consent, He will become a sanyasi.
परिव्राजकवेषेण मिश्रानाश्रमदूषकान् ॥ १९ ॥
xxxxxxxx xxxxxxxx ।
Being in the form of a sanyasi, (Shri Shankara vanquished the panditas) who spoke ill of (sanyasa) ashrama (saying that it should not be taken and thus proved that Sanyasa is accepted by scriptures.). [It appears that a line is missing here.]
दण्डहस्तस्तथा कुण्डी काषायवसनोऽमलः ॥ २० ॥
भस्मदिव्यत्रिपुण्ड्राङ्को रुद्राक्षाभरणोज्ज्वलः ।
ताररुद्रार्थपारीणः शिवलिङ्गार्चनप्रियः ॥ २१ ॥
Bearing the danda in His hand and also the kamandala and wearing a saffron robe, (shining with) the the sacred tripundra sign of bhasma and adorned with a rudraksha ornament, knowing the essence of the Pranava and (Shri)rudram, and fond of the archana of Shivalinga…
स्वशिष्यैस्तादृशैर्घुष्यन् भाष्यवाक्यानि सोऽम्बिके ।
मद्दत्तविद्यया भिक्षुर्विराजति शशाङ्कवत् ॥ २२ ॥
O Ambika! That sage proclaiming the sentences of the bhashya, along with such (qualified) shishyas of his and with the knowledge given by me will shine like the moon.
सोऽद्वैतोच्छेदकान् पापानुच्छिद्याक्षिप्य तर्कतः ।
स्वमतानुगतान्देवि करोत्येव निरर्गलम् ॥ २३ ॥
He will easily vanquish those evil people with his logic, and removing them (from those paths) and will make them follow His (pure) path.
तथापि प्रत्ययस्तेषां नैवासीच्छ्रुतिदर्शने ।
मिश्राः शास्त्रार्थकुशलास्तर्ककर्कशबुद्धयः ॥ २४ ॥
Yet, they still did not believe in (advaita) the purport of the vedas, (it is because) those Panditas skilled in shastra have intellects hardened by tarka.
तेषामुद्बोधनार्थाय तिष्ये भाष्यं करिष्यति ।
भाष्यघुष्यन्महावाक्यैस्तिष्यजातान् हनिष्यति ॥ २५ ॥
In Kali (the reason for such hardened intellects), he will write the bhashya in order to make them understand. By means of the great vakyas proclaimed in the bhashya, He will destroy (the faults) caused due to Kaliyuga.
व्यासोपदिष्टसूत्राणां द्वैतवाक्यात्मनां शिवे ।
अद्वैतमेव सूत्रार्थं प्रामाण्येन करिष्यति ॥२६॥
He will prove with pramana that advaita is the import of the aphorisms expounded by Vyasa that (on superficial reading look as though) they teach dvaita.
अविमुक्ते समासीनं व्यासं वाक्यैर्विजित्य च ।
शङ्करं स्तौति हृष्टात्मा शङ्कराख्योऽथ मस्करी ॥ २७ ॥
In Avimukta (Kashi) winning over Vyasa who sat beside (for debate with him) using sentences (with justification), the sanyasi named Shankara will joyously worship Shankara (as follows).
शङ्कर उवाच –
Shiva said –
सत्यं सत्यं नेह नानास्ति किञ्चिदीशावास्यं ब्रह्मसत्यं जगद्धि ।
ब्रह्मैवेदं ब्रह्म पश्चात्पुरस्तादेको रुद्रो न द्वितीयाय तस्थे ॥२८॥
There is not even a bit that is multiplicity. This is the truth! It is the truth! This world is to be truly known as Ishvara and has Brahman as its truth. This is Brahman. Brahman (is) in front and behind! There is but one Shiva (as you exist). There is no place for a second!
एको देवस्सर्वभूतेषु गूढो नानाकारोद्भासिभानैस्त्वमात्मा।
पूर्णापूर्णो नामरूपैर्विहीनो विश्वातीतो विश्वरूपो महेशः ॥ २९ ॥
You are the atma the one deva who is hidden in appearances shining in various forms. You are Mahesha, the complete, the incomplete (universe), the nameless formless one beyond the universe, and the universe (with name and form).
भूतं भव्यं वर्तमानं त्वयीशे सामान्यं वै देशकालादिहीनः ।
नो ते मूर्तिर्वेदवेद्यस्त्वसङ्गस्सङ्गीव त्वं लिङ्गसंस्थो विभासि ॥ ३० ॥
The past future and present (the three aspects of time) is in you Ishvara, (but) you are beyond space and time. You are formless. You are to be known by the Vedas. Though you are devoid of attachment you are seen as if attached in a body.
त्वद्भासा वै सोमसूर्यानिलेन्द्रा भीषैवोदेत्येष सूर्यश्च देवः ।
त्वं वेदादौ स्वर एको महेशो वेदान्तानां सारवाक्यार्थविद्यः ॥ ३१ ॥
By your light, Chandra, Surya, Vayu and Indra (operate). Suryadeva rises due to the fear of you (respecting your orders). You are the syllable (pranava) at the beginning of the Veda. You are the one Mahesha; You are to be known by the (akhanda) vakyartha the essence of Vedanta
वैद्योऽभेद्यः सर्वभूताद्यवेद्यः भिद्येत दृष्ट्या तव हृत्तमोऽद्य ।
ओङ्कारार्थः पुरुषस्त्वं हितं च सत्यज्ञानानन्दभूमाऽसि सोम ॥ ३२ ॥
O one with Uma! (You are) the indestructible healer (of samsara), one known as the primordial to all elements. By your (mere) glance the darkness (residing in) the heart (of devotees) will be dispelled today (immediately). You are the Paramapurusha who is the essence of Omkara. (You are the) good. You are the ultimate completion of Satyam, jnanam and ananda.
बद्धो मुक्तो नासि सङ्गिष्वसङ्गी प्राणप्राणो मनसस्त्वं मनश्च ।
त्वत्तो वाचा मनसा सन्निवृत्तास्तवानन्दज्ञानिनो बुद्धभावाः ॥ ३३ ॥
You are neither attached nor free of attachment. (You dwell as) the unattached among those (jivas) with attachment. You are the life of life! The mind of mind! Words with the mind (unable to reach you) turn back. Those who realise the truth of you attain jnana and ananda.
त्वत्तो जातं भूतजालं महेश त्वया जीवत्येतदेवं विचित्रम् ।
त्वय्येवान्ते संविशत्येव विश्वं त्वां वै को वा स्तौति तं स्तव्यमीश ।
किञ्चिज्ज्ञात्वा सर्वभावेन बुद्ध्या त्वामात्मानं वेत्ति देवं महेशम् ॥ ३४ ॥
O Mahesha! The apparent world was born from you! In its various forms it subsists because of you. (During pralaya) the world rests in you. Who indeed worships your worship-worthy self even a little knowing who you are and with full shraddha and understanding? (Who indeed) knows you Ishvara, the supreme powerful God, as (one’s own) self?
ईश्वर उवाच –
Ishvara said –
इति शङ्करवाक्येन विश्वेशाख्यादहं तदा ।
प्रादुर्बभूव लिङ्गात्स्वादलिङ्गोऽपि महेश्वरि ॥ ३५ ॥
O Maheshvari! Due to these words of Shankara, though I am (in fact) formless, I manifested out of that Linga named Vishvesha.
त्रिपुण्ड्रविलसत्फालश्चन्द्रार्धकृतशेखरः ।
नागाजिनोत्तरासङ्गो नीलकण्ठस्त्रिलोचनः ॥ ३६ ॥
The forehead radiant with Vibhuti, wearing the half moon on the head, the elephant skin as the upper cloth, with blue neck, three eyes …
वरकाकोदरानद्धजटाभारस्त्वयाम्बया ।
तमब्रवं महादेवि प्रणतं यतिनां वरम् ॥ ३७ ॥
I with the matted locks bound by great snakes, O Mahadevi! along with you told at the great sanyasi who was bowed before me:
शिष्यैश्चतुर्भिश्च युतो भस्मरुद्राक्षभूषणः ।
मदंशतस्त्वं जातोऽसि भुवि चाद्वैतसिद्धये ॥ ३८ ॥
With four (famous) shishyas and (others), wearing bhasma and rudraksha, you were born on this Earth as my amsha to establish advaita.
पापमिश्राश्रितैर्मागैर्जैनदुर्बुद्धिबोधकैः ।
भिन्ने वैदिकसंसिद्धे अद्वैते द्वैतवाक्यतः ॥ ३९ ॥
When Advaita, which is known (only) to those that take refuge in the Vedas, was affected by the paths sought after by the wicked panditas and which teach the faulty principles of Jains (and other nastikas), and the statements (that use logic to teach) dvaita…
तद्भेदगिरिवज्रस्त्वं सञ्जातोऽसि मदंशतः ।
द्वात्रिंशत्परमायुस्ते शीघ्रं कैलासमावस ॥ ४० ॥
You are born as my amsha, like the Vajrayudha to break that mountain that is dvaita. Your lifespan is thirty two. Come to Kailasa soon!
एतत्प्रतिगृहाण त्वं पञ्चलिङ्गं सुपूजय ।
भस्मरुद्राक्षसम्पन्नः पञ्चाक्षरपरायणः ॥ ४१ ॥
शतरुद्रावर्तनैश्च तारेण भसितेन च ।
बिल्वपत्रैश्च कुसुमैर्नैवेद्यैर्विविधैरपि ।
त्रिवारं सावधानेन गच्छ सर्वजयाय च ॥ ४२ ॥
Take these five lingas. Worship them well thrice (daily) with (your mind in) attention, wearing the vibhuti and rudraksha, engrossed in Panchakshara, by repetition of Shatarudra and the Pranava, using bhasma, bilva leaves and flowers and various naivedyas! Go and be victorious!
त्वदर्थे कैलासाचलवरसुपालीगतमहासमुद्यच्चन्द्राभं स्फटिकधवलं लिङ्गकुलकम् ।
समानीतं सोमोद्यतविमलमौल्यर्चय परम् कलौ लिङ्गार्चायां भवति हि विमुक्तिः परतरा ॥ ४३ ॥
Worship these five excellent lingas named Chandramoulishvara, brought for you, of white sphatika, shining like the bright moon rising from the top limb of the great Kailasha mountain. In Kaliyuga, the highest mukti is obtained by the worship of the linga.
स शङ्करो मां प्रणनाम मस्करी मयस्करं तस्करवर्यमार्ये ।
सङ्गृह्य लिङ्गानि जगाम वेगात् जेतुं स बुद्धार्हतजैनमिश्रान् ॥ ४५ ॥
O Devi! That famous Sanyasi, Shankara prostrated before me, who bestows the greatest auspiciousness, and the most excellent among thieves (who steals hearts). Then taking the lingas he went quickly to the earth to defeat Bauddhas, Arhatas, Jainas (and other) scholars.
तद्योगभोगवरसिद्धिविमुक्तिनाम-लिङ्गार्चनाधिगत-दिग्विजयः प्रकामम्।
सर्वज्ञपीठमधिरुह्य विजित्य मिश्रान् काञ्च्यां शिवे तव पुरः स च सिद्धिमाप॥ ४६ ॥
By the worship of those five lingas named yoga, bhoga, vara, siddhi and (vi)mukti, he satisfactorily won in (all) directions, defeated scholars and ascended the Sarvajna Peetam at Kanchi, and in front of you (as Kamakshi), O Shivaa, he attained siddhi.
(Though grammatically all verbs so far are in the past tense, as at the very outset it has been said that future Shiva bhakta-s are being spoken of, one should understand that Bhagavan is speaking about the Shankaravatara which is yet to occur at that time.)
॥ इति श्रीशिवरहस्ये नवमांशे शङ्करप्रादुर्भावे षोडशोऽध्यायः ॥
Adhyaya is complete
Notes on the ending of the text: #
1.The adhyaya ends with this shloka in the three old pāṭha-s क-ख-ग
2.There are different readings of the last shloka :
- In the appendix of the Gururatnamālā book of Polagam Shrirama Sastrigal – – क-पाठः
तद्योगभोगवरमुक्तिसुमोक्षयोगलिङ्गार्चनात् प्राप्तजयः स्वकाश्रमे। तान् वै विजित्य तरसाऽक्षतशास्त्रवादैर्मिश्रान् स काञ्च्यामथ सिद्धिमाप॥
- Sarasvati Mahal – ग-पाठः – स्वकाश्रमम्
- In Sushama Vyākhyā of Gururatnamālā –
तद्योगभोगवरसिद्धिविमुक्तिनामलिङ्गार्चनात् प्राप्तजयः स्वकाश्रमे । तान् वै विजित्य…
- Shown by T.S.Narayana Sastri in foreword to his book Age Of Shankara:
तद्योगभोगवरसिद्धिविमुक्तयोग-लिङ्गार्चनाधिगत-दिग्विजयः प्रकामम्। सर्वज्ञपीठमधिरुह्य विजित्य मिश्रान् काञ्च्यां शिवे तव पुरः स च सिद्धिमाप॥
This is the only pāṭha which has 14 aksharas uniformly in each pāda. (In other pāṭha-s, the even pādas have only 11 aksharas. Such vishama vrttas are not as well-known.). Further, here, additional information such as the ascent to Sarvajna Pīṭham and finally attaining siddhi in front of Kamakshi, are mentioned.
Here in the Narayana Shastri pāṭha, because the word योग occurs twice, the word नाम from Sushama is used. Because of this, the sense of “having these names” is obtained.
Further, instead of the name विमुक्त , the name विमुक्ति is seen in Sushama. Just as योग भोग etc it is easily understood as a भावार्थप्रत्ययान्त. Further, because Punyashloka manjari has अर्चन्नेव च मुक्तिलिङ्गम् and Jagadguru Parampara Stavam has मुक्तिलिङ्गार्चनानन्दविस्मृताशेषवृत्तये , we have taken विमुक्ति based on Sushama Patha.
- Other than this, there are some shlokas which are not found in older manuscripts. However it is evident that these are later insertions. That is how it has been mentioned in Sushama as well. Hence those have not been included here.