॥ श्रीमत्कामकोटिगुरुपरम्परास्मरणम् ॥
ब्रह्मश्री श्रीरमणशर्मणा विरचितम्
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ १ ॥
(१) गुरवे सर्व-लोकानां भिषजे भव-रोगिणाम् ।
निधये सर्व-विद्यानां दक्षिणामूर्तये नमः ॥ २ ॥
(२-१०) विष्णुर्ब्रह्मा वसिष्ठश्च शक्तिः प्राज्ञ-पराशरः ।
व्यासः शुको गौडपदो जय-गोविन्द-देशिकः ॥ ३ ॥
इत्येते पूर्व आचार्याः भगवत्पाद-शङ्करः ।
ततोऽभवत्, तस्य शिष्याः पद्मपादः सुरेश्वरः ॥ ४ ॥
पृथ्वीधवः सर्वज्ञात्मा हस्तामलक-तोटकौ ।
उदङ्कश्चित्सुखो विश्वरूपोऽन्ये च यतीश्वराः ॥ ५ ॥
काञ्ची-कामकोटि-पीठे स्वयं श्रीशङ्करो गुरुः ।
आसीत् प्रथम आचार्यः कामाक्ष्यां च तिरोदधे ॥ ६ ॥
सर्वज्ञ-पीठ एतस्मिन् सुरेश्वर-सुरक्षितः ।
सर्वज्ञात्माऽभवद् गोप्ता श्रीशङ्कर-निदेशतः ॥ ७ ॥
सेन्द्रा सरस्वतीत्याख्या योग-पट्टः प्रकीर्तिता ।
सर्वज्ञात्मन आरभ्य तच्छिष्याणां महात्मनाम् ॥ ८ ॥
कामकोटि-पीठ-पारम्पर्यं गुरुवराश्रयम् ।
स्मरामि सम्प्रदायोक्तं स्मरतां चित्त-शुद्धि-दम् ॥ ९ ॥
(१-५) आदिमः शङ्कराचार्यः सुरेश्वर-महामनाः ।
सर्वज्ञात्मा सत्यबोधो ज्ञानानन्द-मुनीश्वरः ॥ १० ॥
(६-१०) शुद्धानन्दानन्दज्ञानौ कैवल्यानन्द-मस्करी ।
कृपा-शङ्कर आचार्यो विश्वरूप-सुरेश्वरः ॥ ११ ॥
(११-१३) शिवानन्द-चिद्घनश्च सार्वभौम-व्रती ततः ।
चन्द्रशेखरश्च काष्ठ-मौनी सच्चिद्घनो महान् ॥ १२ ॥
(१४-१६) भैरव-जिद् विद्याघनो गङ्गाधरश्च गीष्पतिः ।
उज्ज्वलः शङ्करेन्द्रश्च महायतिरिति स्तुतः ॥ १३ ॥
(१७-२०) गौडः सदाशिवेन्द्रश्च श्री-सुरेन्द्र-सरस्वती ।
मार्तण्ड-विद्याघनश्च मूक-शङ्कर-सद्गुरुः ॥ १४ ॥
(२१-२४) जाह्नवी-चन्द्रचूडश्च परिपूर्णबोध-यतिः ।
सच्चित्सुखो धर्म-गोप्ता कोङ्कण-स्थश्च चित्सुखः ॥ १५ ॥
(२५-२९) सिद्धिमान् सच्चिदानन्दघनः प्रज्ञाघनस्ततः ।
चिद्विलासो महादेवः पूर्णबोध-गुरुस्ततः ॥ १६ ॥
(३०-३३) बोधो भक्तियोगी शीलनिधिर्-ब्रह्मानन्दघनः ।
चिदानन्दघनः सच्चिदानन्दघन-वाक्पतिः ॥ १७ ॥
(३४-३७) चन्द्रशेखरः परिव्राड् बहुरूपश्च चित्सुखः ।
चित्सुखानन्द-यतिराड् विद्याघन-वशी ततः ॥ १८ ॥
(३८-४०) शङ्करोऽभिनवो धीर-शङ्करेन्द्र-सरस्वती ।
पूज्यः सच्चिद्विलासश्च महादेवश्च शोभनः ॥ १९ ॥
(४१-४४.५) गङ्गाधरो मन्त्रविच्च ब्रह्मानन्दघनो गुरुः ।
आनन्दघनश्च पूर्णबोधस्तस्माद् गुहा-गृहः ॥ २० ॥
(४५-४८) परमशिवो बोधश्च सान्द्रानन्दोऽथ हैमजित् ।
श्री-चन्द्रशेखरोऽद्वैतानन्दबोधः शिवात्मकः ॥ २१ ॥
(४९-५१) महादेव-चन्द्रचूडौ दुर्गा-होम-प्रवर्तकौ ।
विद्यारण्य-गुरुः श्री-विद्यातीर्थेन्द्र-सरस्वती ॥ २२ ॥
(५२-५५) शङ्करानन्दो धीमांश्च पूर्णानन्द-सदाशिवः ।
व्यासाचल-महादेवश्चन्द्रचूड-यतिस्ततः ॥ २३ ॥
(५६-५७) श्री-सदाशिव-बोधेन्द्रो द्वितीयः परमः शिवः ।
सदाशिव-श्री-ब्रह्मेन्द्र-सरस्वत्या गुरुस्तु यः ॥ २४ ॥
(५८-६१) विश्वाधिक आत्मबोधो बोधो भगवन्नाम-दः ।
अद्वैतात्मप्रकाशश्च महादेवश्च पर्ण-भुक् ॥ २५ ॥
(६२-६४) शिव-गीति-मालिका-कृच्चन्द्रशेखर-देशिकः ।
धर्मवाक्च महादेव उत्तरश्चन्द्रशेखरः ॥ २६ ॥
(६५-६७.५) सुदर्शन-महादेवश्चाद्वैती चन्द्रशेखरः ।
सप्ताही च महादेवो महास्वामी ततः परः ॥ २७ ॥
(६८) परमाचार्य इत्येवं सञ्चरद्दैवम् इत्यपि ।
योगीशो विश्रुतश्चन्द्रशेखरेन्द्र-सरस्वती ॥ २८ ॥
(६९-७०) जयेन्द्र-श्री-गुरुश्चास्मदाचार्यो मृदुरुज्ज्वलः ।
शङ्करो विजयेन्द्रश्च तच्छिष्यः संशित-व्रतः ॥ २९ ॥
सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम् ।
अस्मदाचार्य-पर्यन्तां वन्दे गुरु-परम्पराम् ॥ ३० ॥
जयेन्द्रगुरुकृपावतः सदाशिवेन्द्रसरस्वतीसेविनः ।
श्रीगुरुचरणयोरस्तु भणितमिदं सुमान्तरं सुरभि ॥सानुवादः – தமிழ்
॥ श्रीमत्कामकोटिगुरुपरम्परास्मरणम् ॥
ब्रह्मश्री श्रीरमणशर्मणा विरचितम्
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ १ ॥
குருவே ப்ரஹ்மாவும் விஷ்ணுவும் சிவனும் அவர்களின் மூல தத்துவமான பரம்பொருளும் ஆவார். அத்தகைய குருவுக்கு வணக்கம்.
(१) गुरवे सर्व-लोकानां भिषजे भव-रोगिणाम् ।
निधये सर्व-विद्यानां दक्षिणामूर्तये नमः ॥ २ ॥
அனைத்து உலகங்களுக்கும் குருவும், ஸம்ஸாரம் என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரும், அனைத்து வித்யைகளுக்கும் இருப்பிடமுமான (ஆதிகுரு) தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்.
(२-१०) विष्णुर्ब्रह्मा वसिष्ठश्च शक्तिः प्राज्ञ-पराशरः ।
व्यासः शुको गौडपदो जय-गोविन्द-देशिकः ॥ ३ ॥
इत्येते पूर्व आचार्याः …
(தக்ஷிணாமூர்த்திக்குப் பிறகு) விஷ்ணு, ப்ரஹ்மா, வஸிஷ்டர், சக்தி, அறிவாளியான பராசரர், வ்யாஸர், சுகர், கௌடபாதர், (“ஜய கோவிந்த” என்று எப்பொழுதும் சொல்லிவந்த) கோவிந்த பகவத்பாதர் என்றவர்கள் (முறையே) முற்காலத்து ஆசார்யர்கள்.
… भगवत्पाद-शङ्करः ।
ततोऽभवत्, तस्य शिष्याः पद्मपादः सुरेश्वरः ॥ ४ ॥
पृथ्वीधवः सर्वज्ञात्मा हस्तामलक-तोटकौ ।
उदङ्कश्चित्सुखो विश्वरूपोऽन्ये च यतीश्वराः ॥ ५ ॥
அதற்குப் பிறகு ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அவதரித்தார். பத்மபாதர், ஸுரேச்வரர், ப்ருதிவீதவர், ஸர்வஜ்ஞாத்மா, ஹஸ்தாமலகர், தோடகர், உதங்கர், சித்ஸுகர், விச்வரூபர் மேலும் மற்ற (பல) யதீச்வரர்கள் அவரது சிஷ்யர்கள் ஆவர்.
काञ्ची-कामकोटि-पीठे स्वयं श्रीशङ्करो गुरुः ।
आसीत् प्रथम आचार्यः कामाक्ष्यां च तिरोदधे ॥ ६ ॥
सर्वज्ञ-पीठ एतस्मिन् सुरेश्वर-सुरक्षितः ।
सर्वज्ञात्माऽभवद् गोप्ता श्रीशङ्कर-निदेशतः ॥ ७ ॥
ஸர்வஜ்ஞபீடமான காஞ்சீ காமகோடி பீடத்தில் ஸ்ரீ சங்கர குருவே முதல் ஆசார்யராக இருந்தார், (இறுதியில்) காமாக்ஷியினிடம் ஐக்யமானார். அவரது உத்தரவுபடி ஸுரேச்வரரின் வழிகாட்டுதலில் ஸர்வஜ்ஞாத்மா இங்கு (அடுத்த) ஆசார்யராக ஆனார்.
सेन्द्रा सरस्वतीत्याख्या योग-पट्टः प्रकीर्तिता ।
सर्वज्ञात्मन आरभ्य तच्छिष्याणां महात्मनाम् ॥ ८ ॥
ஸர்வஜ்ஞாத்மா முதல் அவரது சிஷ்ய பரம்பரையில் வந்த மஹாத்மாக்களுக்கு இந்த்ர ஸரஸ்வதீ என்ற பெயர் யோகபட்டமாக அமைந்தது. (ஸர்வஜ்ஞாத்மேந்த்ரஸரஸ்வதீ என்றவாறு அமையும்.)
कामकोटि-पीठ-पारम्पर्यं गुरुवराश्रयम् ।
स्मरामि सम्प्रदायोक्तं स्मरतां चित्त-शुद्धि-दम् ॥ ९ ॥
உத்தமமான குருமார்களைக் கொண்டதும், நினைப்பவர்களுக்கு சித்தசுத்தியை அளிப்பதுமான காமகோடி பீட (ஆசார்ய) பரம்பரையை ஸம்ப்ரதாயப்படி சொல்லப்பட்டபடி நான் நினைவில் கொள்கிறேன். (இதன் பிறகு பெயர்கள் க்ரமப்படி சொல்லப்படுகின்றன.)
(१-५) आदिमः शङ्कराचार्यः सुरेश्वर-महामनाः ।
सर्वज्ञात्मा सत्यबोधो ज्ञानानन्द-मुनीश्वरः ॥ १० ॥
ஸ்ரீ ஆதி சங்கரர், மஹாத்மாவான ஸுரேச்வரர், ஸர்வஜ்ஞாத்மா, ஸத்யபோதர், சிறந்த முனிவரான ஜ்ஞானானந்தர்,
(६-१०) शुद्धानन्दानन्दज्ञानौ कैवल्यानन्द-मस्करी ।
कृपा-शङ्कर आचार्यो विश्वरूप-सुरेश्वरः ॥ ११ ॥
சுத்தானந்தர், ஆனந்தஜ்ஞானர், முற்றும் துறந்த கைவல்யானந்தர், க்ருபா சங்கரர் என்ற ஆசார்யர், விச்வரூப ஸுரேச்வரர்,
(११-१३) शिवानन्द-चिद्घनश्च सार्वभौम-व्रती ततः ।
चन्द्रशेखरश्च काष्ठ-मौनी सच्चिद्घनो महान् ॥ १२ ॥
சிவானந்த சித்கனர், ஸார்வபௌம வ்ரதம் மேற்கொண்ட சந்த்ரசேகரர், காஷ்ட மௌனமே அனுஷ்டித்த மஹானான ஸச்சித்கனர்,
(१४-१६) भैरव-जिद् विद्याघनो गङ्गाधरश्च गीष्पतिः ।
उज्ज्वलः शङ्करेन्द्रश्च महायतिरिति स्तुतः ॥ १३ ॥
பைரவரையே அடக்கிய வித்யாகனர், சிறந்த கல்விமானான கங்காதரர், மஹாயதி என்று புகழ்பெற்று மிகப்பொலிவுடன் விளங்கிய உஜ்ஜ்வல சங்கரர்,
(१७-२०) गौडः सदाशिवेन्द्रश्च श्री-सुरेन्द्र-सरस्वती ।
मार्तण्ड-विद्याघनश्च मूक-शङ्कर-सद्गुरुः ॥ १४ ॥
கௌட ஸதாசிவர், ஸுரேந்த்ர ஸரஸ்வதீ, (ஸூர்யனை உபாஸித்த) மார்த்தண்ட வித்யாகனர், மூக சங்கரர் என்ற ஸத்குரு,
(२१-२४) जाह्नवी-चन्द्रचूडश्च परिपूर्णबोध-यतिः ।
सच्चित्सुखो धर्म-गोप्ता कोङ्कण-स्थश्च चित्सुखः ॥ १५ ॥
(கங்கைக் கரையிலேயே வஸித்து ஸித்தியடைந்த) ஜாஹ்நவீ சந்த்ரசூடர், புலன்களை அடக்கிய பரிபூர்ணபோதர், தர்மத்தைக் கட்டிக்காப்பாற்றிய ஸச்சித்ஸுகர், கொங்கண தேசத்திலேயே இருந்து ஸித்தியடைந்த சித்ஸுகர்,
(२५-२९) सिद्धिमान् सच्चिदानन्दघनः प्रज्ञाघनस्ततः ।
चिद्विलासो महादेवः पूर्णबोध-गुरुस्ततः ॥ १६ ॥
பல ஸித்திகள் கொண்ட ஸச்சிதானந்தகனர், அடுத்து ப்ரஜ்ஞாகனர், சித்விலாஸர், மஹாதேவர், அடுத்து பூர்ணபோதர் என்ற குரு,
(३०-३३) बोधो भक्तियोगी शीलनिधिर्-ब्रह्मानन्दघनः ।
चिदानन्दघनः सच्चिदानन्दघन-वाक्पतिः ॥ १७ ॥
பக்தியோகத்தைப் பரப்பிய போதேந்த்ர ஸரஸ்வதீ, (உயர்சீலங்களின் இருப்பிடமாக இருந்ததால்) சீலநிதி எனப்பட்ட ப்ரஹ்மானந்தகனர், சிதானந்தகனர், பல மொழிகள் அறிந்திருந்த ஸச்சிதானந்தகனர்,
(३४-३७) चन्द्रशेखरः परिव्राड् बहुरूपश्च चित्सुखः ।
चित्सुखानन्द-यतिराड् विद्याघन-वशी ततः ॥ १८ ॥
எப்பொழுதும் (சிஷ்யர்கள் நலனுக்காக) ஸஞ்சரித்து வந்த சந்த்ரசேகரர், பல உருவங்கள் ஏற்க வல்லவரான பஹுரூப சித்ஸுகர், யதிகளுள் சிறந்த சித்ஸுகானந்தர், அனைவரையும் கவர்ந்த வித்யாகனர்,
(३८-४०) शङ्करोऽभिनवो धीर-शङ्करेन्द्र-सरस्वती ।
पूज्यः सच्चिद्विलासश्च महादेवश्च शोभनः ॥ १९ ॥
அபிநவ சங்கரர் எனப்பட்ட தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதீ, மதிக்கத்தக்க ஸச்சித்விலாஸர், (மிகுந்த வனப்புடையவரான) சோபன மஹாதேவர்,
(४१-४४.५) गङ्गाधरो मन्त्रविच्च ब्रह्मानन्दघनो गुरुः ।
आनन्दघनश्च पूर्णबोधस्तस्माद् …
மந்த்ர சக்தி மிகுந்த கங்காதரர், ப்ரஹ்மானந்தகனர் என்ற குரு, ஆனந்தகனர், பூர்ணபோதர், அடுத்து …
… गुहा-गृहः ॥ २० ॥
(४५-४८) परमशिवो बोधश्च सान्द्रानन्दोऽथ हैमजित् ।
श्री-चन्द्रशेखरोऽद्वैतानन्दबोधः शिवात्मकः ॥ २१ ॥
குஹைகளிலேயே வஸித்த பரமசிவர், ஸாந்த்ரானந்த போதர், அடுத்து (வேதத்தை எதிர்த்தவரான) ஹைமாசார்யரை வென்ற சந்த்ரசேகரர், (சிதம்பரத்தில்) சிவனிடம் ஐக்யமான அத்வைதானந்த போதர்,
(४९-५१) महादेव-चन्द्रचूडौ दुर्गा-होम-प्रवर्तकौ ।
विद्यारण्य-गुरुः श्री-विद्यातीर्थेन्द्र-सरस्वती ॥ २२ ॥
(பல கோடி) துர்கா ஹோமங்கள் செய்வித்த மஹாதேவரும் (அவரது சிஷ்யர்) சந்த்ரசூடரும், வித்யாரண்யரின் குருவான வித்யாதீர்த்தேந்த்ர ஸரஸ்வதீ,
(५२-५५) शङ्करानन्दो धीमांश्च पूर्णानन्द-सदाशिवः ।
व्यासाचल-महादेवश्चन्द्रचूड-यतिस्ततः ॥ २३ ॥
சிறந்த அறிவாளியான சங்கரானந்தர், பூர்ணானந்த ஸதாசிவர், வ்யாஸாசல மஹாதேவர், அடுத்து சந்த்ரசூடர் என்ற துறவி,
(५६-५७) श्री-सदाशिव-बोधेन्द्रो द्वितीयः परमः शिवः ।
सदाशिव-श्री-ब्रह्मेन्द्र-सरस्वत्या गुरुस्तु यः ॥ २४ ॥
ஸதாசிவ போதர், ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரர் எனப்பட்ட ஸதாசிவேந்த்ர ஸரஸ்வதியின் குருவான இரண்டாவது பரமசிவர்,
(५८-६१) विश्वाधिक आत्मबोधो बोधो भगवन्नाम-दः ।
अद्वैतात्मप्रकाशश्च महादेवश्च पर्ण-भुक् ॥ २५ ॥
விச்வாதிகர் எனப்பட்ட ஆத்மபோதர், (மோக்ஷத்திற்கு வழியாக) பகவந்நாமத்தைக் கொடுத்த போதேந்த்ர ஸரஸ்வதீ, அத்வைதாத்ம ப்ரகாசர், (காய்ந்த) இலைகளையே புசித்து வந்த மஹாதேவர்,
(६२-६४) शिव-गीति-मालिका-कृच्चन्द्रशेखर-देशिकः ।
धर्मवाक्च महादेव उत्तरश्चन्द्रशेखरः ॥ २६ ॥
(சிவாஷ்டபதீ எனப்பட்ட) சிவகீதிமாலிகையை இயற்றிய சந்த்ரசேகரர், தர்மமே உருப்பெற்றதான சொல் கொண்டவராக ப்ரஸித்திபெற்ற மஹாதேவர், அடுத்து (வடகோடி ப்ருந்தாவனத்தவரான) சந்த்ரசேகரர்,
(६५-६७.५) सुदर्शन-महादेवश्चाद्वैती चन्द्रशेखरः ।
सप्ताही च महादेवो महास्वामी ततः परः ॥ २७ ॥
(६८) परमाचार्य इत्येवं सञ्चरद्दैवम् इत्यपि ।
योगीशो विश्रुतश्चन्द्रशेखरेन्द्र-सरस्वती ॥ २८ ॥
ஸுதர்சன மஹாதேவர், அத்வைதத்தைப் பரப்பிய சந்த்ரசேகரர், ஒரு வாரத்திலேயே ஸித்தியடைந்த மஹாதேவர், அவருக்கு அடுத்து மஹாஸ்வாமி என்றும் பரமாசார்யர் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் ப்ரஸித்தி பெற்ற யோகீச்வரரான சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ,
(६९-७०) जयेन्द्र-श्री-गुरुश्चास्मदाचार्यो मृदुरुज्ज्वलः ।
शङ्करो विजयेन्द्रश्च तच्छिष्यः संशित-व्रतः ॥ २९ ॥
(பக்தர்களிடம்) மென்மையானவரும் (தர்மத்தைக் காப்பதில்) தீவிரமானவருமான நமது ஆசார்யர் ஸ்ரீ ஜயேந்த்ர குரு, நியமங்களைக் கடைபிடிப்பதில் சிறந்த அவரது சிஷ்யர் ஸ்ரீ சங்கர விஜயேந்த்ரர்,
सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम् ।
अस्मदाचार्य-पर्यन्तां वन्दे गुरु-परम्पराम् ॥ ३० ॥
ஸ்ரீ சங்கரரை நடுநாயகமாகக் கொண்டு நமது ஆசார்யர்கள் வரையிலும் (தொடர்ந்து வந்து மேலும் தொடரும்) குரு பரம்பரையை வணங்குகிறேன்.
जयेन्द्रगुरुकृपावतः सदाशिवेन्द्रसरस्वतीसेविनः ।
श्रीगुरुचरणयोरस्तु भणितमिदं सुमान्तरं सुरभि ॥