Menu

Totakashtakam

॥ तोटकाष्टकम् ॥

विदिताखिल-शास्त्र-सुधा-जलधे महितोपनिषत्-कथितार्थ-निधे ।
हृदये कलये विमलं चरणं भव शङ्कर देशिक मे शरणम् ॥ १ ॥

करुणा-वरुणालय पालय मां भव-सागर-दुःख-विदून-हृदम् ।
रचयाखिल-दर्शन-तत्त्व-विदं भव शङ्कर देशिक मे शरणम् ॥ २ ॥

भवता जनता सुहिता भविता निज-बोध-विचारण-चारु-मते ।
कलयेश्वर-जीव-विवेक-विदं भव शङ्कर देशिक मे शरणम् ॥ ३ ॥

भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता ।
मम वारय मोह-महा-जलधिं भव शङ्कर देशिक मे शरणम् ॥ ४ ॥

सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता सम-दर्शन-लालसता ।
अतिदीनमिमं परिपालय मां भव शङ्कर देशिक मे शरणम् ॥ ५ ॥

जगतीमवितुं कलिताकृतयो विचरन्ति महा-महसश्छलतः ।
अहिमांशुरिवात्र विभासि पुरो1 भव शङ्कर देशिक मे शरणम् ॥ ६ ॥

गुरु-पुङ्गव पुङ्गव-केतन ते समतामयतां न हि कोऽपि सुधीः ।
शरणागत-वत्सल तत्त्व-निधे भव शङ्कर देशिक मे शरणम् ॥ ७ ॥

विदिता न मया विशदैक-कला न च किञ्चन काञ्चनमस्ति गुरो ।
द्रुतमेव विधेहि कृपां सहजां भव शङ्कर देशिक मे शरणम् ॥ ८ ॥

சாஸ்த்ரமாகிய அமுதக்கடல் முழுதும் அறிந்தவரே! உயர்ந்த உபநிஷத் கூறிய பொருள்களுக்கு நிதியே! (உமது) மாசற்ற திருவடியை (என்) ஹ்ருதயத்தில் த்யானிக்கிறேன். சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

கருணைக்கடலே! ஸம்ஸாரமெனும் கடலிலுள்ள துக்கத்தால் தவித்த இதயத்தைக் கொண்ட என்னைக் காப்பாற்றும்! (மோக்ஷத்தை போதிக்கும்) அனைத்து சாத்திரங்களின் தத்துவத்தை அறிந்தவனாக (என்னை) ஆக்குவீர்! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

தன்னை அறிவது (எங்ஙனம் என்று) விசாரிக்கும் பக்குவமான புத்தி படைத்தவரே! உம்மால் (தான்) மக்கள் நல்வழியில் வைக்கப்படுவார்கள். (என்னை) ஈசனுக்கும் ஜீவனுக்குமான பாகுபாட்டை அறிந்தவனாக ஆக்குவீர்! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

நீர் சிவனார் தான் என்ற தீவிர உத்ஸாஹம் எனது மனதில் தோன்றிவிட்டது. என்னிடமுள்ள மோகமாகிய பெருங்கடலை நீக்குவீர். சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

மிகுந்த புண்ணியம் செய்தால் தான் நீர் கூறியபடி (அனைத்தையும் ஒன்றாகிய பரம்பொருளாக) ஸமமாக பார்க்கும் ஆர்வம் ஏற்படும். மிகவும் நலிவுற்ற இந்த (ஸ்திதியில் இருக்கும்) என்னைக் காப்பாற்றுவீர்! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

மஹாதேஜஸ்விகளான (எத்தனையோ மஹான்கள் ஏதோ ஒரு) வ்யாஜம் ஏற்படுத்திக்கொண்டு உலகைக் காக்க (பல) உருவங்கள் ஏற்று ஸஞ்சரிக்கின்றார்கள். இவர்களுள் (அனைத்திலும் அதிகமான ப்ரகாசமான) ஸூர்யன் போல் என்முன் பொலிகின்றீர்! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

குருமார்களுள் சிறந்தவரே! இடபக்கொடியோனான (பரமேச்வரனே) உமக்கு எந்த பண்டிதரும் ஈடாகமுடியாது. அடைக்கலம் புகுந்தோரிடம் அன்புடையவரே! தத்துவங்களின் களஞ்சியமே! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!

நான் ஒரு கலையையும் தெளிவாக அறிந்தேனில்லேன். (என்னிடம்) செல்வம் ஸ்வல்பமும் கிடையாது! (ஆக உலக ரீதியில் எந்த யோக்யதையும் அற்ற என்னிடம்) உமது இயல்பான கருணையை சீக்கிரமே காட்டுவீர்! சங்கர குருவே! எனக்கு அடைக்கலமாவீர்!


  1. மூன்றாவது பாதத்தில் विभासि गुरो என்ற பாடமும் உண்டு. ↩︎