Menu

Avataraghattah

श्रीमच्चिद्विलासीय-शङ्करविजयविलासे श्रीमत्-शङ्कर-भगवत्पाद-अवतार-घट्टः ॥ 

पञ्चमोऽध्यायः ॥

श्रीमच्चिद्विलासीय-शङ्करविजयविलासे श्रीमत्-शङ्कर-भगवत्पाद-अवतार-घट्टः ॥

சித்விலாஸர் என்ற சிறந்த துறவியிடம் அவரது சீடரான விஜ்ஞானகந்தர் என்பவர் – “குருவே! தாங்கள் தினமும் ஶ்ரீ ஶங்கராசார்யரின் சரித்ரத்தைப் படிக்கிறீர்களே! கலியின் தோஷத்தை நீக்கி தத்துவ ஞானத்தை அளிக்க வல்லது அது என்று தாங்கள் கூறியுள்ளீர்களே! அப்போது சீடனான என்னிடம் கருணை கூர்ந்து முழுவதுமாக அதனை சொல்லியருள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதன்படி அவரால் உபதேசிக்கப்பட்ட ஶ்ரீ ஶங்கர சரித்ரமே சித்விலாஸீய ஶங்கர விஜயம் எனப்படுகிறது. இது 1973ம் வருடம் பாரதீய வித்யா பவனம் என்ற ஸ்தாபனத்தின் வெளியீடான பாரதீய வித்யா என்ற நூல்தொடரில் 33ம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல்தொடரின் ஆசிரியர்கள் பேரா. ஜயந்த க்ருஷ்ண தவே மற்றும் பேரா. உபாத்யாயா என்பவர்கள். இதனை நான்கு வேறு கையெழுத்து பிரதிகளிலிருந்து பரிசோதித்து வெளியிட்டவர் மும்பையில் கலஸா கல்லூரியில் ஸம்ஸ்க்ருத துறையில் பணியாற்றிய முனைவர் அண்டர்க்கர் என்பவர். ௸ ஶங்கர விஜயத்திலுள்ள ஶ்ரீ ஶங்கர பகவத்பாத அவதார கட்டத்தையும் ஸர்வஜ்ஞ பீடாரோஹண கட்டத்தையும் ஶங்கர ஜயந்தி முதலிய தருணங்களில் பாராயணம் செய்வது நமது ஶ்ரீமடத்து ஸம்ப்ரதாயம். ஆகவே அதனை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளும்படி மொழிபெயர்த்து வெளியிடும்படி மஹாஸந்நிதானங்கள் ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதீஶ்வரர்களின் ஆஜ்ஞாபித்தார்கள். அதற்கிணங்க ௸ வெளியீட்டில் உள்ள அத்யாய ஶ்லோக எண்களுடன் அதனைக் கீழ்கண்டவாறு தொகுத்துத்துள்ளோம். உரிய சந்தர்ப்பங்களில் இதனை பாராயணம் செய்து பக்தர்கள் ஶ்ரீ பகவத்பாதர்களின் அருளுக்கு பாத்திரமாவார்களாக.

पञ्चमोऽध्यायः ॥

व्यराजत तदार्याम्बा शिवैकायत्तचेतना ।
दृष्ट्वा शिवगुरुर्यज्वा भार्यामार्यां च गर्भिणीम् ॥ ३४ ॥
वृषाचलेशं सततं स्मरन्नेकाग्रचेतसा ।
दयालुतां स्तुवन् शम्भोर्दीनेष्वपि महत्स्वपि ॥ ३५ ॥
ववृधे स पयोराशिः पूर्णेन्दोरिव दर्शनात् । …
ततः सा दशमे मासि सम्पूर्णशुभलक्षणे ॥ ३६ ॥
दिवसे माधवर्तौ च स्वोच्चस्थे ग्रहपञ्चके ।
मध्याह्ने चाभिजिन्नाममुहूर्ते चार्द्रया युते ॥ ३७ ॥
उदयाचलवेलेव भानुमन्तं महौजसम् ।
प्रासूत तनयं साध्वी गिरिजेव षडाननम् ॥ ३८ ॥
जयन्तमिव पौलोमी व्यासं सत्यवती यथा । …
तदैवाग्रे निरीक्ष्येयमनुभूयेव वेदनाम् ॥ ३९ ॥
चतुर्भुजमुदाराङ्गं त्रिणेत्रं चन्द्रशेखरम् ।
दुर्निरीक्ष्यैः स्वतेजोभिर्भासयन्तं दिशो दश ॥ ४० ॥
दिवाकरकराकारैर्गौरैरीषद्विलोहितैः ।
एवमाकारमालोक्य विस्मिता विह्वला भिया ॥ ४१ ॥
किं किं किमिदमाश्चर्यमन्यदेव मदीप्सितम् ।
परं त्वन्यत् समुद्भूतमिति चिन्ताभृति स्वयम् ॥ ४२ ॥
उद्वीक्षन्त्यां प्रणमितुं तस्यां कुतुकतायुजि ।
ससृजुः पुष्पवर्षाणि देवा भुव्यन्तरिक्षगाः ॥ ४३ ॥
कह्लारकलिकागन्धबन्धुरो मरुदाववौ ।
दिशः प्रकाशिताकाशाः सा धरा सादरा बभौ ॥ ४४ ॥
प्रायः प्रदक्षिणज्वाला जज्वलुर्यज्ञपावकाः ।
प्रसन्नमभवच्चित्तं सतां प्रतपतामपि ॥ ४५ ॥
इत्थमन्यद्विलोक्यापि प्रश्रिता विनयान्विता ।
वृषाचलेशं निश्चित्य प्रादुर्भूतमतन्द्रिता ॥ ४६ ॥
स्वामिन् दर्शय मे लीला बालभावक्रमोचिताः ।
इत्थं सा प्रार्थयामास साध्वी भूयो महेश्वरम् ॥ ४७ ॥
ततः किशोरवत्सोऽपि किञ्चिद्विचलिताधरः।
ताडयन् चरणौ हस्तौ रुरोदैव क्षणादसौ ॥ ४८ ॥
आर्या साऽपि तदैवासीन्मायामोहितमानसा।
जगन्मोहकरी माया महेशितुरनीदृशी ॥ ४९ ॥
तत्रत्यास्तु जना नार्यो नाविन्दन् वृत्तमीदृशम् ।
बालकं मेनिरे प्रोद्यदिन्दुबिम्बमिवोज्ज्वलम् ॥ ५० ॥
तत्रत्या वृद्धनार्योऽपि यथोचितमथाचरन् ।
ततः श्रुत्वा पिता सोऽपि निधिं प्राप्येव निर्धनः ॥ ५१ ॥
मुमुदे नितरां चित्ते वित्तेशं नाभ्यलक्षत ।
आविर्भावं तु जानाति शम्भोर्नाबोधयच्च सा ॥ ५२ ॥
स्नात्वा शिवगुरुर्यज्वा यज्वनामग्रणीस्ततः ।
विप्रानाकारयामास पुरन्ध्रीरपि सर्वतः ॥ ५३ ॥
तदोत्सवो महानासीत् पुरे सद्मनि सन्ततम् ।
धान्यराशिं मखिभ्योऽसौ विद्भ्यो भूयः प्रदत्तवान् ॥ ५४ ॥
धनानि भूरि विप्रेभ्यो वेदविद्भ्यो दिदेश सः ।
वासांसि भूयो दिव्यानि सफलानि प्रदत्तवान् ॥ ५५ ॥
पुरन्ध्रीणां च नीरन्ध्रं वस्तुजातान्यदादसौ ।
घटोध्नीर्बहुशो गाश्च सालङ्काराः सदक्षिणाः ॥ ५६ ॥
वृषाचलेशः सततं प्रीयतामित्यसौ ददौ ।
ततः शिवगुरुर्यज्वा ब्राह्मणान् पूर्वतोऽधिकम् ॥ ५७ ॥
सन्तर्प्य बन्धुभिः सार्धं मुदितो न्यवसत् सुधीः ।
बालभावे विशालाक्षमतिविस्तृतवक्षसम् ॥ ५८ ॥
आजानुलम्बितभुजं सुविशालनिटालकम् ।
आरक्तोपान्तनयनविनिन्दितसरोरुहम् ॥ ५९ ॥
मुखकान्तिपराभूतराकाहिमकराकृतिम् ।
भासा गौर्या प्रसृतया प्रोद्यन्तमिव भास्करम् ॥ ६० ॥
शङ्खचक्रध्वजाकाररेखाचिह्नपदाम्बुजम् ।
द्वात्रिंशल्लक्षणोपेतं विद्युदाभकलेवरम् ॥ ६१ ॥
प्रमोदं दृष्टमात्रेण दिशन्तं तं स्तनन्धयम् ।
पायम्पायं दृशा प्रेम्णा श्रीकृष्णमिव गोपिका ॥ ६२ ॥
प्रपेदे न क्षणं तृप्तिं चकोरीव सुधाकरम् ।
तादृशं बालकं दृष्ट्वा त्वार्याम्बा शुभलक्षणम् ।
तिष्ठति स्म सुखेनैव लालयन्ती तनूभवम् ॥ ६३ ॥

॥ इति श्रीचिद्विलासीयश्रीशङ्करविजयविलासे श्रीशङ्करभगवत्पादाचार्याणाम् अवतारघट्टः सम्पूर्णः ॥

श्रीमच्चिद्विलासीय-शङ्करविजयविलासे श्रीमत्-शङ्कर-भगवत्पाद-अवतार-घट्टः ॥ #

அப்போது ஆர்யாம்பாள் ஶிவன்பால் செலுத்திய சிந்தையுடையவளாய் ஒளிர்ந்தாள். யஜ்ஞங்கள் செய்பவரான ஶிவகுரு, கர்ப்பிணியாயிருந்த தன் பத்நீ ஆர்யாவைப் பார்த்து, வ்ருஷாசாலேஶரை (தாம் மகப்பேற்றுக்கு வழிபட்ட திருச்சூர் வடக்குந்நாதரை) எப்போதும் ஒருமித்த மனத்துடன் நினைத்து, தீனர்களுக்கும் மஹான்களுக்கும் (ஒரு போல) தயை செய்யும் அந்த ஶம்புவைத் துதித்து, பூர்ண சந்திரனைக் கண்ட கடல் போல் (மகிழ்ச்சியில்) பொங்கினார்.

ततः सा दशमे मासि सम्पूर्णशुभलक्षणे ॥ ३६ ॥
दिवसे माधवर्तौ च स्वोच्चस्थे ग्रहपञ्चके ।
मध्याह्ने चाभिजिन्नाममुहूर्ते चार्द्रया युते ॥ ३७ ॥

அதன் பிறகு அவள் (ஆர்யாம்பா) பத்தாவது மாதத்தில், வஸந்த காலத்தில், எல்லா ஶுபலக்ஷணங்களுடன் கூடிய தினத்தில், ஐந்து க்ரஹங்கள் தத்தம் உச்சஸ்தானத்தை அடைந்திருக்கையில், ஆர்த்ரா (திருவாதிரை) நக்ஷத்ரத்துடன் கூடிய நடுப்பகல் அபிஜித் முஹூர்த்தத்தில்,

उदयाचलवेलेव भानुमन्तं महौजसम् ।
प्रासूत तनयं साध्वी गिरिजेव षडाननम् ॥ ३८ ॥
जयन्तमिव पौलोमी व्यासं सत्यवती यथा । …

ஒளிமிக்கவரான ஸூர்யனை உதய பர்வதத்தின் எல்லை உருவாக்குவதாக (தோன்றுவது போலவும்), பார்வதி ஆறுமுகக் கடவுளைப் (பெற்றது) போலவும், இந்த்ராணி ஜயந்தனைப் (பெற்றது) போலவும், ஸத்யவதி (பகவான்) வேதவ்யாஸரைப் (பெற்றது) போலவும், பெற்றெடுத்தாள்.

तदैवाग्रे निरीक्ष्येयमनुभूयेव वेदनाम् ॥ ३९ ॥
चतुर्भुजमुदाराङ्गं त्रिणेत्रं चन्द्रशेखरम् ।
दुर्निरीक्ष्यैः स्वतेजोभिर्भासयन्तं दिशो दश ॥ ४० ॥
दिवाकरकराकारैर्गौरैरीषद्विलोहितैः ।

அப்போதே ப்ரஸவ வேதனையை அனுபவிப்பது போல் அனுபவித்தாள். (ஆனால் அச்சமயம்) நான்கு கைகள், விஶாலமான ஶரீரம், மூன்று கண்கள், ஶிரஸில் பிறை ஆகியவற்றுவடன் கூடியவரும், ஸூர்யனின் கிரணங்களைப் போன்றவையும், (நேரில்) நோக்கவொண்ணாதவையும், சிறிது சிவப்பு கலந்த வெள்ளை (நிறத்தவையுமான) தனது தேஜஸ்ஸுகளால் பத்து திக்குகளையும் ப்ரகாசிக்க வைப்பவருமான (சிவபெருமானை) பார்த்தாள்.

एवमाकारमालोक्य विस्मिता विह्वला भिया ॥ ४१ ॥
किं किं किमिदमाश्चर्यमन्यदेव मदीप्सितम् ।
परं त्वन्यत् समुद्भूतमिति चिन्ताभृति स्वयम् ॥ ४२ ॥
उद्वीक्षन्त्यां प्रणमितुं तस्यां कुतुकतायुजि ।
ससृजुः पुष्पवर्षाणि देवा भुव्यन्तरिक्षगाः ॥ ४३ ॥

இத்தகைய வடிவத்தை பார்த்து ஆச்சர்யமும் பயத்தினால் கலக்கமும் கொண்டவளாக, “ஆ! இது, இது என்ன ஆச்சர்யம்! நான் வேறேதோ அல்லவா விரும்பினேன்! ஆனால் இங்கே வேறொன்று தோன்றி இருக்கிறதே” என்று மனதுக்குள் எண்ணினாள். (இவ்வாறு) பார்த்து அவள் வணங்க முற்படுகையில், வானத்திலிருந்து தேவர்கள் ஆகாயத்திலிருந்து பூமியில் மலர்மாரி பொழிந்தனர்.

कह्लारकलिकागन्धबन्धुरो मरुदाववौ ।
दिशः प्रकाशिताकाशाः सा धरा सादरा बभौ ॥ ४४ ॥

செங்கழுநீர் மொட்டுக்களின் மணம் கமழும் காற்று எங்கும் வீசியது. எல்லா திசைகளிலும் ஆகாசம் ப்ரகாசமாக இருந்தது அந்த பூமியும் எங்கும் பொலிவுற்று விளங்கியது.

प्रायः प्रदक्षिणज्वाला जज्वलुर्यज्ञपावकाः ।
प्रसन्नमभवच्चित्तं सतां प्रतपतामपि ॥ ४५ ॥

யஜ்ஞத்துக்கான அக்னிகள் எவ்விடமும் வலமாகச் சுழலும் நாக்குகளுடன் ஜ்வலித்தன. ஸாதுக்கள் மற்றும் தவம் செய்வோர்களின் சித்தம் ப்ரஸன்னமாயிற்று.

इत्थमन्यद्विलोक्यापि प्रश्रिता विनयान्विता ।
वृषाचलेशं निश्चित्य प्रादुर्भूतमतन्द्रिता ॥ ४६ ॥
स्वामिन् दर्शय मे लीला बालभावक्रमोचिताः ।
इत्थं सा प्रार्थयामास साध्वी भूयो महेश्वरम् ॥ ४७ ॥

இத்தகைய வேறு (அடையாளங்களையும்) பார்த்து, வ்ருஷாசலேஶ்வரர் தான் ஆவிர்பாவம் செய்திருக்கிறார் என்று நிச்சயித்து, உடனடியாக விநயத்துடன் வணங்கி, “இறைவா! முதலில் பால்யத்திற்கேற்ற லீலைகளைக் எனக்குக் காட்டியருள்வீர்!” என்று இவ்வாறு அந்த நல்ல குணம் படைத்தவள் மீண்டும் ப்ரார்த்தித்தாள்.

ततः किशोरवत्सोऽपि किञ्चिद्विचलिताधरः।
ताडयन् चरणौ हस्तौ रुरोदैव क्षणादसौ ॥ ४८ ॥

அப்போது அந்த (ஶிவபெருமானும்) இளங்குழந்தை (வடிவெடுத்து) தன் உதடுகளை சற்றே அசைத்து, காலையும் கையையும் உதைத்து உடனே அழவே ஆரம்பித்தார்.

आर्या साऽपि तदैवासीन्मायामोहितमानसा।
जगन्मोहकरी माया महेशितुरनीदृशी ॥ ४९ ॥

அப்பொழுதே அந்த ஆர்யாவும் (சற்று முன் ஶிவனைக் கண்டதை மறந்தவளாக) மாயையால் மோஹித்த மனத்தவளானாள். உலகத்தையே மோஹம் அடையச் செய்யும் மஹேஶ்வரனின் மாயை சாமானியப்பட்டதில்லை!

तत्रत्यास्तु जना नार्यो नाविन्दन् वृत्तमीदृशम् ।
बालकं मेनिरे प्रोद्यदिन्दुबिम्बमिवोज्ज्वलम् ॥ ५० ॥
तत्रत्या वृद्धनार्योऽपि यथोचितमथाचरन् ।

ஆனால் (அதே மாயை காரணமாக) அங்கே இருந்த மக்களும் ஸ்த்ரீகளும் இந்த (சிவனார் தரிசனம் அளித்த) ஸம்பவத்தை அறியவில்லை. உதயமாகும் சந்த்ர மண்டலத்தைப் போல ஒளிவிடும் ஒரு பாலகனாகவே எண்ணினர். அங்கே இருந்த வயதான ஸ்த்ரீகளும் (பிள்ளை பெற்றவளுக்கு) உரிய முறையில் (செய்யவேண்டியவற்றை) அடுத்து செய்தனர்.

ततः श्रुत्वा पिता सोऽपि निधिं प्राप्येव निर्धनः ॥ ५१ ॥
मुमुदे नितरां चित्ते वित्तेशं नाभ्यलक्षत ।

அடுத்து (குழந்தை பிறந்ததைக்) கேட்ட அந்த தந்தையான (ஶிவகுருவும்) ஒரு ஏழை பெருஞ்செல்வம் அடைந்ததைப் போல அகமகிழ்ந்தார். குபேரனையும் லக்ஷ்யம் செய்யவில்லை. (தன்னை குபேரனைக் காட்டிலும் செல்வந்தனாக கருதினார்.)

आविर्भावं तु जानाति शम्भोर्नाबोधयच्च सा ॥ ५२ ॥

(ஆர்யாவோ) ஶிவபெருமானின் இந்த ஆவிர்பாவத்தை அறிந்தவளாக இருந்தாலும் பிறருக்கு அறிவிக்கவில்லை.

स्नात्वा शिवगुरुर्यज्वा यज्वनामग्रणीस्ततः ।
विप्रानाकारयामास पुरन्ध्रीरपि सर्वतः ॥ ५३ ॥

(குழந்தை பிறந்ததற்கான) ஸ்நானம் செய்துவிட்டு அந்த யாஜ்ஞிகர்களுள் (யஜ்ஞம் செய்பவர்களுள்) சிறந்த யாஜ்ஞிகரான ஶிவகுருவும் ப்ராஹ்மணர்களையும் ஸ்த்ரீகளையும் எல்லா இடங்களிலிருந்தும் வரவழைத்தார்.

तदोत्सवो महानासीत् पुरे सद्मनि सन्ततम् ।
धान्यराशिं मखिभ्योऽसौ विद्भ्यो भूयः प्रदत्तवान् ॥ ५४ ॥

அப்போது அந்த ஊரிலும் (முக்கியமாக) வீட்டிலும் தொடர்ந்து பெரிய உத்ஸவமாக இருந்தது. யாஜ்ஞிகர்களுக்கு தான்யக் குவியல்களைக் கொடுத்தார். மேலும் வித்வான்களுக்கும் (தானம் செய்தார்).

धनानि भूरि विप्रेभ्यो वेदविद्भ्यो दिदेश सः ।
वासांसि भूयो दिव्यानि सफलानि प्रदत्तवान् ॥ ५५ ॥

வேதம் அறிந்த வேதியர்களுக்கு மிகுந்த தனத்தை அர்ப்பணித்தார். திவ்யமான வஸ்த்ரங்கள் பலவும் பழங்களுடன் சேர்த்து கொடுத்தார்.

पुरन्ध्रीणां च नीरन्ध्रं वस्तुजातान्यदादसौ ।
घटोध्नीर्बहुशो गाश्च सालङ्काराः सदक्षिणाः ॥ ५६ ॥
वृषाचलेशः सततं प्रीयतामित्यसौ ददौ ।

ஸ்திரீகளுக்கு குறைவின்றி (பயனுடைய) வஸ்துக்களைக் கொடுத்தார். மடிநிறைய பால் பொழியும் பல பசுக்களையும் அலங்கரித்து (அவற்றின் ஸம்ரக்ஷணத்திற்கான) தக்ஷிணையுடன் கொடுத்தார். (இவற்றையெல்லாம்) வ்ருஷாசலேஶ்வரர் என்றும் மகிழட்டும் என்று நினைத்துக் கொடுத்தார்.

ततः शिवगुरुर्यज्वा ब्राह्मणान् पूर्वतोऽधिकम् ॥ ५७ ॥
सन्तर्प्य बन्धुभिः सार्धं मुदितो न्यवसत् सुधीः ।

யாஜ்ஞிகரும் அறிவுமிக்கவருமான ஶிவகுரு எப்போதையும் விட அதிகமாக ப்ராஹ்மணர்களையும் பந்துக்களையும் த்ருப்தி செய்து, பிறகு ஸந்தோஷமாக வாழ்ந்தார்.

बालभावे विशालाक्षमतिविस्तृतवक्षसम् ॥ ५८ ॥
आजानुलम्बितभुजं सुविशालनिटालकम् ।
आरक्तोपान्तनयनविनिन्दितसरोरुहम् ॥ ५९ ॥

குழந்தை வடிவில் பெரிய கண்களுடனும், மிகவும் அகன்ற மார்புடனும், முட்டி வரை நீண்ட கைகளுடனும, அழகிய விசாலமான நெற்றியுடனும், தாமரையை இகழும் செவ்வியுடைய கடைக்கண்களுடனும்…

मुखकान्तिपराभूतराकाहिमकराकृतिम् ।
भासा गौर्या प्रसृतया प्रोद्यन्तमिव भास्करम् ॥ ६० ॥

பௌர்ணமி சந்திரனின் வடிவை தோற்கடிக்கும் முகத்தின் ஒளியுடனும், மேலெழும் ஸூர்யன் போல் வீசும் வெண்மையான பிரகாசத்துடனும்…

शङ्खचक्रध्वजाकाररेखाचिह्नपदाम्बुजम् ।
द्वात्रिंशल्लक्षणोपेतं विद्युदाभकलेवरम् ॥ ६१ ॥

சங்கு, சக்கரம், கொடி ஆகிய ரேகை சின்னங்களை உடைய பாதத்தாமரையுடனும், முப்பத்திரண்டு லக்ஷணங்களுடனும், மின்னல் போன்று (ஒளிரும்) உடலுடனும் கூடிய…

प्रमोदं दृष्टमात्रेण दिशन्तं तं स्तनन्धयम् ।
पायम्पायं दृशा प्रेम्णा श्रीकृष्णमिव गोपिका ॥ ६२ ॥
प्रपेदे न क्षणं तृप्तिं चकोरीव सुधाकरम् ।

… பார்த்த மாத்திரத்தில் ஆனந்தம் அளிக்கும் அந்த சிறு குழந்தையை ஶ்ரீ க்ருஷ்ணனைக் (பார்க்கும் யஶோதை என்ற) கோபிகையைப் போல கண்களால் அன்புடன் பருகிப் பருகி, (சந்திரனின் கிரணங்களையே ஆவலுடன் பருகும்) சகோர பக்ஷி சந்த்ரனை (தொடர்ந்து பார்ப்பது போல்) ஒரு கணம் கூட போதும் என்ற எண்ணம் வராமல் இருந்தாள்.

तादृशं बालकं दृष्ट्वा त्वार्याम्बा शुभलक्षणम् ।
तिष्ठति स्म सुखेनैव लालयन्ती तनूभवम् ॥ ६३ ॥

இப்படிப்பட்ட ஶுபலக்ஷணம் குடிகொண்டு தன்னிடமிருந்து பிறந்த பாலகனைப் பார்த்து ஆர்யாம்பா சீராட்டிக்கொண்டு மகிழ்வுடன் இருந்தாள்.

॥ इति श्रीचिद्विलासीयश्रीशङ्करविजयविलासे श्रीशङ्करभगवत्पादाचार्याणाम् अवतारघट्टः सम्पूर्णः ॥

அவதாரகட்டம் நிறைவுற்றது.

श्रीमच्चिद्विलासीय-शङ्करविजयविलासे श्रीमत्-शङ्कर-भगवत्पाद-अवतार-घट्टः ॥

Vijnanakanda, the student approached the excellent yati Cidvilasa saying, “O Guru! You read the charitam of Shri Shankaracharya every day. You also have said that it is capable of removing the evils of Kali and bestowing tattvajnana. Therefore, you must expound this to me in full with compassion”. The Shankaracharitam that was accordingly imparted by Him is known as Chidvilasiya Shankara Vijayam.

This was published in 1973 by Bharatiya Vidya Bhavan as the 33rd title under the series Bharatiya Vidya. The editors of this series were Prof. Jayanta Krishna Dave and Prof. Upadhyaya. This was critically edited from four different hand-written manuscripts by Prof. Antarkar who worked in the Samskrta department of Kalsa College in Mumbai. It is the custom in the Kanchi Kamakoti Pitham to do parayana of the Shri Shankara Bhagavatpada Avatara Ghatta and Sarvajna Pitharohana Ghatta of the above Shankara Vijayam during occasions such as Shri Shankara Jayanti. Hence, in order that everyone understands this easily, Shri Kanchi Kamakoti Pithadipati Shri Shankaracharya Swamigal has ordained that this be released with translation. Accordingly, this version has been compiled with adhyaya and shloka numbers as per that edition. May bhaktas use this for Parayanam at appropriate times and attain the blessings of Bhagavatpada!

पञ्चमोऽध्यायः ॥

व्यराजत तदार्याम्बा शिवैकायत्तचेतना ।
दृष्ट्वा शिवगुरुर्यज्वा भार्यामार्यां च गर्भिणीम् ॥ ३४ ॥
वृषाचलेशं सततं स्मरन्नेकाग्रचेतसा ।
दयालुतां स्तुवन् शम्भोर्दीनेष्वपि महत्स्वपि ॥ ३५ ॥
ववृधे स पयोराशिः पूर्णेन्दोरिव दर्शनात् । …

At that time, Aryamba glowed with her mind devoted to Shiva. Shivaguru, who had done many yajnas, seeing his pregnant wife, fixing his mind upon Vrshachaleshvara (the Vadakkunnatha of Trichur whom they had worshipped seeking progeny), praising the compassion of Shambhu towards the great and the destitute alike, swelled (with happiness) like the ocean seeing the full moon.

ततः सा दशमे मासि सम्पूर्णशुभलक्षणे ॥ ३६ ॥
दिवसे माधवर्तौ च स्वोच्चस्थे ग्रहपञ्चके ।
मध्याह्ने चाभिजिन्नाममुहूर्ते चार्द्रया युते ॥ ३७ ॥

After that, She (Aryamba) in the tenth month in Vasanta kala, on a day filled with all auspicious signs, when five grahas were in exaltation, in the asterism of Ardra (Tiruvadirai) at noon, in the Abhijit muhoorta,

उदयाचलवेलेव भानुमन्तं महौजसम् ।
प्रासूत तनयं साध्वी गिरिजेव षडाननम् ॥ ३८ ॥
जयन्तमिव पौलोमी व्यासं सत्यवती यथा । …

gave birth, just as the edge of the eastern mountain appears to create the bright sun, just as Parvati (birthed) the six-faced (Subrahmanya), just as Indrani (birthed) Jayanta, just as Satyavati (birthed) Bhagavan Veda Vyasa.

तदैवाग्रे निरीक्ष्येयमनुभूयेव वेदनाम् ॥ ३९ ॥
चतुर्भुजमुदाराङ्गं त्रिणेत्रं चन्द्रशेखरम् ।
दुर्निरीक्ष्यैः स्वतेजोभिर्भासयन्तं दिशो दश ॥ ४० ॥
दिवाकरकराकारैर्गौरैरीषद्विलोहितैः ।

It was as though she experienced the pain of labour (but then) she saw (Shiva) with four arms and a broad body and three eyes and a crescent moon on the forehead, brightening the ten directions by His splendour akin to the sun’s rays, difficult to see directly, and white mixed with a bit of red (in hue).

एवमाकारमालोक्य विस्मिता विह्वला भिया ॥ ४१ ॥
किं किं किमिदमाश्चर्यमन्यदेव मदीप्सितम् ।
परं त्वन्यत् समुद्भूतमिति चिन्ताभृति स्वयम् ॥ ४२ ॥
उद्वीक्षन्त्यां प्रणमितुं तस्यां कुतुकतायुजि ।
ससृजुः पुष्पवर्षाणि देवा भुव्यन्तरिक्षगाः ॥ ४३ ॥

Seeing such a form, astonished and shaken by fear, thought to herself, “Ah! What! What! What a wonder! It was something else I desired! But something else has appeared here.” Seeing thus, as she was eager to pay obeisance, the devas showered flowers from the skies.

कह्लारकलिकागन्धबन्धुरो मरुदाववौ ।
दिशः प्रकाशिताकाशाः सा धरा सादरा बभौ ॥ ४४ ॥

The breeze blew with the fragrance of red water lilies. The sky was bright in all directions. The earth too shone resplendently.

प्रायः प्रदक्षिणज्वाला जज्वलुर्यज्ञपावकाः ।
प्रसन्नमभवच्चित्तं सतां प्रतपतामपि ॥ ४५ ॥

The agnis of Yajnas burned bright everywhere with tongues that circled to the right. The minds of the good and tapasvis cleared and filled with joy.

इत्थमन्यद्विलोक्यापि प्रश्रिता विनयान्विता ।
वृषाचलेशं निश्चित्य प्रादुर्भूतमतन्द्रिता ॥ ४६ ॥
स्वामिन् दर्शय मे लीला बालभावक्रमोचिताः ।
इत्थं सा प्रार्थयामास साध्वी भूयो महेश्वरम् ॥ ४७ ॥

Seeing these various (signs), ascertained that it was Vrshachaleshvara who had manifested, that good lady immediately bowed with humility, and prayed once more saying thus: “O Bhagavan! First show me the lilas that are appropriate for an infant”.

ततः किशोरवत्सोऽपि किञ्चिद्विचलिताधरः।
ताडयन् चरणौ हस्तौ रुरोदैव क्षणादसौ ॥ ४८ ॥

Then that (Bhagavan Shiva) in the form of an infant and moved the lips slightly and kicking the legs and hands about, began to cry.

आर्या साऽपि तदैवासीन्मायामोहितमानसा।
जगन्मोहकरी माया महेशितुरनीदृशी ॥ ४९ ॥

Immediately Arya (forgetting that she saw Shiva a short while before) got her mind enchanted by Maya. The Maya of Maheshvara that enchants the entire universe is not ordinary!

तत्रत्यास्तु जना नार्यो नाविन्दन् वृत्तमीदृशम् ।
बालकं मेनिरे प्रोद्यदिन्दुबिम्बमिवोज्ज्वलम् ॥ ५० ॥
तत्रत्या वृद्धनार्योऽपि यथोचितमथाचरन् ।

Yet, (due to the same Maya) the people and women there did not know of the event that transpired (of Shiva’s manifestation). They thought of Him as a boy who glowed like the face of the moon rising. The elderly women there then did their duties (to care for the new mother).

ततः श्रुत्वा पिता सोऽपि निधिं प्राप्येव निर्धनः ॥ ५१ ॥
मुमुदे नितरां चित्ते वित्तेशं नाभ्यलक्षत ।

Then, (hearing the news of the child’s birth) the father (Shivaguru) rejoiced just as a poor man who had attained prosperity would. He did not even consider Kubera to be great (meaning that he considered himself wealthier than Kubera)

आविर्भावं तु जानाति शम्भोर्नाबोधयच्च सा ॥ ५२ ॥

Despite knowing the manifestation of Shiva, (Arya) did not announce it to the others.

स्नात्वा शिवगुरुर्यज्वा यज्वनामग्रणीस्ततः ।
विप्रानाकारयामास पुरन्ध्रीरपि सर्वतः ॥ ५३ ॥

After bathing (for the birth of the child), Shivaguru the most excellent Yajnika among Yajnikas, invited brahmanas and women from all over.

तदोत्सवो महानासीत् पुरे सद्मनि सन्ततम् ।
धान्यराशिं मखिभ्योऽसौ विद्भ्यो भूयः प्रदत्तवान् ॥ ५४ ॥

It was a great continuous celebration in that village and (especially) the home. He gave heaps of grains to those who performed yajnas. He also gave (danam) to vidvans.

धनानि भूरि विप्रेभ्यो वेदविद्भ्यो दिदेश सः ।
वासांसि भूयो दिव्यानि सफलानि प्रदत्तवान् ॥ ५५ ॥

He gave away a lot of wealth to vaidikas who knew the Vedas. He gave many pure clothes along with fruits.

पुरन्ध्रीणां च नीरन्ध्रं वस्तुजातान्यदादसौ ।
घटोध्नीर्बहुशो गाश्च सालङ्काराः सदक्षिणाः ॥ ५६ ॥
वृषाचलेशः सततं प्रीयतामित्यसौ ददौ ।

He gave the women (useful) things without lacking. He gave many decorated milch cows which yielded plentiful milk along with money (for their care). He gave (all this) so that Vrshachaleshvara may be pleased.

ततः शिवगुरुर्यज्वा ब्राह्मणान् पूर्वतोऽधिकम् ॥ ५७ ॥
सन्तर्प्य बन्धुभिः सार्धं मुदितो न्यवसत् सुधीः ।

The wise yajnika Shivaguru pleased the relatives and brahmanas more than ever and lived happily.

बालभावे विशालाक्षमतिविस्तृतवक्षसम् ॥ ५८ ॥
आजानुलम्बितभुजं सुविशालनिटालकम् ।
आरक्तोपान्तनयनविनिन्दितसरोरुहम् ॥ ५९ ॥

In the form of a child with large eyes, a wide chest, hands extending upto the knees, a handsome broad forehead and eyes with redness at the ends that mocked the lotus in radiance…

मुखकान्तिपराभूतराकाहिमकराकृतिम् ।
भासा गौर्या प्रसृतया प्रोद्यन्तमिव भास्करम् ॥ ६० ॥

With the beauty of face that defeated the form of the full moon, with white radiance that was like the rising sun…

शङ्खचक्रध्वजाकाररेखाचिह्नपदाम्बुजम् ।
द्वात्रिंशल्लक्षणोपेतं विद्युदाभकलेवरम् ॥ ६१ ॥

With his lotus feet that had the lines with markings of the conch, discus and flag, with the thirty two lakshanas, a body (radiant) like lightning…

प्रमोदं दृष्टमात्रेण दिशन्तं तं स्तनन्धयम् ।
पायम्पायं दृशा प्रेम्णा श्रीकृष्णमिव गोपिका ॥ ६२ ॥
प्रपेदे न क्षणं तृप्तिं चकोरीव सुधाकरम् ।

… again and again lovingly drinking by her eyes that small infant, who gave happiness upon seeing, just as (Yashoda) the Gopika (saw) Shri Krishna, like the chakora bird (that eagerly drinks the rays) of the moon (continuously looks at it), she never felt it was enough even for a moment.

तादृशं बालकं दृष्ट्वा त्वार्याम्बा शुभलक्षणम् ।
तिष्ठति स्म सुखेनैव लालयन्ती तनूभवम् ॥ ६३ ॥

Aryamba remained happy taking care of the boy who was born to her and endowed with all auspicious signs,

The avataraghatta ends