Menu

Introduction

முன்னுரை

சிவரஹஸ்யம் என்பது ராமாயணம், பாரதம் முதலியவைபோல் இதிஹாஸ ரத்னம். 12 அம்சங்கள், 1,000 அத்யாயங்கள் மற்றும் 1,00,000 ஶ்லோகங்கள், கொண்ட இந்நூல் பக்தியை வளர்ப்பது. இதை மஹாபாரதத்திற்கு சமமான மஹா இதிஹாஸம் என்று பல சுவடிகள் கூறுகின்றன. சில சுவடிகளில் ஸ்காந்த மஹாபுராணத்தின் ஹிமவத் காண்டத்தை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

சிவரஹஸ்யத்தின் ஒன்பதாம் அம்சம் சிவபக்தர்களின் சரித்திரத்தைக் கூறுகின்றது. இவற்றுள் முதன்முதலில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் சரித்ரம் காணப்படுகிறது. கலியுகம் துவங்கி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அவர் அவதரித்தார் என்கிறது இந்நூல். இதற்குப்பிறகு கலியில் மூவாயிரம் வருடம் கடந்த பிறகு பிறந்ததாக ஹரதத்தர் சரிதம் கொடுக்கப்படுகிறது.

பிற நூல்களும் சிவரஹஸ்யமும்:

சிவரஹஸ்யம் சிறந்த ப்ரமாணக் கிரந்தம், பல நூல்களில் மேற்காள் காட்டப்படுகிறது.

  1. நிர்ணயஸிந்து போன்ற நிபந்தனக் கிரந்தங்களில் (பைரவாஷ்டமி நிர்ணயம் முதலியவற்றில்) இதை ப்ரமாணமாக எடுத்திருக்கிறார்கள்.
  2. மாதவீய ஶங்கர விஜயத்தின் வியாக்யானமான அத்வைத ராஜ்யலக்ஷ்மீ டீகையில், மாதவீயம் 16ஆவது ஸர்க்கம், 103-ஆவது ச்லோகத்துக்கு உரை செய்யும்பொழுது, “சங்கரர் சிவாவதாரம்’ என்னும் விஷயத்தை விளக்குவதற்காக, அவரது சரித்திரத்தைக் கூறும் சிவரஹஸ்யம், 9-ஆவது அம்சம், 16-ஆவது அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். அங்கு, “काञ्च्यामथ सिद्धिमाप” என்று முடியும் அத்யாய இறுதி ஶ்லோகத்தைக் கூறிவிட்டு, “एतत् कथाजालं बृहच्छङ्करविजय एव श्रीमदानन्दज्ञानाख्यानन्दगिरिविरचिते द्रष्टव्यमिति दिक्” அதாவது “இந்தக் கதை முழுவதும் ஆனந்தஜ்ஞானர் எனப்படும் ஆனந்தகிரி இயற்றிய பெரிய சங்கர விஜயத்தில் காணத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.
  3. மாதவீய ஶங்கர விஜயத்தைப் பின்பற்றி ஸதானந்தர் என்பவர் எழுதிய சங்கர திக்விஜய ஸாரம் என்ற நூலின் துவக்கத்தில், “சிவரஹஸ்யத்தில் குறிப்புகளாக கூறப்பெற்றதும், ஆனந்தகிரி அவர்கள் முதலில் க்ரந்தரூபமாக இயற்றியதுமான சங்கர திக் விஜயத்தை நன்கு பார்த்து இந்தச் சங்கர திக்விஜய ஸாரம் எழுதுகிறேன்” என்று கூறுகிறார் –
		शैवे सूचितमादितो यतिवरैर्बद्धे  पुरा ग्रन्थतो

		ऽगाधे शङ्करदिग्जये निजधिया वीक्ष्याहमेवाततम् । 

		सिद्धान्तं श्रुतिसद्गिरां किल ततो निष्कृष्य संक्षेपतः

		कुर्वे स्वात्मविशुद्धये स्फुटममुं तत्सारमेवादरात् ॥
  1. ஸுஷமாவில் சிவரஹஸ்யம்

குரு ரத்ன மாலிகாவின் உரையான ஸுஷமாவில் ஶிவ ரஹஸ்யம் மேற்கோள் காட்டப்படுகிறது, அதுவும் அனைத்து ஶங்கர விஜயங்களைக் காட்டிலும் முதன்மையான ஸ்தானத்தில். ஆசார்யாளின் தந்தையார் உபநயனம் செய்து வேதம் கற்பித்த பிறகுதான் காலகதியடைந்தார் என்பதிலும் ஆசார்யாள் ஸித்தியடைந்தது குறித்தும் ஶிவ ரஹஸ்ய வாக்யங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இந்த அத்யாயத்தில் சில ஶ்லோகங்கள் சில பிரதிகளில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்றும் ப்ராசீன பாடங்களில் இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய ப்ராமாணிகமான சிவ ரஹஸ்யத்தின் ஶங்கராவதார பகுதி, அதாவது ஒன்பதாம் அம்சத்தின் பதினாறாம் அத்யாயத்தின் பரிசோதிக்கப்பட்ட பாடம், தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிடப்படுகிறது.English

Introduction

Shivarahasyam is a jewel of an Itihasa like Ramayana and Mahabharata. This work with 12 amshas, 1,000 adhyayas and 1,00,000 shlokas fosters devotion. Many manuscripts praise this as equal in glory to Mahabharata. In some manuscripts it is described as part of Skanda Puranam Himavat Khandam.

The ninth amsha of Shivarahasyam narrates the history of Shivabhaktas. The very first among these is that of Shri Shankara Bhagavatpada. This text says that He incarnated 2000 years after the beginning of Kaliyuga. Subsequent to this, the Charitam of Haradatta is narrated as after 3000 years in Kali.

Shivarahasyam and other texts:

Shivarahasyam is also an important pramana grantha quoted in several other texts.

  1. In nibandhanagranthas such as Nirnayasindhu (for nirnaya of Bhairavashtami etc) this text has been taken as pramanam.
  2. In the Advaitarajyalakshmi commentary of Madhaviya Shankara Vijayam, 16th sarga 103rd shloka, in order to explain that Shri Shankara is the avatara of Shiva, there is a reference to the 9th Amsha 16th adhyaya of Shivarahasyam. There the author gives the concluding shloka ending with “काञ्च्यामथ सिद्धिमाप” and adds “एतत् कथाजालं बृहच्छङ्करविजय एव श्रीमदानन्दज्ञानाख्यानन्दगिरिविरचिते द्रष्टव्यमिति दिक्”, that “this story can be seen in the large Shankara Vijayam of Anandagiri also known as Anandajnana”.
  3. Sadananda in the beginning of his Shankara Dig Vijaya Saram which is based on Madhaviya Shankara Vijayam says “I write this Shankara Dig Vijaya Saram after examining that which has been indicated in Shivarahasyam and written out as the Shankara Dig Vijayam of Anandagiri”:
		शैवे सूचितमादितो यतिवरैर्बद्धे  पुरा ग्रन्थतो

		ऽगाधे शङ्करदिग्जये निजधिया वीक्ष्याहमेवाततम् । 

		सिद्धान्तं श्रुतिसद्गिरां किल ततो निष्कृष्य संक्षेपतः

		कुर्वे स्वात्मविशुद्धये स्फुटममुं तत्सारमेवादरात् ॥
  1. Shivarahasyam in Sushama

The Shivarahasyam is quoted in the Sushama commentary of Guru Ratna Malika, that too with greater reverence than every other Shankara Vijayam. It quotes Shiva Rahasya passages in the matter of Acharya’s father passing away only after performing His upanayanam and teaching him Veda, and in regard to Acharya’s siddhi. Further, it notes that some verses have been later inserted in this chapter in some sources and are not found in old sources.

From this Shivarahasyam of such significance, the edited text of the Shankaravatara section viz. ninth amsha, sixteenth adhyaya, is given here with Tamil and English translation.