Menu

Svastivachanam

॥ श्री-काञ्ची-कामकोटि-पीठ-स्वस्ति-वचनम् ॥

॥ श्रीः ॥

स्वस्ति श्रीमद्-अखिल-भूमण्डलालङ्कार-त्रयस्त्रिंशत्-कोटि-देवता-सेवित-श्री-कामाक्षी-देवी-सनाथ-श्रीमद्-एकाम्रनाथ-श्री-महादेवी-सनाथ-श्री-हस्तिगिरिनाथ-साक्षात्कार-परमाधिष्ठान-सत्यव्रत-नामाङ्कित-काञ्ची-दिव्य-क्षेत्रे शारदामठ-सुस्थितानाम्

अतुलित-सुधारस-माधुर्य-कमलासन-कामिनी-धम्मिल्ल-सम्फुल्ल-मल्लिका-मालिका-निःष्यन्द-मकरन्द-झरी-सौवस्तिक-वाङ्निगुम्फ-विजृम्भणानन्द-तुन्दिलित-मनीषि-मण्डलानाम्

अनवरताद्वैत-विद्या-विनोद-रसिकानां निरन्तरालङ्कृतीकृत-शान्ति-दान्ति-भूम्नाम्

सकल-भुवन-चक्र-प्रतिष्ठापक-श्रीचक्र-प्रतिष्ठा-विख्यात-यशोऽलङ्कृतानाम्

निखिल-पाषण्ड-षण्ड-कण्टकोत्पाटनेन विशदीकृत-वेद-वेदान्त-मार्ग-षण्मत-प्रतिष्ठापकाचार्याणाम्

परमहंस-परिव्राजकाचार्यवर्य-जगद्गुरु-श्रीमत्-शङ्करभगवत्पादाचार्याणाम्

अधिष्ठाने सिंहासनाभिषिक्त-श्रीमत्-चन्द्रशेखरेन्द्र-सरस्वती-श्रीपादानाम् अन्ते-वासिवर्य-श्रीमद्-जयेन्द्र-सरस्वती-श्रीपादानाम् अन्ते-वासिवर्य-श्रीमत्-शङ्कर-विजयेन्द्र-सरस्वती-श्रीपादानां चरण-नलिनयोः सप्रश्रयं साञ्जलिबन्धं च नमस्कुर्मः॥—

மங்களம்! காஞ்சீ என்னும் திவ்ய க்ஷேத்ரம் செல்வங்கள் நிறைந்தது, முழு பூமண்டலத்திற்கும் வனப்பு கூட்டுவது. முப்பத்து முக்கோடி தேவதைகளால் ஸேவிக்கப்பட்ட காமாக்ஷீ தேவி உடனாய ஏகாம்ரநாதர் மற்றும் பெருந்தேவி உடனாய வரதராஜர்களின் ப்ரத்யக்ஷ ஸாந்நித்யத்தின் உயர்ந்த ஸ்தானம் (இது). (இங்கு செய்யப்படும் நற்கருமங்கள் சிறப்பான பலன் தருபவை என்பதால்) ஸத்யவ்ரதம் என்ற பெயருடையது. (இத்தகைய புண்ய க்ஷேத்ரத்தில் ஸர்வஜ்ஞ பீடாரோஹண காலத்தில் வாதில் ஜயிக்கப்பட்டு மகிழ்ந்து அருளிய) ஶாரதா (தேவியின் பெயரைக் கொண்ட) மடத்தில் நன்கு அமர்ந்திருப்பவர் (ஆசார்யாள்).

(ஆசார்யாளின் சொற்களின் கொத்துகள்) ஒப்பற்ற அம்ருத ரஸத்தைப் போன்ற இனிமை கொண்டவை. (மேலும்) கமலத்தில் வீற்றிருக்கும் (ப்ரஹ்மாவின்) பிரியையான (ஆசார்யாள் வாக்கில் குடிகொண்டிருக்கும் ஸரஸ்வதீ தேவியின்) கூந்தல் கலாபத்தில் (சுற்றியிருக்கும்) மலர்ந்த மல்லிகை மாலைகளினின்றும் புறப்படும் மகரந்தங்களின் ப்ரவாஹம் (ஆசார்யாள் வாக்கிற்கு) முன்செல்கிறது. பரவும் (இத்தகைய வாக்கினைக் கேட்ட) ஆநந்தத்தால் அறிஞர்களின் கூட்டத்திற்கு (நிறைவாக உண்டதற்கு ஒப்பான) பூரிப்பை ஏற்படுத்தியவர் (ஆசார்யாள்).

(ஆசார்யாள்) ஓயாது அத்வைத வித்யையில் உள்ள (ஸூக்ஷ்மங்களை அநுஸந்தானம் செய்வதால் ஏற்படும் அறிவின்) மகிழ்ச்சியை ரஸிப்பவர். (ஆனால் அறிவில் மட்டும் உள்ள வித்யை ஞானமெனும் பலனை அளிக்காதாகையால் அதற்குத் துணையாக வேண்டிய) மனது மற்றும் புலன்களின் அடக்கம் (முதலிய ஆத்ம குணங்கள் தம்மிடம்) நிறைந்திருப்பதையே எப்பொழுதும் அணிகலனாகக் கொண்டவர்.

சக்ரம் போன்று (வட்டமாகக் காணப்படுவதும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய உறுப்புகளைக் கொண்டதும், எப்பொழுதும் சுற்றிக்கொண்டிருப்பதுமான) இவ்வுலகனைத்தின் க்ஷேமத்திற்கும் காரணமான (காமாக்ஷீ தேவியின் மஹத்தான சக்தியானது ஆவாஹனம் செய்யப்பெற்ற) ஶ்ரீசக்ரத்தின் ப்ரதிஷ்டையால் பரவிய புகழாலும் அலங்கரிக்கப்பட்டவர் (ஆசார்யாள்).

(அவைதிக மதங்களைப் பின்பற்றியவர்களாகிய) பாஷண்டிகளின் கூட்டங்களாம் முட்கள் அனைத்தையும் (அவர்களைத் திருத்தவோ அடக்கவோ செய்து) களைந்தவர் (ஆசார்யாள்). அதன்மூலம் சுத்தம் செய்யப்பட்ட வேத வேதாந்த பாதையில் (தூய்மையான தெய்வ வழிபாட்டிற்கான) ஷண்மதத்தைத் நிறுவிய ஆசான் (இவரே).

(மேற்கூறிய குணச்சிறப்புகள் மட்டுமின்றி ஸந்ந்யாஸிகளுக்குள் சிறந்தவர்களான) பரமஹம்ஸ ஸந்ந்யாஸிகளுக்கு உத்தம வழிகாட்டியானவரும் (அவர்களுக்கு மட்டுமின்றி) உலகுக்கே குருவானவரும் (முற்கூறிய அத்வைத வித்யை மற்றும் ஆத்மகுணங்கள் என்னும்) செல்வமுடையவரும் (உலகுக்கெல்லாம் நன்மை செய்பவர் என்ற பொருள் கொண்ட) ஶங்கரர் (என்ற பெயர் மட்டுமின்றி அத்தகைய மஹிமையும் கொண்டவரும்) பகவானைக் (காட்டிலும் வேறல்லாதவரும்) பக்தர்களால் அண்டப்படுபவரும் (ஜகத்குரு என்றால் உபதேசிப்பது மட்டும் என்றின்றி தாமே அவ்வழிநின்று) நடத்திக்காட்டுபவருமானவர் (ஆசார்யாள்).

(இத்தகைய பகவத்பாதரின்) நிலைப்பிடமாகிய (காஞ்சீ காமகோடி ஸர்வஜ்ஞ பீடம் மற்றும் ஶாரதா மடத்தில் தர்ம) ஸிம்ஹாஸனத்தில் (பீடாதிபதியாக) அபிஷேகம் செய்விக்கப்பட்ட __ என்ற சிறந்த துறவியின் முதன்மையான சீடரான __ என்ற பெரியோரின் திருவடித் தாமரைகள் (முன்) பக்தியுடனும் கைகளைக் கூப்பியும் வணங்குகிறோம்.